Tag Archives: இமெயில்

பேஸ்புக்கால் இணைந்த குடும்பம்

37 ஆண்டுகளுக்கு பின் தந்தை மகனும் ஒன்றிணைந்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம்தானே. அதைவிட ஆச்சரியம் கடந்த 37 ஆண்டுகளாக பரஸ்பரம் தேடிக்கொண்டிருந்த இந்த இருவரும் வலை பின்னல் தளமான பேஸ்புக் மூலம் இணைந்திருப்பதுதான். 
.
கிரஹாம் கார்பட் மற்றும் அவரது மகனான ஸ்பியர்ஸ் கார்பட் ஒன்றிணைந்த விதம் தமிழ் சினிமாவில் அவ்வப்போது பார்க்கக்கூடிய தந்தை  மகன் தேடல் கதையை விட மிகவும் சுவாரஸ்யமானது, நெகிழ்ச்சியானது.  ஸ்பியர்ஸ் கார்பட்டுக்கு தற்போது 39 வயதாகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ஒரே லட்சியம் தன்னுடைய தந்தையை தேடி கண்டுபிடிப்பதுதான். 37 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஸ்பியர்ஸ் 2 வயது குழந்தையாக இருந்தபோது அவரது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு நினைவு தெரிந்த நாள் முதலாக ஸ்பியர்ஸ் தன்னுடைய தந்தையை சந்திக்க விரும்பியிருக்கிறார். என்றாவது ஒருநாள் அப்பாவை பார்த்துவிட முடியும் என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்போடு தேடல் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார். சமீப காலமாக இன்டர்நெட் மூலமும் அவர் தந்தையை தேடியிருக்கிறார். இந்த முயற்சியில் எந்தவிதமான பயனும் கிடைக்காத நிலையிலும் அவர் மனந்தளராமல் தனது தேடலை தொடர்ந்திருக்கிறார்.

தற்போது இன்டர்நெட்டில் பிரபலமான விலாசமாக இருக்கும் பேஸ் புக் வலைப்பின்னல் தளத்தில் பெரும்பாலானோருக்கு சொந்த பக்கம் இருப்பதை உணர்ந்திருந்த ஸ்பியர்ஸ் பேஸ்புக் தளத்திலும் தன்னுடைய தந்தை பற்றிய தகவல்களை தேடியிருக்கிறார்.

தந்தையின் பெயரை டைப் செய்து விட்டு படபடக்கும் இதயத்தோடு தேடல் முடிவுகளை ஆராய்ந்த அவருக்கு இதுவரை ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் ஒருநாள் பொறி தட்டி தந்தையின் பெயரில் ஒரு மாற்றத்தை செய்து தேடியிருக்கிறார். இது வரை ஸ்பியர்ஸ் எனும் பெயரை தந்தையுடன் சேர்த்து தேடிய அவர் இப்போது கிரஹாம் கார்பட் என தேடி பார்த்திருக்கிறார்.

இந்த தேடலின் பயனாக 15 கிரஹாம் கார்பட்டுகளின் பேஸ்புக் பக்கங்கள் வந்து நின்றிருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தபோது குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் இருந்த புகைப்படத்தை கண்டதுமே அவரது இதயம் உற்சாகத்தில் கூடுதலாக அடித்துக்கொண்டது.

அந்த புகைப்படத்தில் இருந்தவர் 30 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் எப்படி இருப்பாரோ அதே தோற்றத்தில் இருந்த அந்த மனிதரை பார்த்ததுமே அவர்தான் தனது தந்தையாக இருக்கவேண்டும் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. கண்ணில் நீர்மல்க படபடக்கும் கைகளில் அவருக்கு இமெயில் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த இமெயிலை பெற்ற கிரஹாம் கார்பட்டும் உண்மையில் நெகிழ்ந்துதான் போனார். அவரும் கடந்த பல ஆண்டுகளாக தனது மகனை பலவிதமாக தேடிக்கொண்டுதான் இருந்தார். இப்போது வந்த பேஸ்புக் செய்தி மகன் தனக்கு கிடைத்துவிட்டதை அவருக்கு உணர்த்தியது.  

இமெயில் பரிமாற்றத்திற்கு பிறகு தந்தையும் மகனும் நேரில் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது நெகிழ்ச்சியாக 3 மணி நேரத்திற்கும் மேல் அவர்கள் விளையாடி இருக்கின்றனர். ஸ்பியர்ஸ் தன்னுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளையும் கண்டு மகிழ்ந்திருக்கிறார்.  

