ரத்த தானத்திற்கான பேஸ்புக்.

பேஸ்புக் மூலம் நண்பர்கள் பற்றி பல தகவல்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.அவர்களின் ரத்த வகையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததுண்டா?அதே போல பேஸ்புக் பக்கத்தில் உங்களை பற்றிய விவரங்களில் ரத்த வகையை குறிப்பிட்டுள்ளீர்களா?

ஒருவரின் ரத்த வகையை தெரிந்து கொண்டால் அவசர காலத்தில் கைகொடுக்கும் அல்லவா?யாருக்கேனும் ரத்தம் தேவைப்படும் போது,குறிப்பிட்ட ரத்த வகை யாருக்கெல்லாம் இருக்கிறது என விசாரித்து கொண்டிருப்பதை விட ஒருவரது பேஸ்புக் பக்கத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடிவது பயனுள்ளதாக இருக்கும் தானே.சமயங்களில் உயிர் காப்பதாகவும் இருக்கும்.

சரி,இதற்காக என்றே ஒரு சமூக வலைப்பின்னல் உருவாக்கப்பட்டால் இன்னும் நன்றாக தானே இருக்கும்.’சோஷியல் பிலட்’ இணையதளம் இதை தான் அழகாக அருமையாக செய்கிற‌து.

பேஸ்புக் வசதியை பயன்படுத்து கொண்டு உருவக்கப்பட்டுள்ள தள‌ம் இது.ரத்த வகை மூலம் நண்பர்கள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்து கொள்ள வழி செய்வது தான் இதன் நோக்கம்.

தளத்தின் முகப்பு பக்கத்தை பார்த்தாலே இதன் நோக்கம் புரிந்துவிடும்.எட்டு வகையான ரத்த பிரிவுகளும் அவற்றுக்கான சின்னத்தோடு இடம் பெற்றுள்ளன.இதில் சேர விரும்புகிறவர்கள் தங்கள் ரத்த பிரிவை கிளிக் செய்து உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் அதே பிரிவை சேர்ந்த மற்ற நண்பர்களின் வலைப்பின்னலில் அடைக்க‌லம் ஆகிவிடலாம்.

அதன் பிறகு யாருக்கேனும் ரத்த தானம் தேவைப்பட்டால் அந்த பிரிவை சேர்ந்த நண்பர்களை எளிதாக தொடர்பு கொள்ளலாம்.நண்பர்களில் அருகாமையில் உள்ளவர்களையும் எளிதாக கண்டு கொள்ளலாம்.அவசர காலத்தில் இந்த தகவல்கள் பேருதவியாக இருக்கும்.

ரத்த தானத்திற்கு உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன.இருப்பினும் பேஸ்புக்கின் சமூக வலைப்பின்னல் ஆற்றலை பயன்ப‌டுத்தி கொண்டும் ரத்த தானம் செய்ய விரும்புகிற‌வர்களை அழகாக ஒருங்கிணைக்கும் சேவையாக இதனை பாராட்டலாம்.

யாரை பார்த்தாலும் பேஸ்புக்கில் இருக்கிறீர்களா என்று கேட்கும் காலத்தில் பேஸ்புக் வழியிலான ரத்த தான தொடர்பு போற்றத்தக்க முயற்சியே.

இந்தியாவை சேர்ந்த ‘கார்திக் ந‌ரலசெட்டி’ என்னு 22 வயது இளைஞர் தான் இந்த தளத்தை உடுவாக்கியுள்ளார்.பெரும்பாலான இளைஞர்களை போல பேச்புக் பிரியரான கார்த்திக் ஒரு முறை பேஸ்புக் பக்கத்தில் தனது நண்பர் ஒருவர் அவரது தந்தைக்கு அருவை சிகிச்சைக்காக ரத்த தானம் தேவை என வேண்டுகோள் விடுத்திருப்பதை பார்த்தார்.அடுத்த சில மணி நேர‌ங்களிலேயே அந்த நண்பர் தேவையா ரத்தம் கிடைத்துவிட்டது என்னும் தகவலை தெரிவித்து பேஸ்புக் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அதை படித்து நெகிழ்ந்து போன் கார்திக் பேஸ்புக்கின் தொடர்பு கொள்ளும் ஆற்றலை பயன்படுத்தி ரத்த தான விவரங்களை மேலும் எளிதாக்கலாமே என்று யோசித்தார்.அதன் பய‌னாக பிறந்தது தான் ‘சோஷியல் பிலட்’ இணைய சேவை.

இந்த சேவைக்காக சிற்ந்த இளம் தொழில்முனைவோருக்கான விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.சமூக தொழில் முனைவோரை ஊக்குவித்து வரும் அசோகா அமைப்பு இந்த விருதை வழங்கியுள்ளது.

இணைய‌தள முக‌வரி;http://socialblood.org/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ரத்த தானத்திற்கான பேஸ்புக்.

  1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    Reply

Leave a Comment

Your email address will not be published.