உங்களின் டாப் டென் தளங்கள் என்ன?

இணையத்தின் டாப் டென் இணையதளங்கள் எவை என்பது உங்களுக்குத்தெரியுமா? அதாவது இணையவாசிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களில் முன்னிலையில் இருக்கும் முதல் தளங்கள் எவை என்பதை நீங்கள் அறிவீர்களா? இந்த முன்னணி தளங்களை கண்டறிவதற்கான வழி எளிதானது தான். அலெக்ஸா பட்டியல் தான் அது.

அலெக்ஸா தான் இணையத்தின் அளவுகோள். இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களை அலெக்ஸா பட்டிலிட்டு தருகிறது. அலெக்ஸா ராங்க் என்று இது குறிப்பிடப்படுகிறது. அலெக்ஸா தளத்திற்கு சென்றால் இந்த பட்டியலை பார்க்கலாம். இப்போதைய பட்டியல் படி தேடியந்திரமான கூகுள் முதல் இடத்தில் உள்ளது. வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் இரண்டாவது இடத்திலும், சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் மூன்றாவது இடத்திலும் உள்ளன. விக்கிபீடியா, டிவிட்டர் ஆகிய தளங்கள் முதல் பத்து இடத்திற்குள் வருகின்றன. சீன தேடியந்திரமான பெய்டுவும் இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

அலெக்ஸா தளம் (http://www.alexa.com/topsites) உலகலாவிய பட்டியல் தவிர, ஒவ்வொரு நாட்டிற்கான முன்னிலை தளங்களையும் பட்டியலிடுகிறது.

அநேகாமாக கூகுளில், டாப் டென் இணையதளங்கள் என்று தேடினாலே அலெக்ஸா பட்டியல் முதலில் வந்து நிறகும். இது தொடர்பான விக்கிபீடியா பக்கத்தையும் காணலாம்.

அலெக்ஸா தவிர!

அலெக்ஸா தவிர சிமிலர்வெப் (https://www.similarweb.com/top-websites ) தளமும் இத்தகைய பட்டியலை அளிக்கிறது. இந்த பட்டியலிலும் கூகுள், யூடியூப், பேஸ்புக் தான் முதல் மூன்று இடங்களில் உள்ளன. நான்காவது, ஐந்தாவது இடங்களில் யாஹு மற்றும் லைவ்.காம் வருகின்றன. மோஸ்.காம் தளமும் முன்னணி தளங்களை பட்டியலிடுகிறது. இந்த பட்டியலில் பேஸ்புக் முதலிடத்திலும், டிவிட்டர் இரண்டாவது இடத்திலும் உள்ளன. கூகுள் மூன்றாவது இடத்தில் தான் வருகிறது. தொழில்முறை வலைப்பின்னல் தளமான லிங்க்டுஇன், வலைப்பதிவு சேவையான வேர்ட்பிரஸ் ஆகிய தளங்களும் இந்த பட்டியலில் முன்னிலை பெறுகின்றன.

ஒவ்வொரு சேவைகளும் தளங்களை பட்டியலிட ஒவ்வொரு விதமான அளவுகோள் வைத்திருக்கின்றன. பொதுவாக அலெக்ஸா பட்டியல் தான், அறிவிக்கப்படாத அதிகாரபூர்வ பட்டியலாக இருக்கிறது. மற்ற பட்டியலை ஒப்பீட்டு நோக்கில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த டாப் டென் தளங்களின் பட்டியல்களை அறிந்திருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, உங்களுக்கான டாப் டென் இணையதளங்கள் பட்டியலை நீங்கள் வைத்திருப்பது நல்லது. அதாவது உங்கள் பார்வையில் டாப் டென் தளங்கள்!

உங்கள் டாப் டென்

எதற்காக இந்த பட்டியல் என்றால் உங்களுக்காக தான். இணையத்தை நீங்கள் இன்னும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளவும், இணையத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பதை பெறவும் இப்படி ஒரு பட்டியல் உங்களுக்கு அவசியம். உங்கள் இணைய பயன்பாட்டை மெருகேற்றவும், மேலும் பட்டைத்தீட்டவும் இது உதவும்.