தந்தையான கிரஹாமும் தனது பேரனை கண்டு மகிழ்ந்திருக்கிறார். இந்த சந்திப்பை ஒரு இண்டர்நெட் கால அதிசயம் என்று சொல்ல வேண்டும். பேஸ்புக் சாத்தியமாக்கிய அதிசயம்.இந்த தேடலில் பேஸ்புக் கைகொடுத்தது தற்செயலான ஒன்றா அல்லது உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் இந்த வலைப்பின்னல் சேவையின் ஆதார குணத்தினால் நிகழ்ந்ததா என்பது சிந்தனைக்குரிய கேள்வி.

இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோக்காரர்

சென்னையைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாம்ஸன் பற்றி நீங்கள் டைமஸ் அல்லது ஹிண்டு நாளிதழில் படித்திருக்கலாம்.படிக்காதவர்களுக்காக இந்த பதிவு.

சாம்ஸன் தனக்கென சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறார்.அநேகமாக ஆசியாவிலேயே இணையதளம் வைத்திருக்கும் ஒரே ஆட்டோ டிரைவர் என்று சாம்ஸனை சொல்லலாம்.ஏன் உலகிலேயே கூட இவர் ஒருவராக தான் இருக்க வேண்டும்.கூகுலில் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோ டிரைவர் என்று தேடிப்பார்த்தால் சாம்சன் தான் முதலில் வருகிறார். வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை.

அப்படியே இருந்தாலும் சாம்ஸனின் சிறப்பு ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை.

இண்டெர்நெட்டை அவ‌ர் த‌ன‌து தொழிலை மேம்ப‌டுத்திக்கொள்ள‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தே பாராட்ட‌த்த‌க்க‌து.அதோடு ஆட்டோ டிரைவ‌ர் ஒருவ‌ர் இண்டெர்நெட்டின் அருமையை உண‌ர்ந்திருப்ப‌தும் இணைய‌த‌ள‌ம் மூல‌ம் த‌ன‌க்கான‌ வாடிக்கையாள‌ர்க‌ளை தேடிக்கொள்வ‌தும் ந‌ல்ல‌ விஷ‌ய‌ம் தானே.
சாம்ஸ‌னின் இணைய‌த‌ள‌ம் எந்த‌வித‌ அல‌ங்கார‌மும் இல்லாம‌ல் எளிமையாக‌ இருக்கிற‌து.சுய‌புராண‌த்துக்கு இட‌ம் கொடுக்காம‌ல் த‌ன்னைப்ப‌ற்றி சுருக்க‌மாக‌ அறிமுக‌ம் செய்து கொள்ளும் சாம்ஸ‌ன் பாதுகாப்பான‌ ஆட்டோ ப‌யண‌த்திற்கு த‌ன்னை நாட‌லாம் என்று குறிப்பிட்டுள்ளார்.நுங்கம்பாக்கம் தாஜ் ஓட்டல் வாசலில் தனது ஸ்டான்ட் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை ந‌க‌ரை த‌ன‌க்கு ந‌ன்றாக‌த்தெரியும் என்று பெருமைபட்டுக்கொள்ளும் அவ‌ர் ந‌ல்ல‌ ஒட்ட‌லில் இருந்து ந‌ல்ல‌ க‌டைக‌ள் வ‌ரை எல்லாவ‌ற்றுக்கும் அழைத்துச்செல்வேன் என்று அழைப்பு விடுக்கிறார்.அதே நேர‌த்தில் டாக்சியை விட‌ ஆட்டோ ம‌லிவான‌து என்றும் பெருமைப்ப‌ட்டுக்கொள்கிறார்.
முக‌ப்பு ப‌க்க‌த்தின் மைய‌த்தில் இப்ப‌டி ர‌த்தின‌ச்சுருக்க‌மாக‌ அறிமுக‌ம் செய்து கொள்ப‌வ‌ர் அருகே கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ த‌லைப்புகளில் ந‌க‌ர‌ச்சுற்றி பார்ப்ப‌து, த‌ன‌து ந‌ண்ப‌ர்க‌ள்,ஷாப்பிங் ப‌ற்றியெல்லாம் குறிப்பிடுகிறார். எல்லாமே சுருக்க‌மாக‌த்தான்.

