புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சுயசரிதை.

பேமஸ் ஆத்தர்ஸ் இணையதளம் பெயருக்கு ஏற்ப ஆங்கிலத்தில் பிரபலமான எழுத்தாளர்களின் சுயசரிதைகளை கொண்டிருக்கிறது.அகாதா கிறிஸ்டியில் துவங்கி ஜேம்ஸ் ஜாய்ஸ்,ஆன்டன் ஷெக்காவ்,ஜோனாத்தன் ஸ்விப்ட்,டால்ஸ்டாய்,மார்க் டுவைன்,டேனியல் ஸ்டீல்,மைக்கேல் கிரிக்டன்,எரிகா ஜாங் என பிரபலமான எழுத்தாளர்கள் அனைவரது சுயசரிதைகளும் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இலக்கிய உலகில் சிகரத்தை தொட்டவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.வெகுஜன நோக்கில் பிரப்லமானவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.அதே போல அந்த கால எழுத்துலக மேதைகளும் உள்ளனர்.சமகாலத்து மேதைகளும் உள்ளனர்.

சுயசரிதை விவரங்களும் எளிமையாகவே தொகுக்குக்கப்பட்டுள்ளன.எழுத்தாளர்களின் வாழ்க்கை விவரங்களோடு அவர்களின் இலக்கிய பயணமும் சேர்ந்ததாக சுயசரிதை அமைந்துள்ளன.

சுயசரிதையின் கீழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள் பட்டியலும் இடம் பெறுகிறது.

தளத்தின் வடிவமைப்பும் பொதுவாக எளிமையாகவே இருக்கிறது.
மற்ற சுயசரிதை தளங்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டிருக்கும் வகையிலும் இதன் வடிவமைப்பு இருக்கிறது.முகப்பு பக்கத்தின் இரு பக்கத்திலும் எழுத்தாளர்களின் பட்டியல் அகரவரிசைப்படி காணப்படுகிறது.அவற்றில் எந்த எழுத்தாளர் பற்றிய தகவல் தேவையோ அந்த எழுத்தாளரின் பெயரை கிளிக் செய்து சுயசரிதையை படித்து கொள்ளலாம்.இந்த பட்டியல் வளர்ந்து கொண்டே இருக்குமா என்று தெரிய வில்லை.புதிய எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டால் நன்றாகவே இருக்கும்.

இந்த பட்டியலின் நடுவே தளத்தின் அறிமுக பகுதி இடம் பெறுகிறது.பிரபல எழுத்தாளர்களின் பட்டியலில் ஏன கவனம் என்பதற்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது.

சுயசரிதை பிரியர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் பயனுள்ள தளம்.

எழுத்தாளர்களின் சுயசரிதையை படித்துவிட்டு பேஸ்புக் மூலம் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://www.famousauthors.org/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.