இணையத்தில் கோடிக்கணக்கான இணையதளங்கள் இருப்பதை அறிந்திருக்கலாம். அவற்றில் இருந்து முன்னணி பத்து தளங்களை தேர்வு செய்வது தனிமனிதர்களுக்கு சாத்தியமா? என நீங்கள் தயங்கலாம். ஆனால் இது உங்களது தனிப்பட்ட பட்டியல் என்பதை மனதில் கொள்ளுங்கள். இந்த பட்டியலில் இடம்பெற வேண்டிய இணையதளங்களை நீங்கள் இஷ்டம் போல தேர்வு செய்யலாம். அவற்றுக்கான அளவுகோள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் முக்கியமாகவும், பயனுள்ளதாகவும் கருதும் தளங்களை பட்டியல் போட்டு வைத்து கொள்ள வேண்டும் என்பதே விஷயம்.

ஏன்? எதற்காக? என மீண்டும் கேட்கத்தோன்றலாம். கடந்த 25 ஆண்டுகளில் இணையம் மேலும் விரிவடைந்து, சிக்கலாகி இருப்பதே இதற்கு காரணம். இணையம் முன் போல எளிதாக இல்லை. இணையதளங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. தளங்களின் வகைகளும் அதிகரித்துள்ளன. எல்லாவற்றையும் விட தளங்கள் அறிமுகமாகும் விதமும், முன்னிலை பெறும் விதமும் மாறியிருக்கிறது. ஆரம்ப காலத்தில் மணி மணியாக தளங்களை தேர்ந்தெடுத்து பரிந்துரைத்த நிலை மாறி, இன்று இணைய கடலில் தேட வேண்டியிருக்கிறது. அதோடு இணையதளங்கள் ஏதேதோ காரணங்களுக்காக வைரலாக கவனத்தை ஈர்க்கின்றன. அவை எல்லாமே பயனுள்ளவை என சொல்வதற்கில்லை.

தேடல் குமிழ்

அது மட்டும் அல்ல பல நேரங்களில் இணையம் உங்கள் கண்களை மறைக்கிறது தெரியுமா? ஆம், கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்களில் தேடும் போது கண்ணுக்குத்தெரியாத சர்ச் பபிள் எனப்படும் தேடல் குமிழ் உங்கள் தேடல் முடிவுகளை தீர்மானிக்கின்றன. உங்கள் விருப்பத்திற்கேற்ற முடிவுகளை முன்வைப்பது எனும் கருத்தின் அடிப்படையில் இவ்வாறு செய்யப்படுகிறது. பேஸ்புக் தளத்திலும் கூட, பயனாளிகளின் இணைய நடவடிக்கைக்கு ஏற்ற செய்திகளும், தகவல்களும் தான் டைம்லைனில் முன்வைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு நீங்கள் குறிப்பிட்ட சொல் தொடர்பாக அடிக்கடி தேடினீர்கள் என்றால் அந்த சொல் தொடர்பான செய்திகள் உங்களுக்கான முன்னிறுத்தப்படும். இதே முறையில் தான் இணைய விளம்பரங்களும் அளிக்கப்படுகின்றன.

எனவே பிரபலமாக இருப்பவையும், பரிந்துரைக்கப்படுபவையும் சிறந்தவையாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதைவிட முக்கியமாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றில்லை. மேலும் இணையம் பரந்து விரிந்ததாக இருக்கும் நிலையில், ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான இணையதளங்களும், சேவைகளும் எவை என்பதை அறிந்திருக்க வேண்டும். அதை அவர்களே தேர்வு செய்வது இன்னும் சிறப்பு.

சொந்தமாக டாப் டென் தளங்களை பட்டியலிட்டு வைத்துக்கொள்வது இதற்கான நல்ல துவக்கமாக அமையும். இதை மிகவும் தேவையான இணைய விழிப்புணர்வு என்று கூட சொல்லலாம்.

எல்லாம் சரி, நமக்கான டாப் டென் தளங்களை எப்படி பட்டியலிடுவது?

முதலில் நீங்கள் அறிந்த மற்றும் அதிகம் பயன்படுத்தும் தளங்களை எல்லாம் குறித்து வையுங்கள். எப்படியும் தவறாமல் பயன்படுத்தும் கூகுள், ஜிமெயில், பேஸ்புக், யூடியூப், விக்கிபீடியா போன்ற தளங்களை இந்த பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிடலாம். மாறாக நீங்கள் பயன்படுத்த வேண்டிய தளங்களை கண்டறிந்து அவற்றை சீர்த்தூக்கிப்பார்த்து பட்டியலில் சேருங்கள்.

தளங்களை தேர்வு செய்வதற்கு பொதுவான அளவுகோள் வகுத்துக்கொள்ளவும். இந்த தளத்தால் எனக்கு என்ன பயன்? எனும் கேள்விக்கான பதிலே அளவு கோளுக்கான அடிப்படையாக இருக்க வேண்டும். இந்த கேள்வியோடு இணையதளங்களை தேடி கண்டறியுங்கள்.

மாணவர்களுக்கு!

உதாரணமாக மாணவர்கள் எனில் கான் அகாடமி, கோட் அகாடமி தளங்களை குறித்து வைக்கலாம். கான் அகாடமி (https://www.khanacademy.org/) இணைய பல்கலைக்கழகமாக விளங்கும் அருமையான தளம். இதில் எளிமையான வீடியோ பாடங்கள் மூலம் பலவற்றை கற்றுக்கொள்ளலாம். மாணவர்களுக்கான இணைய வழிகாட்டியாக இது விளங்கும். கோட் அகாடமி தளம் கோடிங் தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ள உதவும் தளம். மற்ற தளங்களை விட மாணவர்களுக்கு இந்த தளங்கள் பயன் அளிக்கும். அதே போல மாணவர்கள் வேலை வாய்ப்பு தேடலுக்கு உதவும் நவ்கரி.காம் மற்றும் பயிற்சி நிலை பணிகளை தேடல் உதவும் லெட்ஸ் இன்டர்ன்.காம் (http://www.letsintern.com/) மற்றும் இன்டர்ன்சாலா.காம்  (https://internshala.com/) தளங்களை அறிந்து வைத்திருப்பது நல்லது.

இதே போல செய்திப்பிரியர்கள் எனில் பிபிசி.காம், நியூயார்க்டைம்ஸ்.காம், கார்டியன்.காம் போன்ற தளங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். இவை முன்னிலை தளங்கள் என்பது மட்டும் அல்ல, நம்பகமான தளங்களும் கூட. ஃபேக் நியூஸ் என சொல்லப்படும் பொய்ச்செய்திகள் இணையத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கியிருக்கும் காலத்தில் நம்பகத்தன்மையை உறுதி செய்வது முக்கியம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.

ஒருவர் வீடியோ பிரியர் என்றால், யூடியூப்பில் மட்டும் வீடியோக்களை பார்க்காமல் விமியோ.காம் (https://vimeo.com/ ) வீடியோ சேவை தளத்தையும், வைராலும் வீடியோக்களில் மணியானவற்றை தேர்வு செய்து தரும் அப்வொர்த்தி.காம் (https://www.upworthy.com/ )தளத்தையும் அறிந்திருக்க வேண்டும்.

