சமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்?

Untitled-design-2-10-796x417நீங்கள் சுயபரிசோதனைக்கு தயாராக இருக்கிறீர்களா? எனில் சமூக ஊடகங்களுக்கு கொஞ்சம் காலம் விடுமுறை அளிப்பது பற்றி யோசிக்கலாம். அதாவது ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ சமூக ஊடகங்களை பயன்படுத்தாமல் இருந்து பார்க்கலாம். எதற்காக இந்த பரிசோதனை? சமூக ஊடகம் நம் வாழ்வில் எத்தகைய தாக்கம் செலுத்துகின்றன என்பதை புரிந்து கொள்வதற்காக தான்.

இத்தகைய பரிசோதனையை மேற்கொள்வதற்கு உங்களுக்கு ஊக்கம் தேவை எனில், இதே போன்ற பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த கருத்துகள் சமூக ஊடக பயன்பாடு தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை தெரிவிப்பதோடு, சமூக ஊடக பயன்பாடு பற்றிய புதிய புரிதலையும் ஏற்படுத்துகின்றன.

பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நாமெல்லாம் அறிந்தது தான். நம்மில் பலர் சமூக ஊடகங்களுக்கு அடிமையாக கிடக்கிறோம் என்று கூட சொல்லலாம். இது தொடர்பாக பல ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் நடத்தப்பட்டு ஒரு ஆய்வு ,ஸ்மார்ட்போன் பயனாளிகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 90 நிமிடங்கள் இணையத்தில் செலவிடுவதாக தெரிவிக்கிறது.

இதே போல இணைய இதழான கான்வர்சேஷன் சார்பில் அண்மையில், 50 பயனாளிகள் மத்தியில் விரிவான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவருமே, சமூக ஊடகங்கள் அல்லது செல்போனை பயன்படுத்துவதை கைவிட்டவர்கள். ஒரு சிலர் இமெயில் கூட வேண்டாம் என்று இருப்பவர்கள்.

இன்றைய உலகில் இப்படியும் இருக்க முடியுமா? எனும் வியப்பை ஏற்படுத்தும் இத்தகைய பயனாளிகளை உலகம் முழுவதும் தேர்வு செய்து அவர்களிடம் சமூக ஊடக பயன்பாடு சார்ந்த கேள்விகளை கேட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த பயனாளிகள் சமூக ஊடக பயன்பாட்டை கைவிட தீர்மானிதத்து ஏன்? மற்றும் இதை அவர்கள் எப்படி சமாளிக்கின்றனர் ஆகிய கேள்விகளை மையமாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் போக்கில் பயனாளிகள் தெரிவித்துள்ள அனுபவங்களும், கருத்துகளும் முக்கியமாக அமைகின்றன.

சமூக ஊடகங்களில் உள்ள முக்கிய பிரச்சனை என்ன தெரியுமா? பெரும்பாலும் அவற்றை நாம் தகவல் தொடர்பிற்கு பயன்படுத்துவதில்லை என்பது தான். அதற்கு பதிலாக, குறிப்பிட்ட விதத்தில் தொடர்பில் இருப்பதை தான் அவை ஊக்குவிக்கின்றன. மேலும் இணைய நிறுவனங்களும் பயனாளிகளிடம் இருந்து தரவுகளை திரட்ட குறிப்பிட்ட வகையான தொடர்புகளையே ஊக்குவிக்கின்றன என்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள முக்கிய விஷயமாகும்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தாமல் இருந்ததால், பேச்சு, தொடுதல், உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆகியவை சார்ந்த சமூக உறவுகளை வளர்த்துக்கொள்ள முடிந்துள்ளதாகவும் பயனாளிகள் தெரிவித்துள்ளனர். மனித பிணைப்பு மற்றும் தொடர்பை உணர முடிவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அனுபவம் தனிப்பட்ட முறையில் மட்டும் அல்ல, சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

சமூக ஊடக பயன்பாட்டில், உண்மையில் சமூகம் என்பது என்ன எனும் கேள்வியையும் எழுப்பிக்கொள்ள முடிவதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கான நண்பர்களை பெற்றிருப்பதை விட, நேரில் பார்த்து உரையாடி மகிழக்கூடிய ஒரு சில நண்பர்கள் உறவுகளை வளர்த்துக்கொள்ள உதவியாக இருப்பார்கள் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

சமூக ஊடகத்தை துண்டிக்கும் போது துவக்கத்தில் கஷ்டமாக தான் இருக்கும் என்றாலும், இதனால் எதையும் தவறவிடவில்லை என்பதை வெகு விரைவில் உணரலாம் என்பதும் இவர்களின் அனுபவமாக இருக்கிறது. சமூக தொடர்பை கைவிட்டவர்கள் சோகமாக உணரவில்லை. மாறாக, திரையில் இருந்து விலகி நிஜ உலக நண்பர்கள் மீது கவனத்தை திருப்பியது உலகுடனான பிணைப்பை அதிகமாக்கி, அன்பானவர்களை மேலும் ஆழமாக உணர வைத்துள்ளது.

திரையில் இருந்து விலகியவர்கள் தங்களுக்கான நேரத்தையும் அதிகம் பெற்றுள்ளனர். அவர்கள் உடலும், மனமும் அமைதியை உணர்ந்துள்ளன. இரவில் நல்ல தூக்கத்தை பெற்றுள்ளனர். போன் மற்றும் செயலிகள் பற்றி கவலைப்படாமல் மன அமைதியையும் உணர்ந்துள்ளனர். சமூக ஊடகங்களுக்கு விடை கொடுத்ததன் மூலம், அவர்கள் சமூக தன்மைக்கு விரோதமான தன்மையை பெறவில்லை. மாறாக எப்போது, யாருடன் தொடர்பு கொள்வது என்பதை தீர்மானிக்க கூடியவர்களாக இருந்திருக்கின்றனர். மொத்தத்தில் அவர்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சுவாரஸ்யமாக மட்டும் அல்ல சிந்தனைக்கு உரிய செய்தாகவும் இந்த ஆய்வு அமைகிறது அல்லவா? அது தான், நீங்களே கூட உங்கள் வாழ்க்கையில் இதை செயல்படுத்தி பார்க்கலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *