ஸ்மார்ட்போன் போலி செயலிகளை கண்டறிவது எப்படி?

smartphone-1ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை மேம்படுத்துவதே அதற்கான செயலிகள் தான். ஐபோன், ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தக்கூடிய செயலிகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் பிரபலமான செயலிகளே நூற்றுக்கணக்கில் இருக்கும். பரவலாக எல்லோரும் பயன்படுத்தும் செயலிகள் தவிர, ஒவ்வொருவரும் பயன்படுத்தும் தனிப்பட்ட செயலிகளும் அநேகம் இருக்கின்றன. அதற்கேற்ப ஒவ்வொருவரின் விருப்பம், தேவைகளுக்கு ஏற்ப எண்ணற்ற வகை செயலிகளும் இருக்கின்றன. செயலிகளை தேடி கண்டறியவும் நிறைய வழிகள் இருக்கின்றன.

ஆனால், புதிய செயலிகளை பயன்படுத்த முயற்சிக்கும் போது, கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் போலி செயலிகளும் நூற்றுக்கணக்கில் இருப்பது தான். அண்மையில் கூட, கூகுள் பிளேஸ்டோரில் இருந்து, முன்னணி வங்கிகளின் செயலி போன்ற தோற்றத்தை தந்து ஏமாற்றிய மூன்று செயலிகள் நீக்கப்பட்டன. போலி செயலிகள், அந்தரங்க தகவல்களை சேகரிப்பதில் துவங்கி பலவிதமான வில்லங்கத்தை ஏற்படுத்தலாம். நிதி சார்ந்த செயலிகள் எனில் பொருளாதார இழப்பும் ஏற்படலாம்.

எனவே, புதிய செயலியை தரவிறக்கம் செய்யும் போது, அது போலி செயலி அல்ல என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். இதற்கான வழிகள்:

  1. அதிகாரபூர்வ தரவிறக்கம்; செயலிகளை தரவிறக்கம் செய்யும் போது முதலில் கவனத்தில் கொள்ள வேண்டிய விதி, அதிகாரபூர்வ ஸ்டோரில் இருந்து மட்டுமே செயலிகளை டவுண்லோடு செய்ய வேண்டும் என்பது தான். அதாவது ஐபோன் எனில் ஆப்ஸ்டோர், ஆண்ட்ராய்டு எனில் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து செயலிகளை தரவிறக்கம் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பில் இருந்து செயலிகளை தரவிறக்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அதே போல, இமெயில் அல்லது வாட்ஸ் அப்பில் வரும் இணைப்புகளை பின் தொடர்ந்து சென்று செயலிகளை தரவிறக்கம் செய்யக்கூடாது. பிளேஸ்டோர் அல்லது நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து மட்டுமே தரவிறக்கம் செய்ய வேண்டும்.
  2. செயலி விமர்சனங்கள்; அதிகாரபூர்வ இடங்களில் இருந்து செயலிகளை தரவிறக்கம் செய்வது முதல் கட்ட பாதுகாப்பு. ஆனால் இதனால் மட்டுமே செயலிகள் எல்லாமே பாதுகாப்பானவை என்று சொல்லிவிட முடியாது. பிளேஸ்டோர்/ ஆப்ஸ்டோரிலும் போலி செயலிகள் இருக்கலாம். இவற்றை கண்டறிய தரவிறக்கம் செய்வதற்கு முன், முதலில் அவற்றுக்கான சக பயனாளிகளின் விமர்சன கருத்துக்களை படித்து பார்க்க வேண்டும். விமர்சனங்களின் அடிப்படையிலான மதிப்பீட்டையும் கவனிக்க வேண்டும். விமர்சன கருத்துக்களை படிக்கும் போதே செயலியின் தன்மை பற்றிய சித்திரம் கிடைக்கும். பொதுவாக நன்றாக அறிமுகமான செயலிகளை தரவிறக்கம் செய்ய முயலும் போது பலரும் விமர்சன கருத்துக்களை படித்து பார்க்க வேண்டாம் என நினைப்பதுண்டு. ஆனால் முன்னணி செயலிகள் போலவே போலி செயலிகள் இருக்கலாம் என்பதால், ஒரு முறை விமர்சன கருத்துக்களை படித்து பார்ப்பது நல்லது.
  3. செயலி விளக்கம்; செயலிக்கான விமர்சனங்களும் ஒரு வழிகாட்டி தான். ஒரு சில போலி செயலி உருவாக்குனர்கள் போலி விமர்சனங்களையும் எழுத ஏற்பாடு செய்கின்றனர். எனவே விமர்சனங்களை படித்த பிறகு, செயலியின் விளக்கத்தை படித்துப்பார்க்க வேண்டும். செயலிக்கான விளக்கம் தொழில்முறையாக அமையாமல், இலக்கண பிழை மற்றும் எழுத்து பிழைகளோடு இருந்தால், அவை வில்லங்க செயலியாக இருக்கலாம். அதே போல, செயலிக்கான அறிமுகம் விரிவாக இல்லாமல் மிக சுருக்கமாக இருந்தாலும் சந்தேகம் கொள்ள வேண்டும்.
  4. பின்னணியில் யார்? செயலிகளுக்கான அறிமுக பக்கத்தில் பார்த்தால் பலவிதமான தகவல்களை இருப்பதை காணலாம். அவற்றில் செயலியை உருவாக்கிய நிறுவனம் அல்லது டெவலப்பர் பற்றிய விவரமும் இடம்பெற்றிருக்கும். டெவலப்பரின் இமெயில் முகவரி மற்றும் இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கும். நிறுவனங்கள் மற்றும் சுயேட்சை டெவலப்பர்கள் எனில், இந்த இணைப்புகளில் கிளிக் செய்தால் அவர்களுடைய அதிகாரபூர்வ தளம் அல்லது வலைப்பதிவுக்கு சென்று மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். போலி செயலி எனில் இந்த விவரங்கள் எல்லாம் சொற்பமாகவே இருக்கும். அந்த செயலியின் உருவாக்கம், சிறப்பம்சங்கள் பற்றி அதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியாது. அதே போல, குறிப்பிட்ட பிரிவில் பல செயலிகள் இருக்கலாம். ஆனால் அந்த பட்டியலில் கவனமாக பார்த்தால், அவற்றை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் இருக்கும்.
  5. ஸ்கிரின்ஷாட்: குறிப்பிட்ட செயலிக்கான தேடலில் ஈடுபடும் போது வரும் படங்களை கவனியுங்கள். போலி செயலி உருவாக்குனர்கள், அவற்றுக்கான விளக்க படங்களை கூட எங்கிருந்தாவது எடுத்து பயன்படுத்தியிருக்கலாம்.
  6. எண்ணிக்கை; ஒரு செயலி எந்த அளவு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது எனும் எண்ணிக்கையை கவனியுங்கள். லட்சக்கணக்கில் இந்த எண்ணிகை இருந்தால் பரவலாக அந்த செயலி பயன்படுத்துப்படுவதாக கொள்ளலாம். சில நூறு பேர் மட்டுமே பயன்படுத்தும் செயலி போலியாக இருக்கும் வாய்ப்பு அதிகம். அதே போல செயலி அறிமுகமான காலத்தையும் கவனிக்க வேண்டும். சில அண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகியும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படவில்லை எனில் அந்த செயலி குறித்து எச்சஎரிக்கையாக இருக்க வேண்டும்.

இவைத்தவிர, ஒரு செயலியை கவனத்தை ஈர்த்ததும், அது தொடர்பான தகவலை இணையத்துல் தேடிப்பார்க்கவும். தொழில்நுட்ப விமர்சன தளங்களில் அந்த செயலி பற்றிய விமர்சனங்கள், அறிமுக செய்திகள் இருக்கின்றனவா ? என பார்க்க வேண்டும். அதிகாரபூர்வ செயலி என்றால் அவை தொடர்பான செய்திகளை ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் பார்க்கலாம்.

,

https _blueprint-api-production.s3.amazonaws.com_uploads_card_image_815700_b13704aa-55d6-421e-bdef-b4fa2112aa2bதளம் புதிது: நீங்களும் அனிமேஷன் உருவாக்கலாம்!

பல இணையதளங்களில் அருமையான அனிமேஷன் சித்திரங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். தகவல்களை சுவாரஸ்யமான முறையில் அளிக்கவும், தொழில்நுட்ப அம்சங்களை எளிதாக விளக்கவும் அனுமேஷன் சித்திரங்கள் பயன்படுகின்றன. யூடியூப் வீடியோக்களில் கூட அனிமேஷன் பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம்.

இப்படி நீங்களும் அனிமேஷன் சித்திரங்களை பயன்படுத்த விரும்பினால் அனிமேட்ரான் இணையதளம் உங்கள் சார்பில் அனிமேஷன் சித்திரங்களை உருவாக்கித்தருகிறது. இந்த தளத்தில் வீடியோ மற்றும் ஒளிப்படங்களை சமர்பித்து அனிமேஷன்களை உருவாக்கி கொள்ளலாம். இதற்காக பலவகையான டெம்பிளேட்கள் இருக்கின்றன.

கட்டணச்சேவை என்றாலும், அடிப்படை சேவை இலவசமானது. அனிமேஷன்களை உருவாக்கி கொள்வதோடு, ஆர்வம் உள்ளவர்கள் அனிமேஷன் அடிப்படைகளை தெரிந்து கொள்ளவும் இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். அனிமேஷன் வழிகாட்டி பாடங்களும் இருக்கின்றன.

இணையதள முகவரி: https://www.animatron.com/studio

தகவல் புதிது; பேஸ்புக்கின் டிஜிட்டல் கல்வி

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக், இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ’பேஸ்புக் டிஜிட்டல் லைப்ரரி’ எனும் திட்டத்தை துவக்கியுள்ளது. தனியுரிமை பாதுகாப்பு ( பிரைவஸி), இணையத்தில் அடையாளம், ஆன்லைன் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பாடங்கள் அமைந்துள்ளன. விளக்க வழிகாட்டி மற்றும் வீடியோ வடிவில் இவை அமைந்துள்ளன. இந்த பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் 45 மொழிகளில் இதை அளிக்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. இளம் பயனாளிகள் இணையத்தில் கவனமாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வழிகாட்டும் வகையில் இந்த பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பேஸ்புக் தளத்தில் உள்ள பாதுகாப்பு மைய வசதி மூலம் இந்த பாடங்களை அணுகலாம். இந்த ஆண்டு துவக்கத்தில் பேஸ்புக் இளைஞர்களுக்கான போர்டல் ஒன்றையும் தனது தளத்தில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்களும் இந்த பாடங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு: https://www.facebook.com/safety/educators/

செயலி புதிது; ரிலாக்ஸ் செய்ய வழிகாட்டும் கூகுள்

கூகுள் தேடல் வசதியில் பல்வேறு உப வசதிகள் புதைந்து கிடக்கின்றன. கூகுள் தேடல் வசதியிலேயே இணைய இணைப்பு வேகத்தை பரிசோதித்துக்கொள்ளலாம். ஏதேனும் ஒரு எண்ணை உருவாக்கி கொள்ளலாம். விலங்குகளின் குரலை கேட்கலாம். இப்போது இந்த பட்டியலில் முச்சுப்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். கூகுளில் முச்சுப்பயிற்சி (deep breathing) பற்றி தேடினால் பொருத்தமான தேடல் முடிவுகளோடு, ஒரு நிமிட பயிற்சி வழிகாட்டியும் முன் வைக்கப்படுகிறது. நீல நிறத்தில் இந்த கையோடு அமைந்துள்ளது. இதைப்பார்த்து ஒரு நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து இளைப்பாறலாம். டெஸ்க்டாப் தேடலிம் மட்டும் அல்லாது, செயலி வழி தேடலிலும் இந்த வசதியை அணுகலாம். ஒரு நிமிட வழிகாட்டலுக்கு பிறகு இதை மீண்டும் இயக்கலாம், அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

—–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.