டிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை

productஇது ஸ்டார்ட் அப்களின் காலம். அதோடு, எப்படியும் நாம் சிறிய நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை கொண்டாடியாக வேண்டும். அவை தான் வளர்ச்சிக்கான ஊற்றுக்கண் கொண்டுள்ளன.
சிறிய, புதிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மிகவும் தேவை நல்ல குழு, அதாவது பணியாளர்கள். நிறுவன குழுவிடையே ஈடுபாடும் அர்ப்பணியும் கொண்ட புரிதலும் ஒத்துழைப்பும் அவசியம். மகிழ்ச்சி என்னவெனில் இதற்கு உதவக்கூடிய இணையதளங்களும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன.
சிறிய குழுக்கள் தங்களிடையே தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளவும், ஆலோசனைகளை நிகழ்த்திக்கொள்ளவும் வழி செய்யும் அருமையான இணைய மென்பொருள் சேவைகள் பல இருக்கின்றன. இந்த வரிசையில், வொர்க்ஸ்டைல்.இயோ (https://www.workstyle.io) அறிமுகம் ஆகியுள்ளது.
ஒரு நிறுவனத்தில் குழுவாக பணியாற்ற வேண்டும் எனில் அதற்கு ஊழியர்கள் இடையே நல்ல புரிதல் தேவை அல்லவா? அந்த புரிதலை ஏற்படுத்திக்கொள்வதற்கான சேவையை தான் வொர்க்ஸ்டைல் வழங்குகிறது.
வொர்க்ஸ்டைல் தளத்தில் நிறுவன தலைவர் உள்ளிட்ட ஊழியர்கள் தங்களுக்கான அறிமுக சித்திரத்தை உருவாக்கி கொள்ளலாம். அதாவது இணைய மொழியில் அவர்களுக்கான புரபைல் பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம். பின்னர் இந்த அறிமுக பக்கத்தில் உள்ள தகவல்கள் அடிப்படையில், ஊழியர்கள் தங்களுக்குள் உரையாடல் நடத்தி ஒவ்வொருவரின் பணி பாணியை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.
ஊழியர்களுக்கான அறிமுக சித்திரத்தை இந்த தளம் சிறந்த முறையில் உருவாக்கித்தருகிறது. பணி சூழல் தொடர்பான ஆய்வு அடிப்படையில் உருவாக்கப்பட்ட கேள்வி பதில்களை அடிப்படையாக கொண்டு அறிமுக சித்திரத்தை ஏற்படுத்தி தருகிறது.
இதற்கான செயல்முறையே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒவ்வொரு ஊழியரும் இதற்காக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அந்த பதில்களின் அடிப்படையில் அறிமுகம் அமையும். ஓய்வு நேரங்களில் செய்ய விரும்புவது என்ன? என்பது போன்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
இது தவிர உங்களை எப்படி வர்ணித்துக்கொள்வீர்கள் எனும் கேள்வியும் கேட்கப்படுகிறது.
பணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும் அல்லவா? அந்த வகையில் ஆறு அடிப்படையான பணி பாணியில் ஒவ்வொருவரது பாணியும் கண்டறியப்பட்டு அறிமுகத்தில் முன்னிறுத்தப்படுகிறது. தகவல் தொடர்பில் வல்லவரா? ஊக்கம் நிறைந்தவரா? பொழுதுபோக்கு பழக்கம் கொண்டவரா? எனும் அடிப்படையில் இது அமைகிறது.
இந்த அம்சங்கள் நிச்சயம் ஊழியர்கள் மத்தியில் ஆர்வத்தையும் புரிதலையும் உண்டாக்கும். ஊழியர்கள் தயக்கத்தை உடைத்துக்கொண்டு உரையாடுவதற்கான ஆரம்ப கேள்விகளும் முன்வைக்கப்படுகிறன.
கட்டண சேவை தான். ஆனால் முன்னேற்றத்தை விரும்பும் சிறிய குழுக்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
இணையதளம்: https://www.workstyle.io/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.