அவரைப்பற்றி வாடிக்கயாள‌ர்க‌ள் கூறியவை த‌னித‌லைப்பில் இட‌ம்பெறுகிற‌து.அவ‌ரை தொட‌ர்பு கொள‌வ‌த‌ற்கான‌ இமெயில் முக‌வ‌ரியும் கொடுக்கப்ப‌ட்டுள்ள‌து.

இந்திய‌ வ‌ருகை த‌ரும் வெளிநாட்டு ப‌ய‌ணிக‌ள் முன்கூட்டியே எல்லாவ‌ற்றையும் திட்ட‌மிடும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் என்ப‌தால் சென்னைக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் இந்த‌ த‌ள‌த்தின் மூல‌மே சாம்ஸ‌னை புக் செய்து கொள்ள‌ வாய்ப்புள்ள‌து.வெளிநாட்டு ப‌ய‌ணிகளுக்கும் இது ந‌ம்பிக்கையான‌து.
ப‌ல‌ ப‌ய‌ணிக‌ள் இப்ப‌டி இணைய‌த‌ள‌த்தின் மூல‌ம் த‌ன்னை நாடுவ‌தாக‌ சாம்ஸ‌ன் கூறியுள்ளார்.

எல்லாம் ச‌ரி சாம்ஸ‌னின் இந்த‌ இணைய‌ ப‌ய‌ண‌ம் எப்ப‌டி துவ‌ங்கிய‌து.சில‌ ஆண்டுக‌ளூக்கு முன் ஜ‌ப்பானிய‌ ப‌யணி ஒருவ‌ர் சாம்ஸ‌னுக்கு இமெயில் முக‌வ‌ரியை உருவாக்கித்த‌ந்துள்ளார்.அத‌ பிற‌கு ம‌ற்றொரு வெளிநாட்டு ப‌ய‌ணி அவ‌ரது இணைய‌த‌ள‌த்தை வ‌டிவ‌மைத்து த‌ந்துள்ளார்.இன்னொருவ‌ர் அவ‌ருக்கு லேப்டாப்பை ப‌ரிச‌ளித்துள்ளார்.

இப்போது சாம்ஸ‌ன் த‌ன‌து இணைய‌த‌ள‌த்தால் மிக‌வும் பிஸியாக் இருக்கிறார்.
சாவாரியைத்தேடி ஓடி அலையாம‌ல் இணைய‌ம் மூல‌மே அவ‌ர் ச‌ர்வ‌தேச‌ வாடிகாகையாள‌ர்க‌ளை க‌வ‌ர்ந்திழுத்து கொண்டிருக்கிறார்.
சாம்ஸ‌னின் இணைய‌ முக‌வ‌ரி. ட‌க் டாஸ்டிக் டாட் காம்.வெளிநாடு ப‌ய‌ணிக‌ள் ஆட்டோவை ட‌க் ட‌க் என்றே  குறிப்பிடுவதால் இந்த‌ பெய‌ராம்.
 —-

