இனியும் வேண்டாம் கூகுள்!

2gஇணைய உலகில் தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படுகிறது. தேடல் தவிர கூகுள் இன்னும் பிற சேவைகளையும் வழங்கி வருகிறது. இமெயில், பிரவுசர், எழுதி, சேமிப்பு, வரைபடம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட துணை சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. இவற்றில் பல பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நீங்களும் இவற்றை பயன்படுத்திக்கொண்டிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், கூகுள் சேவை மீது பலவிதமான தனியுரிமை மீறல் புகார்கள் கூறப்படுகின்றன. அண்மையில் கூட, ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம், இருப்பிட தகவல்களை பகிர விருப்பமில்லை என தெரிவித்த பயனாளிகளின் இருப்பிட தகவல்கள் கூகுள் சார்பில் சேகரிக்கப்பட்டதாக ஒரு சர்ச்சை வெடித்தது. இது போன்ற காரணங்களுக்காக கூகுளுக்கான மாற்று சேவையை தேடுபவராக நீங்கள் இருந்தால், ’நோமோர்கூகுள்’ தளம் (https://nomoregoogle.com), அனைத்து பிரிவுகளிலும் கூகுள் வழங்கும் சேவைகளுக்கு மாற்று சேவைகளை பட்டியலிடுகிறது.

தேடலுக்கு பதிலாக டக்டக்கோ, குரோமுக்கு பதில் விவால்டி அல்லது பயர்பாக்ஸ் என பலவித சேவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கூகுள் சேவைக்கு மாற்று சேவைகளை அறிய அல்லது கூகுளின் ஆதிக்கத்தை புரிந்து கொள்ள நிச்சயம் இந்த தளத்திற்குள் எட்டிப்பார்க்க வேண்டும். பயன்படுத்துவது உங்கள் விருப்பம்!

(செயலி புதிது)

புகைப்பட திருத்த செயலி

புகைப்பட திருத்த சேவையை வழங்கி வரும் போலர் நிறுவனம், டீப் கிராப் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் இந்த செயலி, பயனாளிகளுக்கு தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் போலவே புகைப்படங்களை திருத்திக்கொள்ளும் வசதியை அளிக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சித்து இந்த செயலியை உருவாக்கியுள்ளதாக போலர் நிறுவனம் தெரிவிக்கிறது,. செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித மூளையின் திறன் இரண்டும் இணைந்த கலைவையாக இது இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயலியை இயக்கியவுடன், காமிரா ரோலில் உள்ள எல்லா படங்களையும் காணலாம்,. அவற்றின் மீது கிளிக் செய்தால், பலவித திருத்த விகிதங்கள் பரிந்துரைக்கப்படும். அவற்றில் இருந்து தேர்வு செய்து படங்களை மெருகேற்றி பகிர்ந்து கொள்ளலாம். முதல் கட்டமாக ஐபோன்களுக்கு என்று அறிமுகம் ஆகியுள்ளது,.

மேலும் தகவல்களுக்கு: https://www.polarr.co/editor/0

(தகவல் புதிது)

இணையம் எதிர்மறையான விஷயங்களையும் கொண்டிருப்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் எதிர்மறையான சங்கதிகள் பயனாளிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் கவலை தரும் தகவல் இப்போது வெளியாகியுள்ளது. சிமிலர் வெப் எனும் இணைய நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி அமெரிக்க பயனாளிகள் மத்தியில், ஆபாசமான தளங்கள், பல ஷாப்பிங் மற்றும் சமூக வலைப்பின்னல் சேவை தளங்களை விட முன்னணியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் உள்ள இரண்டு தளங்கள், டிவிட்டர் மற்றும் விக்கிபீடியா தளங்களையே பின்னுக்குத்தள்ளிவிட்ட என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆபாச தளங்களுக்கு ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்த செய்தி தான் என்றாலும் அவை இந்த அளவு பிரபலமாக இருக்கும் என்பது எதிர்பார்க்காதது. ஆனால் நல்லவேளையாக கூகுளும், பேஸ்புக்கும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அதன் பிறகு யூடியூப்பும், அமேசானும் உள்ளன.

(தொழில்நுட்பம் புதிது)

உள்மனம் அறியும் ஷாப்பிங் கார்ட்

செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை உருவாக்கிவதில் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அமெரிக்க சூப்பர் மார்க்கெட் ஜாம்பவான் நிறுவனமான வால்மார்ட், அதிநவீன ஷாப்பிங் கார்ட் ஒன்றுக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது.

இந்த ஷாப்பிங் கார்ட், வாடிக்கையாளரின் இதயத்துடிப்பு மற்றும் அவர் கைப்பிடியை பிடித்திருக்கும் விதம்,வெப்ப நிலை ஆகிய விவரங்களை உணர்ந்து கொள்ளக்கூடியதாம். இந்த தகவல்களை வைத்துக்கொண்டு, வாடிக்கையாளர் மன அழுத்தம் மிக்கவராக இருக்கிறாரா? அவருக்கு உதவி தேவையா என பணியாளர்கள் தீர்மானிக்க முடியும். மருத்துவ அவசர நிலையின் போதும் இந்த ஷாப்பிங் கார்ட் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த தகவல்கள் எதுவும் பயனாளிகளுடன் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணப்படாமல் இருக்கும் என்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஒரு தள்ளுவண்டி மூலம் நிறுவனங்களால் இந்த அளவு தகவல் சேகரிக்க வாய்ப்புள்ளதே திகைக்க வைக்கும் விஷயம் தான் இல்லையா!

(கேட்ஜெட் புதிது)  

சீனாவில் ஜியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் தவிர வேறு பல பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் நிறுவனம் எம்.ஐ சூட்கேஸ்களை அறிமுகம் செய்துள்ளது. 20 அங்குலம் மற்றும் 24 அங்குல அளவில் இரண்டு சூட்கேஸ்கள் அறிமுகம் ஆகியுள்ளன. இவை சேலான கணத்துடன், எளிதாக கொண்டு செல்லப்படும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூட்கேசுக்குள் அதிக இட வசதி இருக்கும் அளவுக்கும் வடிவமைப்பு அமைந்துள்ளது. சக்கரங்கள் மற்றும் அழகிய கைப்பிடியையும் கொண்டுள்ளது. இவற்றின் விலை ரூ.2,999 மற்றும் ரூ.4,299. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ இணையதளம் மூலம் பத்தாம் தேதியில் இருந்து வாங்கலாம். இதனிடையே ஜியோமி நிறுவனம் சீனாவில் சுட்டீஸ்களுக்கான சூட்கேஸ்களையும் எம்.ஐ பிராண்ட் கீழ் அறிமுகம் செய்துள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.