ஹேக்கர்நியூஸ்

தொழில்நுட்ப தகவல்களில் ஆர்வம் உள்ளவர் எனில். ஹேக்கர்நியூஸ்.காம் (https://news.ycombinator.com/), மாஷபில்.காம், மேக்யூஸ் ஆப்.காம், லேப்னால்.ஆர்க் போன்ற தளங்களை அவசியம் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றில் லேப்னால் (https://www.labnol.org/ ) இந்தியரான அமீத் அக்ர்வாலால் நடத்தப்படும் தளம். இணைய பயன்பாடு தொடர்பான எளிமையான வழிகாட்டு கட்டுரைகளை இதில் பார்க்கலாம். ஜிமெயிலில் இணைப்பு கோப்புகளை தரவிறக்கம் செய்வது எப்படி ? போன்ற கேள்விகளுக்கான விரிவான விளக்கத்தை இந்த தளத்தில் காணலாம். ஹேக்கர்நியூஸ் தளத்தை தொழில்நுட்ப செய்திகளுக்கான பொக்கிஷம் எனலாம்.

பொன்மொழி பிரியர்கள் எனில் கோட்சீக்ரெட்.காம், பிரைனிகோட்.காம் (https://www.brainyquote.com/ ) தளங்களை நாடலாம். புதிய மொழியை கற்க விருப்பம் எனில் டுவோலிங்கோ.காம் (https://www.duolingo.com/ ) தளத்தை அணுகலாம். புரியாத ஆங்கில வார்த்தைகளுக்கு பொருள் தெரிய வேண்டும் எனில் அகராதிகளின் அகராதியான ஒன்லுக்.காம் (http://www.onelook.com/) தளத்தை நாடலாம். புதிய சொற்களின் சரியான உச்சரிப்பை அறிய வேண்டும் எனில்  புரனவுன்ஸ்நேம்ஸ்.காம், ஹவ்டுபுரனவுன்ஸ்.காம் தளங்களை அணுகலாம்.

இணைய உரையாடலில் ஈடுபடுகிறவர் என்றால் ஸ்கைப் சேவை பயனுள்ளதாக இருக்கும். இணையம் மூலம் வீடியோ உரையாடல் மற்றும் ஆலோசனையில் ஈடுபட அப்பியர்.இன்  (https://appear.in/ ) தளத்தை பயன்படுத்தலாம். இணையத்திலேயே குறிப்புகள் எடுக்க வேண்டும் எனில் எவர்நோட்.காம் (https://evernote.com ) பயனுள்ளது. வேறு பல சேவைகளும் இருக்கின்றன. கோப்பு பரிமாற்றத்திற்கு டிராப்பாக்ஸ் ஏற்றது. ஷேர் இட் தளமும் கைகொடுக்கும்.

டிஜிட்டல் நூலகம்

இணையத்தில் புத்தகங்களை வாசிக்க விருப்பம் எனில் டிஜிட்டல் நூலகமாக விளங்கும் ஓபன்லைப்ரரி.ஆர்க் (https://openlibrary.org/) தளத்தை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். திரைப்பட தகவல் பிரியர்கள் எனில் இணைய திரைக்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் ஐ.எம்.டி.பி.காம்(http://www.imdb.com/) மற்றும் அதே போன்ற ஆல்மூவி.காம் (http://www.allmovie.com/ ) தளத்தையும் அறிந்திருக்க வேண்டும். இசை ஆர்வம் இருந்தால் சவுண்ட்கிளவுட் (https://soundcloud.com/ ) தளம் அசத்தலாக இருக்கும். இந்த தளத்தை ஒலிக்கோப்புகளுக்கான யுடியூப் என்று வர்ணிக்கலாம்.

நாடுகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் எனில் நேஷன்மான்ஸ்டர்.காம் போன்ற தளங்கள் பயனுள்ளதாக இருக்கும். புதுமையான தகவல்களில் நாட்டம் எனில் திஃபேக்ட்ஸைட்.காம், ஃபேக்ட்ஸ்லைட்ஸ்.காம் தளங்கள் ஏற்றவை.

சிறுவர், சிறுமிகளுக்கான பாதுகாப்பான தளங்கள் தேவை எனில் காமன்சென்ஸ்மீடியா.ஆர்க், குட்சைட்ஸ் பார்கிட்ஸ்.ஆர்க், பிபீஎஸ்கிட்ஸ்.காம் போன்ற தளங்களை நாடுவது பொருத்தமாக இருக்கும். சிறார்களுக்கான தேடியந்திரங்களும் தனியே இருப்பதை அறிய வேண்டும்.

