கூகுளுக்கு வயது 20- இணைய உலகின் முன்னணி தேடியந்திரத்தின் கதை

1g3இருபது ஆண்டுகள் என்பது இணைய வரலாற்றில் மிகப்பெரிய காலம். இந்த காலத்தில் எத்தனையோ இணைய நிறுவனங்கள் உருவாகி விட்டன. அவற்றில் சில உச்சத்தை தொட்டு பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இணைய உலகில் சாம்ராஜ்யமாக இருந்த பல நிறுவனங்கள் சரிந்து காணாமல் போயிருக்கின்றன. இதற்கு மத்தியில் புதிய அலையாக வந்த நிறுவனங்களில் சில மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், தேடியந்திர நிறுவனமான கூகுள் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

20 ஆண்டுகளில் கூகுள், இணைய உலகில் தேடலுக்கான மறு பெயராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளதோடு, மாபெரும் இணைய சாம்ராஜ்யமாக வேரூன்றியிருக்கிறது. வர்த்தக நோக்கில் பார்த்தால் டிரில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இமெயிலில் ஆதிக்கம் செலுத்துகிறது, பிரவுசரில் குரோம் மூலம் கொடி கட்டிப்பறக்கிறது. ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு மூலம் செல்வாக்கு பெற்றிருக்கிறது. கூகுள் மேப்ஸ், கூகுள் எர்த், கூகுள் கீப் என எண்ணற்ற துணை சேவைகளோடு நெட்டிசன்களின் பெரும்பாலான தேவைகளுக்கான தீர்வை கொண்டிருக்கிறது.

துவக்கப்புள்ளி

20 ஆண்டுகால விஸ்வரூப வளர்ச்சியில், தனக்கான தாய் நிறுவனத்தை ( ஆல்பபெட்) பெற்றிருக்கும் கூகுள் இணைய உலகில் தவிர்க்க முடியாத பெயராகி இருக்கிறது. தனியுரிமை மீறல், அதிகப்படியான செல்வாக்கு போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், சராசரி நெட்டிசன்களைப்பொருத்தவரை இணையத்தில் தகவல் தேவையை கூகுலில் தேடு என்பதே இயல்பானதாக இருக்கிறது. ஒரு தேடியந்திரமாக கூகுள் பெரிய அளவில் ஏமாற்றத்தை அளிக்கவில்லை என்பது அது தனது தேடல் நுட்பத்தை எத்தனை அப்டேட்டாக வைத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

இந்த பிரம்மாண்ட வளர்ச்சி எப்படி சாத்தியமானது. அதை புரிந்து கொள்ள கூகுள் வெற்றிக்கதையை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்.

சென்னை பிரமுகரான, சுந்தர் பிச்சை சி.இ.ஓவாக இருந்து வழிகாட்டும் கூகுளை 20 ஆண்டுகளுக்கு முன் இரண்டு பட்டதாரி வாலிபர்கள் உருவாக்கினர். ஒரு நிறுவனமாக கூகுள் நிறுவப்பட்ட ஆண்டு 1998 ஆக இருந்தாலும், தேடியந்திரமாக அதன் விதை அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே விதைக்கப்பட்டது.

ஸ்டான்போர்டு மாணவர்கள்

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் தான் கூகுளை உருவாக்கிய பிரம்மாக்கள். துவக்கத்தில் அது செர்ஜியின் ஆய்வு திட்டமாக தான் உருவானது. அந்த கால கட்டத்தில் தான் பிரபலமாகி கொண்டிருந்த வலையின் வளர்ச்சியை பேஜ் ஆர்வத்தோடு கவனித்தார். குறிப்பாக அவருக்கு இணைய தேடலில் ஆர்வம் இருந்தது. அந்த காலத்து தேடியந்திரங்களான அல்டாவிஸ்டா, எக்ஸைட், லைகோஸ் போன்ற எல்லாமே அடிப்படையில் ஒரே உத்தியை தான் கடைப்பிடித்தன. இணையத்தில் உள்ள இணையதளங்களில் எல்லாம் ஸ்பைடர்ஸ் எனப்படும் மென்பொருள் சிலந்திகளை உலாவவிட்டு, அதில் கிடைக்கும் இணைய பக்கங்களை எல்லாம் தொகுத்து அட்டவனையாக்கி, இணையவாசிகளின் தேடல் பதத்திற்கு ஏற்ப பொருத்தமான முடிவுகளை பட்டியலிட்டன.

