இதோ உங்களுக்கான இணைய சுவர்

உலகில் விதவிதமான சுவர் இருப்பது உங்களுக்குத்தெரியும். ஆனால் இணையத்திலும் சுவர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அது மட்டும் அல்ல, இந்த இணைய சுவற்றை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் என்பதும் தெரியுமா? பேட்லெட் (http://padlet.com/ ) இணையதளம் (வால்விஷர் எனும் பெயரில் அறிமுகமான இந்த தளம் பின்னர் பேட்லெட் என பெயர் மாறியுள்ளது. ) தான் இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.

பேட்லெட் தளத்தில் உங்களுக்கான இணைய சுவர் போன்ற பக்கத்தை மிக எளிதாக உருவாக்கி கொண்டு விடலாம். டிவி விளம்பரம் ஒன்றில் 2 நிமிடங்களில் நூடுல்சை சுலபமாக தயார் செய்து விடலாம் என்று சொல்வது போல இதில் 2 விநாடிகளில் இணைய சுவற்றை உருவாக்கி கொண்டு விடலாம். அந்த அளவுக்கு எளிதானது.

இதற்காக தளத்தின் முகப்பு பக்கத்தில் ( ஹோம் பேஜ்) உள்ள அறிவிப்பு பகுதியில் கிளிக் செய்தால் அடுத்தாக ஒரு இணைய பக்கம் தோன்றும் .அது தான் உங்களுக்கான இணையசுவர்.

எல்லாம் சரி ,இந்த இணைய சுவற்றால் என்ன பயன்?.இந்த சுவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்? இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள , இந்த இணை சுவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் இரண்டு முறை கிளிக் செய்து பாருங்கள். நீங்கள் கிளிக் செய்த இடத்தில் சின்னதாக ஒரு கட்டம் தோன்றும். நன்றாக கவனித்தீர்கள் என்றால் அந்த கட்டத்தில் மேல் பகுதியிலும் நீங்கள் டைப் செய்யலாம். கட்டத்தின் நடுவிலும் டைப் செய்யலாம் என்பது தெரியும். மேல் பகுதியில் உங்களை பெயரை டைப் செய்து கொள்ளலாம். அல்லது ஏதேனும் தலைப்பு கொடுக்கலாம். கீழ்ப்பகுதியில் நீங்கள் விரும்பும் வரிகளை டைப் செய்து கொள்ளலாம். இப்படி இந்த இணைய சுவற்றில் நீங்கள் விரும்பியதை டைப் செய்து கொள்ளலாம். இணையத்தில் உருவாக்குவது ரொம்ப சுலபமாக இருக்கிறது இல்லையா?

இருங்கள் , இன்னும் இரண்டு சின்ன அற்புதங்கள் இருக்கின்றன. அந்த கட்டத்திலேயே அடிப்பகுதியில் பார்த்தால் சின்ன சின்னதாக மூன்று ஐகான்கள் இருப்பதை பார்க்கலாம். சங்கிலி போன்ற முதல் ஐகான் புகைப்படம் அல்லது வீடியோ இணைப்புகளுக்கானது. ஆம் இதை கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய கட்டம் அல்லது பெட்டியில் உங்களுக்கு தேவையான புகைப்படம் அல்லது வீடியோவை இணைக்கலாம். இணையதள முகவரியை கூட இணைக்க முடியும். அதே போல் , இந்த கட்டத்தை முடித்த பின், இணைய சுவற்றில் வேறு எந்த இடத்தில் வேண்டுமானாலும் கிளிக் செய்து இன்னொரு கட்டத்தை உருவாக்கி கொள்ளலாம். இந்த கட்டத்திலும் அதே போல டைப் செய்யலாம். படங்களை சேர்க்கலாம். இதே போல எத்தனை கட்டங்களை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளாலாம்.

அது மட்டுமா ? இந்த கட்டங்களுக்கான பின்னணி வண்ணங்களை கூட விருப்பம் போல தேர்வு செய்யலாம். பின்னணியை சித்திரங்களாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
இணைய வடிவமைப்பு தெரியாமலேயே நாம் இஷ்டம் போல இணையத்தில் எதையாவது உருவாக்கி கொள்ள முடிவது ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? இருங்கள், இந்த இணைய சுவற்றை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்து கொண்டால் இன்னும் வியப்பாக இருக்கும்.

