பிரார்த்தனை செய்ய அழைக்கும் இணையதளம்

பிராத்தனைகள் மூலம் நண்பராகலாம் என்பது சாத்தியம் தான் என்று ஏற்கனவே பிரேட்டர் உணர்த்தியிருக்கிறது.இப்போது இந்த வரிசையில் இன்னொரு இணையதளமும் உதயமாகியிருக்கிறது.

இன்வைட் டூ பிரே என்னும் அந்த தளம் பிராத்தனை செய்ய நண்பர்களை அழைத்து அவர்களும் நம்மோடு சேர்ந்து பிராத்தனை செய்ய‌ உதவுகிறது.இதே போலவே நாமும் நன்பர்களின் பிராத்தனையில் பங்கேற்கலாம்.

கூட்டு பிராத்தனைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தளத்தின் வழியே தங்கள் பிராத்தனைகளை நண்பர்களிடம் கொண்டு செல்லலாம்.இதற்காக செய்ய வேண்டியதெல்லாம் பேஸ்புக் கணக்கு மூலம் இந்த தளத்தில் உள்ளே நுழைவது தான்!.அதன் பிறகு மனதில் உள்ள பிராத்தனையை பதிவிட்டு நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

கூட்டு பிராத்தனையின் சக்தி அதிகரிக்க வேண்டும் என நினைத்தால் முதலிலேயே பேஸ்புக் நண்பர்களை இந்த தளத்திற்கு அழைத்து விடலாம்.

பிராத்தனைக்கான கோரிக்கையை பெறும் நண்பர்கள் தாங்களும் சேர்ந்து கடவுளிடம் பிராத்திக்கலாம்.தங்கள் நண்பர்களீடம் பகிர்ந்து கொள்ளலாம்.அப்படியே அந்த பிராத்தனைக்கு ஆதரவாக ஊக்கம் அல்லது ஆறுதல் தரும் வகையில் கருத்து தெரிவிக்கலாம்.

இந்த தளத்தில் யாரெல்லாம் பிராத்தனை கோரியுள்ளனர் என்று பார்த்து அவற்றில் உருக வைப்பவர்களை தொடர்பு கொண்டு பிராத்தனை செய்யலாம்.இப்படி பிராத்தனை மூலம் தொடர்பு கொள்வதன் வாயிலாகவே புதிய நண்பர்களை உண்டாக்கி கொள்ளலாம்.

இப்படி சேரும் நண்பர்கள் பொது பிராத்தனைகளில் ஈடுபடலாம்.

நண்பர்களில் யாரெல்லாம் நமக்காக பிராத்தனை செய்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.நாம் எதெற்கெல்லாம் பிராத்தனை செய்துள்ளோம் என்று பார்க்கும் வசதியும் இருக்கிறது.

பிராத்தனைகளை பொதுவில் பகிர்ந்து கொள்ளலாம்,இல்லை நண்பர்களோடு மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.அவரவர் விருப்பத்திற்கேற்ப இதனை தேர்வு செய்து கொள்ளலாம்.

பிரதானமாக கிறிஸ்துவ நம்பிக்கை கொண்டவர்களுக்கான தளம் போல அமைந்துள்ளது.ஆனால் பிராத்தனைகள் எல்லோருக்கும் பொதுவானது தானே.எல்லைகள் தாண்டி மொழிகள் கடந்து மதங்களுக்கு அப்பார்ப்பட்டு ஒன்று சேர்ந்து பிராத்தனை செய்யலாம் தானே.

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம்.இந்த தளம் மூலம் பிராத்தனையையும் பகிர்ந்து கொண்டு நண்பர்களாவோமே.

உலகில் பிராத்தனை செய்யத்தான் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன.

இப்போது சிவகாசி பட்டாசு ஆலை போன்ற கோர விபத்துக்கள் இனி நேராமல் இருக்க பிராத்தனை செய்வோம்!

இணையதள முகவரி;http://invitetopray.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.