1gலார் பேஜ், இந்த அடிப்படை உத்தியை தன்னால் மேம்படுத்த முடியும் என நம்பினார். இணையத்தில் மென்பொருள் சிலந்திகள் உலாவும் போது, குறிப்பிட்ட இணைய பக்கம் வேறு எந்த பக்கங்களுக்கு எல்லாம் இணைப்புகளை கொண்டிருக்கிறது என்பதை அறிவதன் மூலம் அந்த தளத்தின் தரத்தை அளவிட முடியும் என்றும், அதனடிப்படையில் தேடல் முடிவுகளை வரிசைப்படுத்தி பட்டியலிட்டால் இன்னும் துல்லியமாக இருக்கும் என்பது தான் பேஜின் ஐடியா. அதாவது இணைய பக்கங்களின் பின்னிணைப்புகளை ( பேக் லிங்க்ஸ்) கவனித்தால் தேடல் முடிவுகளை செழுமை படுத்தலாம் என நம்பினார்.

அவரது சகாவான செர்ஜி பிரின் கணிதப்புலியாக இருந்தவர், இதற்கான சமன்பாடுகள் போன்றவற்றை கவனித்துக்கொள்ளவே இருவரும் சேர்ந்து நல்லதொரு தேடியந்திரத்திற்கான பேஜ் ரேங்க் எனப்படும் அல்கோரிதமை உருவாக்கினர். இது தான் கூகுளின் தேடல் சூத்திரமாக அமைந்தது. 1996 ல், இந்த தேடல் சேவையை ஸ்டாட்ன்போர்ட் பல்கலை வட்டத்தில் பேக்ரப் எனும் பெயரில் அறிமுகம் செய்தனர்.

தேடல் சேவை

அப்போது ஆர்வமுள்ள இரு இளைஞர்களின் உற்சாகமான ஒரு திட்டமாக மட்டுமே அது அமைந்தது. மற்றபடி அந்த தேடல் சேவை மிகப்பெரிய தேடியந்திரமாக உருவாகும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் அப்போது தான் வலையின் பன் மடங்கு வளர்ச்சி பெறத்துவங்கியிருந்தது. வலை வளரும் போது, இணையதளங்களின் பின்னினைப்புகளும் அதிகரித்து அதற்கேற்ப தங்கள் தேடல் சேவையின் துல்லியமும் அதிகரிக்கும் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்பட்டது. அந்த நம்பிக்கையில் தங்கள் தேடல் சேவையில் கூடுதல் கவனம் செலுத்த தீர்மானித்தனர். முதல் வேலையாக தேடியந்திரத்தின் பெயரை மாற்றினர்.

கணிதத்தில் 1 க்கு பிறகு 100 பூஜ்ஜியங்கள் வருவதை குறிக்கும் சொல்லான கூகோல் என்பதன் அடிப்படையில் கூகுள் என பெயர் வைத்தனர். இந்த புதிய நிறுவனத்தின் தலைமையகம் ஸ்டான்போர்டு பலகலையில் இருந்து சூசன் வோஜ்சிகி என்பவரது கேரேஜுக்கு மாறியது. ஆரம்ப கட்ட நிதியாக ஒரு லட்சம் டாலர் கிடைக்க கூகுள் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது.

அப்போது லைகோஸ், அல்டாவிஸ்டா, எக்ஸைட் போன்ற தேடியந்திரங்களோடு முன்னணி போர்ட்டலான யாஹுவும் தேடியந்திரமாக அறியப்பட்டது. பெரும்பாலானோர் யாஹுவையே பயன்படுத்தினர். பலரும் சிறந்த தேடல் முடிவுகளைப்பெற ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களை பயன்படுத்திப்பார்த்தனர். இதனிடையே அதிக ஆரவாரம் இல்லாமல் அறிமுகமான கூகுள், ஆச்சர்யப்படும் வகையில் மேம்பட்ட தேடல் முடிவுகளை அளித்து ஈர்க்கத்துவங்கியது. அதிலும் குறிப்பாக கூகுளின் முகப்பு பக்கம் ஆரப்பாட்டம் இல்லாமல் மிக எளிமையாக இருந்த நிலையில் அதன் தேடல் முடிவுகள் நச்சென அமைந்து அசத்தின.