இந்த தளத்திலேயே கேலரி எனும் பகுதி இருக்கிறது. அதில் இந்த வசதியை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை அழகான உதாரணத்துடன் விளக்கி காட்டப்பட்டுள்ளது. வீட்டுப்பாடத்திற்கோ அல்லது வகுப்பில் கொடுக்கப்பட்ட அசைன்மெடிற்கோ இதை பயன்படுத்தலாம். உங்களுக்கான அறிவிப்பு பலகையாக பயன்படுத்தலாம். உங்கள் நண்பனுக்கு பிறந்த நாளா? வாழ்த்து சொல்ல இந்த சுவற்றை பயன்படுத்தலாம். காலாண்டு தேர்வுக்கு எப்படி படிப்பது என திட்டமிட பயன்படுத்தலாம். நீங்கள் பார்த்து ரசித்த பயனுள்ள இணையதளங்களை குறித்து வைத்துக்கொள்ளலாம்.
இப்படி எண்ணற்ற விதங்களில் இதை பயன்படுத்தலாம்.
வீட்டுப்பாடம் என்றால் இந்த சுவற்றில் நீங்கள் படித்த பாடத்தின் முக்கிய அம்சங்களை தனித்தனியே குறிப்பிட்டு அதன் கீழ் ஒவ்வொரு அம்சத்திற்கான குறிப்புகளையும் இடம் பெறச்செய்யலாம். நோட்டில் எழுதி பார்ப்பதை விட இது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். அழகாகவும் மனதில் பதியும்.
பிறந்த நாள் வாழ்த்து என்றால், பர்த்டே பாயின் பெயரை மேலே குறிப்பிட்டு அதன் கீழ் உங்கள் வாழ்த்தை குறிப்பிட்டு , இதே போலவே மற்ற நண்பர்கள் வாழ்த்துக்களையும் இடம் பெற வைக்கலாம்.

ஆம், இந்த இணை சுவற்றை உருவாக்கிய பின் அதை மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம். எனவே நண்பர்கள் கூட்டாக சேர்ந்து செயல்பட இது மிகவும் உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு இதன் மூலமே கூட விநாடி வினா நடத்தலாம். வரிசையாக கேள்விகள் கேட்டு அதற்கு நண்பர்களை பதில் அளிக்க வைக்கலாம். இதே வசதியை ஒரு தலைப்பு தொடர்பாக சக மாணவர்களின் கருத்துக்களை திரட்டவும் பயன்படுத்தலாம். மாணவர்கள் தான் என்றில்லை, உங்கள் பள்ளி ஆசிரியர் கூட இது போன்ற சுவற்றை உருவாக்கி மாணவர்களை பங்கெடுக்க வைத்து பாடத்தை மேலும் அழகாக புரிய வைக்கலாம். உதாரணமாக , ஆங்கில பாடம் நடத்திய பிறகு, பாடத்தில் வரும் சொற்களை குறிப்பிட்டு அதை பயன்படுத்தி வாசகங்களை எழுதி காட்ட வைக்கலாம்.

அதே போல குறிப்பெடுத்துக்கொள்ளவும் இந்த சுவற்றை பயன்படுத்தலாம்.
நீங்கள் உருவாக்கிய இணைய சுவற்றை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம், மாற்றி அமைக்கலாம். உறுப்பினராக பதிவு செய்து கொள்ளாமலேயே கூட இணைய சுவற்றை உருவாக்கலாம் என்றாலும் உறுப்பினரானால் உங்கள் இணைய சுவற்றை சேமித்து வைத்துக்கொள்ளலாம். இமெயில் அல்லது பேஸ்புக் மூலம் இந்த சுவற்றை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் வலைப்பதிவு வைத்திருந்தால், அதில் இந்த சுவற்றை உள்ளீடு (எம்பீட்) செய்து கொள்ளலாம்.
இந்த இணைய சுவற்றை பலவிதமாக பயன்படுத்தலாம் என்பதோடு இணைய உருவாக்கத்திலும் நீங்கள் அனுபவம் பெறலாம்.

இதே போலவே ஐபிக்சி (http://ipiccy.com/ ) தளத்தில் புகைப்படங்களை நீக்கள் அழகாக மாற்றி அமைக்கலாம். அதாவது எடிட் செய்யலாம். இந்த தளத்தில் புகைப்ப்டத்தை அப்லோடு செய்து விட்டால் போதும் அதன் அளவு மற்றும் வண்ணங்களை நீங்களே திருத்திக்கொள்ளாலாம். பின்னர் திருத்தப்பட்ட புகைப்படத்தை கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கலாம்.

இசெல்லி (http://www.easel.ly/ ) இணையதளத்தில் இன்போகிராபிக் எனப்படும் வரைபட சித்திரங்களை உருவாக்கி கொள்ளலாம். ஆனால் இந்த சேவையை உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் தான் பயன்படுத்த முடியும்.

———
நன்றி; சுட்டி விகடன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.