http://www.tuktastic.com/index.htm

இமெயிலுக்கு ஒரு முகமுடி

இணையம் இப்போது பூட்டுகள் நிறைந்த இடமாக மாறிக்கொண்டிருக்கிறது.அந்த பூட்டுகளை திறக்க இமெயில் சாவியை பய்னப‌டுத்த வேண்டியிருக்கிற‌து. பிரபலமான சேவைகள் அல்லது இணையதளங்களை பயன்படுத்தும் அனுமதியை பெற இமெயில் முகவரியை சமர்பிக்க வேன்டியிருக்கிறது.இவ்வளவு ஏன் வலைப்பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் அளிக்க வேண்டியிருந்தாலும் இமெயில் முகவரி தேவைப்படுகிற‌து. நம்பகமான தளங்கள் என்றால் இமெயில் சமர்பிப்பதில் எந்த பிரச்ச்னையும் இல்லை. ஆனால் ஒரு சில தளங்களில் இமெயில் முகவரியை தர தயக்கம் ஏற்படலாம்.இது போன்ற நேரங்களில் குறிப்பிட்ட தளம் அல்லது சேவையை பயன்படுத்த முடியாமல் போகலாம். இமெயில் முக‌வ‌ரியை சம‌ர்பிப்ப‌தில் இன்னோரு பிர‌ச்ச‌னையும் இருக்கிற‌து.இமெயில் முக‌வ‌ரியை தருவ‌து என்ப‌து திற‌ந்த‌வெளியில் ப‌ன‌த்தை வைப்ப‌து போல‌ தான்.அது க‌ள‌வாட‌ப்ப‌டும் வாய்ப்பு இருக்க‌வே செய்கிற‌து.இப்ப‌டி ச‌ம‌ர்பிக்க‌ப்ப‌டும் இமெயில்க‌ளை கொத்திச்செல்வ‌தற்காக‌ என்றே பாட்க‌ள் என்று சொல்ல‌ப்ப‌டும் குட்டி ரோபோக்க‌ள் இணைய‌த்தில் உலாவிக்கொண்டிருக்கின்ற‌ன‌. அத‌ன் பிற‌கு உங்க‌ளுக்கு அழையா மெயில்க‌ளை அனுப்பி வைக்கும்.உங்க‌ள் முக‌வ‌ரி பெட்டியில் அடிக்க‌டு வ‌ந்து சேரும் எரிச்ச‌லூட்டும் வியாபார‌ ,விள‌ம்ப‌ர‌ மெயில்க‌ள் வ‌ந்து சேருவ‌து இப்ப‌டி தான். இந்த‌ பிர‌ச்ச‌னைக்கு அழ‌கான‌ ஒரு தீர்வு இருக்கிற‌து.http://scr.iம்/ இணைய‌த‌ள‌ம் அந்த‌ தீர்வை வ‌ழ‌ங்குகிற‌து.இமெயில் கோரும் எந்த‌ சேவையும் ப‌ய‌ன்ப‌டுத்தும் முன் இந்த‌ த‌ள‌த்திற்கு சென்று உங்க‌ள் இமெயிலை ச‌ம‌ர்பிக்க‌ வேண்டும்.உட‌னே அந்த‌ முக‌வ‌ரியை யாரும் ப‌டிக்க‌ முடியாத குறிச்சொற்க‌ளாக‌ மாற்றிவிடும். இனி இமெயிலுக்கு ப‌திலாக‌ இந்த‌ குறிச்சொற்க‌ளை ச‌ம‌ர்பிக்க‌லாம்.இவ்வாறு செய்வ‌த‌ன் மூல‌ம் உங்க‌ள் இமெயில் பாதுகாப்பான‌தாக‌ இருக்கும்.குறிச்சொற்க‌ள் மூடிய‌ இந்த‌ இமெயிலை ரோபோக்க‌ள் ப‌டிக்க‌ முடியாது.அவ‌ற்றோடு கேட்க‌ப்ப‌டும் ர‌க‌சிய‌ கேள்விக்கு ப‌தில் அளிக்கும் ந‌ப‌ர்கள் ம‌ட்டுமே இத‌னை ப‌டிக்க‌ முடியும். சூவ‌ர்ஸ்ய‌மான‌ சேவை;முய‌ற்சித்து பார்க்க‌லாம்.

————

link;http://scr.im/

கொடுத்த‌தை கேட்க‌ ஒரு இணைய‌த‌ள‌ம்

இணையதளங்களுக்கு பெயரிடுவது ஒரு கலை.சூட்டப்படும் பெயரானது பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் கவனத்தை ஈர்க்கும் படியும் இருக்க வேண்டும்.அப்படியே கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை;மையக்கருவுக்கு நெருக்கமானதாக இருந்தால் போதும்.

‘ரிட்டன் மை பேன்ட்’ இணையதளம் இந்த ரகத்தைச்சேர்ந்தது தான்.என் பேன்டை திருப்பிக்கொடுக்கவும் என்னும் பொருள் தரும் இந்த தளத்தின் பெயரை முதன்முதலில் கேள்விப்படும் போது விவகாரமான தளமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படலாம்.ஆனால் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான தளம் இது.

கொடுத்ததையும் கொடுக்க வேண்டியதையும் நினைவு படுத்தும் தளம் இது.அதாவது கடனாக கொடுத்தவற்றையும் மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கியவற்றையும் உரிய‌ நேர‌த்தில் நினைவு ப‌டுத்தும் சேவையை வ‌ழ‌ங்கும் த‌ள‌ம்.

கைமாத்தாக‌ ஐம்ப‌தோ நூறோ வாங்குவ‌தை த‌விர‌ சி டி,புத்த‌க‌ம்,சூட்கேஸ்,செல்போன் சார்ஜ‌ர் என‌ ப‌ல‌வ‌ற்றை நாம் இர‌வ‌ல் வாங்குவ‌து உண்டு.ந‌ம்மிட‌ம் இருந்தும் ந‌ண்ப‌ர்க‌ளும் தெரிந்த‌வ‌ர்க‌ளும் இர‌வ‌ல் வாங்குவ‌துண்டு.தேவை ம‌ற்றும் அவ‌ச‌ர‌ம் க‌ருதி பொருட்க‌ளை வாங்கும் ஆர்வ‌மும் வேக‌மும் திருப்பித்த‌ருவ‌தில் இருப்ப‌தில்லை.சோம்ப‌ல், ம‌ற‌தி என‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளால் பிற‌ரிட‌ம் வாங்கிய‌ பொருட்க‌ள் மீண்டும் வ‌ந்து சேராம‌ல் போவ‌து சர்வ‌ சாத‌ர‌ண‌மாக‌ நிக‌ழ்வ‌து தான்.

சில‌ நேர‌ங்க‌ளில் கொடுத்த‌வ‌ர்க‌ளே கூட‌ அவ‌ற்றை ம‌ற‌ந்து விடுவ‌துண்டு.

இப்ப‌டி ம‌ற‌க்காம‌ல் இருக்க‌ உத‌வும் த‌ள‌ம் தான் ‘ரிட்டன் மை பேன்ட்’.இத‌னை இந்த‌ த‌ள‌ம் நிறைவேற்றும் வித‌மும் எளிமையான‌து.குழ‌ப்ப‌ம் இல்லாத‌து.

எடுக்காவா கோர்க்க‌வா என‌ க‌ர்ண‌ன் கேட்ட‌து போல‌ இந்த‌ த‌ள‌ம் நீங்க‌ள் கொடுக்கப்போகிறீர்க‌ளா? வாங்க‌ப்போகிறீர்க‌ளா? என்று முக‌ப்பு ப‌க்க‌த்தில் இந்த‌ தள‌ம் கேட்கிற‌து.

நீங்க‌ள் க‌ட‌ன் வாங்க‌ப்போகிறீர்க‌ள் என்றால் அத‌ற்கான‌ ப‌குதியை கிளிக் செய்ய‌ வேண்டும் அத‌ன் பிற‌கு யாரிட‌ம் இருந்து எந்த‌ பொருளை எத்த‌னை நாட்க‌ளுக்கு வாங்க‌ போகிறீர்க‌ள் என்று குறிப்பிட‌ வேண்டும் ஒரு விண்ண‌ப்ப‌ ப‌டிவ‌ம் போல‌ இத‌ற்கான‌ க‌ட்ட‌ங்க‌ள் உண்டு.கூட‌வே உங்க‌ள் பெய‌ர் ம‌ற்றும் பொருளின் விவ‌ர‌த்தை குறிப்பிட்டு விட்டால் போதும்.

அத‌ன் பிற‌கு கெடு முடியும் போது இமெயில் மூல‌ம் நினைவுப‌டுத்த‌ப்ப‌டும். இதே போல‌ நீங்க‌ள் யாருக்காவ‌து பொருளை கொடுத்தாலும் அத‌ன் விவ‌ர‌ங்க‌ளை ச‌ம‌ர்பித்தால் உரிய‌ நேர‌த்தில் இமெயில் நினைவூட்ட‌ல் நண்ப‌ருக்கு அனுப்பி வைக்க‌ப்ப‌டும்.

இப்ப‌டியாக‌ க‌ட‌ன் வாங்கிய‌ அல்ல‌து கொடுத்த‌ பொருளை க‌வன‌த்தில் கொள்ள‌லாம்.நீங்க‌ளும் ந‌ண்ப‌ரும் இதில் உருப்பின‌ராக இருக்கும் ப‌ட்ச‌த்தில் இந்த‌ த‌ள‌ம் மேலும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.

எப்ப‌டியோ ந‌டைமுறை சார்ந்த‌ சுவார்ஸ்ய‌மான‌ ப‌ய‌னுள்ள‌ இணைய‌ சேவைக‌ளின் வ‌ரிசையில் இத‌னையும் சேர்த்துக்கொள்ள‌லாம்.

———

link;
http://returnmypants.com/

கடிதங்களுக்கு ஒரு இணையதளம்

இது இமெயில் யுகம்.என‌வே கடிதங்களுக்கு அதிகம் வேலையில்லை.ஹாய் என் ஆரம்பித்து இரண்டு மூன்று வரிகளில் விஷயத்தை சொல்லி இமெயில் அனுப்பி விடலாம். இலக்கணம் பற்றியோ கடித நாகரீகம் பற்றியோ அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் எழுச்சிக்குப்பின் இமெயிலின் நிலையே கவலக்கிடமாக ஆகி வருவதாக ஒரு கருத்து வலுப்பெற்று வருவது ஒரு புறம் இருக்கட்டும்.இன்றைய நிலையிலும் கடிதம் எழுதும் தேவை ஏற்படும் தருணங்கள் இல்லாமல் இல்லை.