அதே போல இணைய வங்கிச்சேவையை நாடுபவர் என்றால் வங்கிகளின் அதிகாரப்பூர்வ தளங்கள் அறிந்திருக்க வேண்டும். மின்வணிகத்தை நாடுபவர் என்றால் விலைகளை ஒப்பிடும் வசதி அளிக்கும் தளங்கள் மற்றும் தள்ளுபடி சலுகைகளை அளுக்கும் கூப்பன் தளங்களை அறிந்திருக்க வேண்டும்.

இந்த தளங்கள் எல்லாம் பரிந்துரையே. இணையத்தில் காணக்கூடிய ஈடு இணையில்லாத இணையதளங்களுக்கான சில மாதிரிகளே இவை. இதே போன்ற இணையதளங்களை உங்கள் விருப்பம் மற்றும் தேவைக்கேற்ப கண்டறிந்து குறித்து வைத்துக்கொண்டு அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்பதே முக்கியம். டாப் டென் தளங்கள் என்பது ஒரு அடையாளம் தான். உண்மையில், இணையத்தில் நீங்கள் செலவிடும் நேரத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு கூடை தளங்களை நீங்கள் அடையாளம் கண்டு உங்களுக்கானதாக குறித்து வைத்துக்கொள்ளலாம். மாற்று தேடியந்திரமான டக்டக்கோ.காம் (https://duckduckgo.com/) , இணைய காப்பகமான ஆர்கேவ்.காம் (https://archive.org/web/ ), சுயசரிதைகளுக்கான பயோகிராபி.காம் (http://www.biography.com/ )  போன்ற தளங்களையும் இந்த பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கலாம்.

இவைத்தவிர உள்ளூர் தளங்கள், மற்றும் சொந்த மொழியில் சிறந்த தளங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

சுயமாக நீங்கள்!

இந்த தளங்களை நீங்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அப்போது அவர்களிடம் இருந்து அருமையான இணையதளம் அல்லது சேவைகளை தெரிந்து கொள்வது சாத்தியமாகலாம். உங்கள் மூலம் அவர்கள் அருமையான சில தளங்களை கண்டறிவார்கள். அதைவிட முக்கிய விஷயம் இந்த தளங்களை மறக்காமல் அடிக்கடி பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு பயன் அளிக்க கூடிய எந்த ஒரு நல்ல தளத்தையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

இத்தகைய தளங்களையும், சேவைகளையும் தேடி கண்டறிய உதவும் பிராடகட் ஹண்ட்.காம் போன்ற இணையதளங்களையும் குறித்து வைத்துக்கொள்ளலாம். இவற்றை இணையத்திலேயே புக்மார்க் செய்ய உதவும் பிரவுசர் நீட்டிப்பு சேவைகளையும் பயன்படுத்தலாம்.

இணையத்தின் முன்னணி சேவைகள் போட்டி போட்டுக்கொண்டு இணையவாசிகளுக்கான பரிந்துரைகளையும், தேர்வுகளையும் அவர்கள் கேட்காமலே வழங்கி கொண்டிருக்கின்றன. இணையவாசிகளின் தனியுரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது. இணைவாசிகளின் ஒவ்வொரு சுவடும் தரவுகளாக கருதப்பட்டு சேகரிக்கப்பட்டு அவர்களை சுற்றி கண்ணுக்குத்தெரியாத வலை பின்னப்படுகிறது.

இந்த சூழலில் இணையவாசிகள் தங்களுக்கு தேவையானதை பெற தங்களின் இணைய பயன்பாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. அதனால் தான் உங்களுக்கான டாப் டென் தளங்களை கண்டறிவதும் முக்கியமாகிறது.

புதிய தலைமுறை வார இதழில் எழுதி வரும் எண்டெர் நெட் தொடரில் எழுதிய கட்டுரையின் சுருக்கப்படாத வடிவம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *