பூகம்பத்தை உணர்த்த ஒரு இமோஜி!

_101939530_485fbf2c-267b-4aec-863b-6e7c0d847a49இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளையும், நிவாரண உதவிகளையும் ஒருங்கிணைப்பத்தில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் பேரிடர் கால தகவல் தொடர்பை மேம்படுத்த தேவையான விஷயங்களில் இமோஜியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என சொன்னால் நம்ப முடிகிறதா? சர்வதேச குழு ஒன்று, பூகம்பத்தை உணர்த்தக்கூடிய இமோஜி உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அது மட்டும் அல்ல, இதற்கான இமோஜியை உருவாக்கி சமர்பிப்பதற்கான உலகலாவிய போட்டியையும் அறிவித்துள்ளது.

ஸ்மைலி உள்ளிட்ட குறியீடுகளை கொண்ட இமோஜி உருவ எழுத்துக்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருக்கலாம். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடக உரையாடர்களிலும், அரட்டைகளிலும் இந்த உருவ எழுத்துகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இந்த உருவ எழுத்துகள் புதிய மொழியாகவே உருவாகி இருப்பதாகவும் கருதப்படுகிறது.

பெரும்பாலும் நகைச்சுவை நோக்கில் பயன்படுத்தப்பட்டாலும், வார்த்தைகளுக்கு பதில் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இமோஜிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே இமோஜியை விளையாட்டு சங்கதியாக நினைத்துவிட முடியாது.

இணையம் உரையாடலிலும், தகவல் தொடர்பிலும் இமோஜிகள் முக்கிய பங்கு வகிப்பதால், புதிய இமோஜிகளை உருவாக்குவதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதற்கான கோரிக்கைகளும் முன் வைக்கப்படுகின்றன. ஆனால், புதிய இமோஜிகளை யாரும் அல்லது எந்த நிறுவனமும் இஷ்டம் போல அறிமுகம் செய்துவிட முடியாது. புதிய இமோஜிகளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு இணைய எழுத்துருக்களை நிர்வகிக்கும் யூனிகோட் கூட்டமைப்பு வசம் உள்ளது. எனவே புதிய இமோஜிக்கான கோரிக்கையை இந்த அமைப்பிடம் சமர்த்து அது ஏற்கப்பட காத்திருக்க வேண்டும்.

இப்படி பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட புதிய இமோஜிகள் அண்மையில் அறிமுகத்துவங்கியுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான பட்டியலை யூனிகோடு கூட்டமைப்பு வெளியிட்ட நிலையில், நிறுவனங்கள் புதிய இமோஜிகளை தங்கள் இயங்குதளங்களில் வெளியிடத்துவங்கியுள்ளன.

இந்த வகையில் தான் இப்போது, பூகம்பத்தை உணர்த்த ஒரு பிரத்யேக இமோஜி தேவை எனும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை வைத்திருப்பது ஒன்றும் சாதாரண அமைப்பு அல்ல; சர்வதேச விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழு தான் இதற்கான கோரிக்கையை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், யூனிகோடு கூட்டமைப்பில் சமர்பிக்க உள்ள பூகம்ப இமோஜியை உருவாக்குவதற்கான போட்டியையும் அறிவித்துள்ளது. இதற்காக ’இமோஜிகுவாக்’ (https://www.emojiquake.org/ ) எனும் இணையதளத்தையும் அமைத்துள்ளது. ஜூலை 14 ம் தேதி வரை வடிமைப்பாளர்கள் மற்றும் இமோஜி ஆர்வலர்கள் இந்த தளத்தில் பூகம்ப இமோஜிக்கான வடிவமைப்பை சமர்பிக்கலாம். இது தொடர்பாக சமர்பிக்கப்படும் ஐடியாக்களை #emojiquake  எனும் ஹாஷ்டேக் மூலம் பின் தொடரலாம்.

பூகம்ப இமோஜி, எளிமையானதாக, எல்லோருக்கும் புரியக்கூடியதாக, தனித்தன்மை மிக்கதாக, பூகம்பத்தை உணர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

960x0பூகம்ப இமோஜி அத்தனை முக்கியமா? என்று கேட்பவர்கள் இமோஜியின் முக்கியத்துவத்தை குறைத்து எடைபோடுவதாகவே கருத வேண்டும். இணைய உரையாடலில் இமோஜிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதோடு, பல விஷயங்களை எளிதாக உணர்த்தவும் கைகொடுக்கின்றன. பத்து வார்த்தைகள் தேவைப்படும் இடங்களில் ஒரு இமோஜி கச்சிதமாக பொருந்தி விடுகிறது.

எல்லாம் சரி, பூகம்ப இமோஜியால் என்ன பயன் வந்துவிடப்போகிறது என கேட்கலாம். இமோஜிகள் உலகில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. உலகில் வேகமாக வளரும் மொழியாகவும் அமைவதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகள் பூகம்ப தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பூகம்பம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வதில் அதற்கான பிரத்யேக இமோஜி பேரூதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது, டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடங்களில் மக்கள் அது பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை வைத்தே பூகம்பம் தொடர்பான கணிப்புகளை மேற்கொள்ள முடிவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல நேரங்களில் பூகம்ப பாதிப்பை டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டே விரைவாக கண்டறிய முடிவதாகவும் கருதப்படுகிறது.

பூகம்பத்தை உணர்ந்த மக்கள் சமூக ஊடகங்களில் அது பற்றிய தகவல்களை பகிர்வதை அடிப்படையாக கொண்டு குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை கண்டறியலாம். ஆனால் சமூக ஊடக பகிர்வில் உள்ள சிக்கல் என்னவெனில், இவை பல மொழிகளில் வெளியாகும் போது அவற்றை ஒருங்கிணைத்து புரிந்து கொள்ள வழியில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வாக தான், பூகம்பத்திற்கு ஒரு இமோஜி தேவை என வலியுறுத்துகின்றனர். பூகம்ப பாதிப்பு தகவல் எந்த மொழியில் வெளியிடப்பட்டாலும், அதனுடன் பூகம்ப இமோஜி இணைக்கப்பட்டிருந்தால் அதை வைத்தே எளிதாக புரிந்து கொண்டு விடலாம்.

சூறாவளி, புயல், எரிமலை போன்ற இயற்கை நிகழ்வுகளை குறிப்பதற்கு எல்லாம் இமோஜி இருக்கும் போது, பூகம்பத்தை குறிக்க மட்டும் இமோஜி இல்லை, இந்த நிலை மாற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. பூகம்ப பாதிப்புகளை கண்டறிவதில் மட்டும் அல்லாமல், மீட்பு பணிகள், நிவாரண உதவிகளை ஒருங்கிணைப்பதிலும் பூகம்ப இமோஜி கைகொடுக்கும் என கருதப்படுகிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.