வேலை தேடுபவர்கள் விண்ணப்ப படிவத்தோடு அறிமுக கடிதம் எழுத வேண்டும்.வரிச்சலுகை கோர கடிதம் எழுதி தர வேண்டும்.இவ்வள‌வு ஏன் செல்போன் இணைப்பு மாற்றம் அல்லது பில்லிங் தொடர்பான சந்தேகம் எனறால் கூட ஃபார்மலா ஒரு கடிதம் கொடுங்க‌ளேன் என்று கேட்கப்படலாம்.

இப்படி இன்னும் கூட பல நேரங்களில் கடைதம் எழுதும் தேவை இருக்கவே செய்கிறது.கொஞம் ஆர்வம் உள்ளவர் என்றால் அமெரிக்க அதிபருக்கோ அல்லது இங்கிலாந்து மகாராணிக்கோ உலக நடப்பு குறித்து கடிதம் எழுத விரும்பலாம்.

பலருக்கு அலுவல் நிமித்தமாக கடிதம் எழுதும் நிர்பந்தமும் ஏற்படலாம் என்பது மட்டுமல்ல இந்த வகை கடிதங்களை எழுதுவதற்கு என்று ஒரு முறை உள்ளது.ஒரு இலக்கணம் இருக்கிற‌து.அதோடு ஆங்கில புலமையும் தேவவைப்படும்.

ஒரு கடிதத்தை எப்படி துவங்குவதில் இருந்து என்ன மாதிரியான வாசகங்களை போடுவது என்பது வரை பல நுட்பமான அம்சங்கள் ஒரு நல்ல கடிதத்தின் பின்னே இருக்கிறது.அதோடு முகவரியை எங்கே குறிப்பிடுவது ,கடிதம் பெறுபவரை எப்படி விளிப்பது போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்.

இத்தகைய ஒரு நிலை உங்களுக்கு ஏற்பட்டு நல்ல கடிதத்திற்கான வடிவம் பிடிபடாமல் நீங்கள் தடுமாற நேரிட்டால் உங்களுக்கு வழிகாட்ட ‘நைஸ்லெட்டர்.காம்’ இணையதளம் இருக்கவே இருக்கிறது.

கடிதம் எழுதும் தேவை உள்ளவர்கள் இந்த தளத்தில் நுழைந்துவிடால் போதும் சுலபமாக எல்லா வகையான கடிதங்களையும் எழுதிக்கொள்ளலாம்.

அடிப்படையில் கடிதம் எழுதுவதற்கான செயலி என்று இதனை கொள்ளலாம்.இதன் மூலம் கடிதம் எழுதுவது இமெயில் அனுபவது போல மிகவும் சுலபமானது.

தளத்தின் முக‌ப்பு பக்கத்தில் உள்ள கடித படிவத்தில் பெயர்,நாள்,பெறுபவர் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்துவீட்டு அதன் கீழே கொடுக்கபடுள்ள இடத்தில் விவரத்தை டைப் செய்தால் போதும் கடிதம் ரெடி.மற்றபடி வடிவம் முறை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.ஒரே கிளிக்கில் கடிதம் அதற்குறிய வடிவில் தயாராகிவிடும்.அப்படியே டவுண்லோடு செய்யாலாம். அல்லது நம் கம்ப்யூட்டரில் மாற்றிக்கொள்ளலாம்.

கடித வடிவம் மட்டுமல்ல எழுதுவதே தகாராறு என்றாலும் கவலை வேண்டாம். இந்த தலத்திலேயே பல மாதிரி கடிதங்கள் உள்ளன. அவற்றை தேர்வு செய்து கொண்டு பெயரை பட்டும் மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.

ராஜினாமா செய்வது முதல் வேலைக்கான நேர்க்காணலுக்கு பின் அனுப்ப வேண்டிய கடிதம் என பல விதமான கடித மாதிரிகள் உள்ளன.தேவை இருந்தாலோ அல்லது நேரம் இருந்தாலே சென்று பாருங்கள்..எளிமையான அழகான‌ பயனுள்ள‌ சேவை.

—-

http://www.niceletter.com/