மரங்களால் ஒரு இதயம்

teree1உலகம் மரங்களால் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி, அதற்காக நம்மால் முயன்றதை செய்ய வேண்டும் என்று துடிப்பவர்க ளும் சரி, கணிசமாகவே இருக்கின்றனர்.
.
இவர்களில் பெரும்பாலானோர், காடுகள் அழிக்கப்பட்டு, மரங்கள் வெட்டப்படுவதால் பூமிக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் ஆபத்தை உணர்ந்திருப்பவர்கள்.
இதனை தடுப்பதோடு, மாற்று மருந்து முயற்சியாக புதிய மரங்களை புவியெங்கும் நட வேண்டும் என்றும் விரும்புகிறவர்கள் இவர்கள்.

இத்தகைய மனிதர்களின் நல்முயற்சியால் பல இடங்களில் பல்வேறு விதமாக மரக்கன்றுகளை நட்டு பேணி பாதுகாக்கும் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
மரங்களை வளர்க்க இன்டெர்நெட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதும் நடந்து வருகிறது.
அந்த வகையில் புதிதாக வந்து சேர்ந்திருப்பதுதான் டிரிநேஷன்
(tree-nation) ஸ்பெயினைச் சேர்ந்த துடிப்புள்ள இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ள மரங்களை காப்பதற்கான முயற்சியான இந்த தளம் ஆப்பிரிக்க நாடான நைஜரில் 80 லட்சம் மரக்கன்றுகளை நட்டு காலத்திற்கும் பாதுகாக்க திட்டமிட்டு உள்ளது.

இந்த அமைப்பு 80 லட்சம் மரக் கன்றுகளை நட திட்டமிட்டிருப்பதோ, அவை அழகாக, இதயம் போல தோற்றம் அளிக்கக் கூடிய வகையில் நடுவதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதோ மட்டும் ஆச்சர்யமான விஷயம் அல்ல.

இந்த முழு முயற்சியிலும் பங்கேற்ப வர்கள் மிகுந்த ஈடுபாட்டை கொண்டு, களிப்படையும் வகையில் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மரம் வளர்ப்பதை மீறி அதில் சுவாரஸ்யமாக பங்கேற்கக்கூடிய அம்சங்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

காடுகள் அழிக்கப்படுவதன் விளை வாக ஏற்படும் பாலைவனமாக்கலை தடுப்பதற்காக மிகப்பெரிய அளவில் மரங்களை நடுவதை நோக்கமாக கொண்டுள்ள இந்நிறுவனம்,அதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆதரவை பெறுகிறது.

இதற்கு உதவ விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டு மரம் ஒன்றை விலைக்கு வாங்கலாம். பின்னர் அந்த மரம், அவர்களின் சார்பாக நைஜர் நாட்டின் குறிப்பிட்ட இடத்தில் நடப்பட்டு வளர்க்கப்படும்.

அந்த குறிப்பிட்ட மரம் எங்கே நடப்படும் என்பதில்தான் சுவாரஸ்யமே இருக்கிறது.
வழக்கம் போல வரிசையாக மரக்கன்றுகளை நட்டுவைக்காமல், மரக்கன்றுகளை நடுவதன் மூலம் மேலே இருந்து பார்க்கும் போது ஒரு மாபெரும் இதயமாக தோன்றும் வகையில் அவற்றை நடத் தீர்மானித்திருக்கின்றனர்.

எனவே நடப்படும் ஒவ்வொரு மரக்கன்றும், இதயத்தின் ஒரு புள்ளியாக அமையும் வகையில் நடப்படும். சுவாரஸ்யம் இதோடு நின்று விடவில்லை. ஒவ்வொரு மரக்கன்று நடப்படும் இடமும், செயற்கைக் கோள் மூலம் இருப்பிடம் அறியும் உத்தியின் மூலம் இனங்காணப்பட்டு, குறித்து வைக்கப்படும்.

அந்த இடத்திற்கு நிகரான மரத்தை இணைய தளத்தில் பார்க்கலாம். அதோடு அந்த மரம் எப்படி வளர்கிறது என்பதையும் இணைய தளத்தின் மூலம் கண்காணிக்கலாம்.
விருப்பப்பட்டால் மரம் நடுபவர்கள் தாங்கள் விரும்பும் புள்ளியை தேர்வு செய்து அங்கே மரம் நட வைக்கலாம்.

இணைய தளத்தில் ஒவ்வொரு மரத்திற்கும் ஒதுக்கப்படும் இடத்தில், உபயதாரர்கள் அதாவது மரங்களை நட உதவி செய்தவர்கள். தங்களது கருத்துக்களை பதிவு செய்து வரலாம்.

புதிதாக மரம் நட வருபவர்கள், இந்தகருத்துக்களை படித்து பார்க்க முடியும். இப்படியாக மரக்கன்றுகள் மீது பாசம் கொண்டவர்கள் பரஸ்பரம் தொடர்பு கொண்டு கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதி உண்டு.

இதன் மூலம் மரங்களை சார்ந்த நட்பு குழுக்களை உருவாக்கி கொள்ள முடியும்.
நட்பு குழுவினர் கருத்துக்களை பரிமாறி கொள்வதோடு, தாங்களே சொந்த பசுமை முயற்சியிலும் ஈடுபடலாம்.

பசுமை ஆர்வலர்களை ஒன்றிணைத்து ஒரு சமூகமாக உருவாக்குவதன் மூலம் புதிய பூமியை படைக்கலாம் என டிரிநேஷன் நினைக்கிறது.

பூமி முழுவதும் வனச்சீரழிவால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், ஆப்பிரிக்க நாடான நைஜர் வறுமையால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடாகவும், காடுகளை வேகமாக இழந்து நிற்கும் நாடாகவும் இருப்பதால் அங்கே தன்னுடைய திட்டத்தை அரங்கேற்றலாம்
என டிரிநேஷன் முடிவு செய்திருக்கிறது.
—————

link;
www.tree-nation.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

4 Comments on “மரங்களால் ஒரு இதயம்

  1. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven’t registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    Reply
  2. சூப்பர்..

    Reply
    1. cybersimman

  3. அருமையான தகவல் நன்றி.

    Reply

Leave a Comment

Your email address will not be published.