வழிகாட்டி

gதேடியது கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளித்த கூகுள் மெல்ல வளரத்துவங்கியது. இந்த கால கட்டத்தில் தான் இளைஞர்களான பேஜ் மற்றும் பிரின், நிறுவனத்தில் தங்களுக்கு ஒரு வழிகாட்டி தேவை என அனுபவசாலியான எரிக் ஸ்கிமிட் எனும் அதிகாரியை தலைவராக கொண்டு வந்தனர். வளர்ச்சி வாய்ப்பு கொண்ட இளம் நிறுவனத்தை அனுபவசாலியான எரிக், வர்த்தக நோக்கில் முன்னேற வைத்தார்.

இதனிடையே இணைய உலகில் உச்சத்தில் இருந்த டாட்காம் நிறுவனங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக சரிய, டாட்காம் குமிழ் வெடித்துச்சிதறி இணைய நிறுவனங்கள் என்றாலே எட்டிக்காயாக கசுக்கும் சூழலும் உண்டானது. ஆனால் இந்த நெருக்கடிக்கு மத்தியில் கூகுள் சீரான வளர்ச்சியை பெற்றது. ஆனால், இப்போது கூட அது தன்னந்தனி தேடியந்திரமாக உருவாகிவிடவில்லை. அந்த காலத்தில்,இமெயில், செய்திகள், அரட்டை என  எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் வழங்கிய போர்ட்டல்களே பெரிய விஷயமாக இருந்ததால், தேடல் என்பது அவற்றில் ஒரு அங்கமாக மட்டுமே இருந்தது.

எனவே கூகுளுக்கும் இணையத்தில் ஒரு ஓரத்தில் தான் இடம் கிடைத்தது. முன்னணி போர்ட்டலான யாஹு பெருந்தன்மையோடு கூகுலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த தேடியந்திர வசதியை பயன்படுத்திக்கொண்டது. இந்த காலகட்டத்தில் தான், கூகுளை விலைக்கு வாங்குவது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்றது. யாஹு, கூகுளை அரை மனதோடு விலைக்கு வாங்க தயாராக இருந்தது. பேஜ் மற்றும் பிரின் விற்பதற்கு ரெடியாக இருந்தனர். ஆனால் விலை தான் படியவில்லை, யாஹு 3 பில்லியன் டாலர் என கறாராக இருந்தது. கூகுள் இரட்டையர்கள் தங்கள் தேடியந்திரம் 5 பில்லியன் டாலராவது பெறும் என நம்பினர். விளைவு, கூகுளை யாஹு வாங்கவில்லை. கூகுளுக்கு இந்த நிராகரிப்பே சாதகமாக அமைந்ததை வரலாறு நிருபித்தது.

2002 ல் இது நடந்த அடுத்த ஆண்டு கூகுள் பிளாகர் சேவையை கையகப்படுத்தியது. எல்லோரும் இந்நாட்டு மன்னரே என்பது போல இணையத்தில் எழுதுவதையும் பதிப்பிப்பதையும் சுலபமாக்கிய பிளாகிங் எனப்படும் வலைப்பதிவு வசதியை முதலில் அறிமுகம் செய்த முன்னோடி சேவைகளில் ஒன்றாக விளங்கிய பிளாகர், கூகுளின் கச்சிதமான தேர்வாக அமைந்தது. யூடியூப் உள்பட பின்னாளில் கூகுளுக்கு வெற்றிகரமாக அமைந்த எண்ணற்ற கையகப்படுத்தலுக்கான அருமையான துவக்கப்புள்ளியாக பிளாகர் அமைந்தது.

கூகுளின் வளர்ச்சி

இணைய உலகில் வலைப்பதிவின் செல்வாக்கும் வளர்ந்தது. கூகுளும் வளர்ந்தது. இதற்குள் தேடல் என்றால் கூகுள் என்ற பேச்சு வலுப்பெற துவங்கியிருந்தது. இன்னொரு பக்கத்தில் கூகுள், விளம்பரங்களுக்கான அட்சென்ஸ் சேவையை துவக்கி, வருவாய்க்கான வழியையும் தேடிக்கொண்டது. கூகுளைப்பொருத்தவரை ஆட்சென்ஸ் வருவாயை அளித்தரும் அம்சமானது.

2004 கூகுள் பங்குகளை வெளியிட்டு பொது நிறுவனமாக மாறியது. அதே ஆண்டு ஜிமெயில் சேவையை அறிமுகம் செய்தது. தேடல் தான் கோட்டையாக இருந்த கூகுளின் முதல் விரிவாக்கமாக இது அமைந்தது. அப்போது இமெயில் என்பது இணைய நிறுவனங்கள் வழங்கிய முக்கிய சேவைகளில் ஒன்றாக இருந்தது. அப்போது பிரபலமாக இருந்த யாஹு மெயில் மற்றும் ஹாட்மெயிலை தாண்டி கூகுள் மெயில் பக்கம் யாரும் வரமாட்டார்கள் என கருதப்பட்டது. ஆனால் கூகுள் வேறு உத்தி வைத்திருந்தது. இணைய உலகில் இல்லாத வகையில் 1 ஜிபி சேமிப்புத்திறனோடு ஜிமெயிலை அறிமுகம் செய்தது. இது ஏதோ ஏமாற்று உத்தியோ என நினைக்க வைக்கும் அளவுக்கு ஏப்ரல் 1 ம் தேதி ஜிமெயில் அறிமுகமானது. அதன் எளிமை, வேகம் மற்றும் கொள்திறன் இணையவாசிகளை கவரவே பலரும் ஜிமெயிலுக்கு மாறத்துவங்கினர்.

2004 ல் புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்கும் கூகுள் புக்ஸ் சேவையை துவக்கியதோடு 2005 ல் கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் எர்த் சேவையை களமிறக்கியது. 2006 ல் யூடியூப் தளத்தை விலைக்கு வாங்கியது. 2007 ல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை விலைக்கு வாங்கி, ஸ்மார்ட்போன் எதிர்காலத்தில் தன் பங்கிற்கான இடத்தை துண்டு போட்டு பிடித்துக்கொண்டது. 2008 ல் கூகுள் குரோம் பிரவுசர் அறிமுகமானது. அதன் பின் பிரவுசர் சந்தையும் பெருமளவு கூகுள் வசமானது.

விஸ்வரூபமும், விமர்சனமும்

அக, பத்தாண்டுகளில் கூகுள் இணைய உலகின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாக உருவாகி இருந்தது. அடுத்த பத்தாண்டுகளில் கூகுளின் வளர்ச்சி விஸ்ரூப வளர்ச்சியாக அமைந்தது. தேடல் என்பதற்கான மறு பெயராக அமைந்ததோடு, கூகுல் எனும் பதமே தேடலுக்கான வினைச்சொல்லாக மாறியது. இடையே சமூக வலைப்பின்னல் பிரிவில் மட்டும் கோட்டை விட்ட கூகுள், மற்ற பெரும்பாலான பிரிவுகளில் அபார வளர்ச்சி பெற்று தனது ஆதிக்கத்தை வலுவாக்கி கொண்டது. இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூகுள் எனக்கு எதிராக தேடல் முடிவுகளை வடிகட்டுகிறது என புகார் செய்யும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருக்கிறது. தேடல் உலகில் கூகுளின் செல்வாக்கு அச்சுறுத்துவதாக அமைந்திருக்கிறது என இணைய வல்லுனர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

கூகுள் மீது கூறப்படும் மற்றொரு குற்றச்சாட்டு விளம்பர வருவாய்க்காக தேடல் உள்ளிட்ட தனது சேவைகளின் ஆதிக்கத்தை பயன்படுத்தி இணையவாசிகள் தொடர்பான தகவல்களை வளைத்து வளைத்து திரட்டுவது தனியுரிமை மீதான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐரோப்பாவில் தனியுரிமை விஷயத்தில் கூகுள் மீது வழக்கு இருக்கிறது. தீயதை செய்ய மாட்டோம் என்பதை ஆதார கோஷமாக கொண்டு வளர்ந்த கூகுள் தனியிரிமை விஷயத்தில் ஆழமான விமர்சனங்களுக்கு இலக்காகி வருகிறது. வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் இந்த விமர்சனங்களுக்கு கூகுள் எப்படி எதிர்வினை புரிகிறது என்பது அதன் எதிர்காலத்தை மட்டும் அல்ல, இணையத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

நன்றி; தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.