இணைய பிரச்சாரத்தில் அதிபரான நகைச்சுவை நடிகர்

000_1FU0DB-640x400நடிகர்களை நாடாள தேர்வு செய்த தேசங்களின் பட்டியலில் உக்ரைனும் சேர்ந்திருக்கிறது. அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில், நகைச்சுவை நடிகரான விலாதிமீர் ஜெலென்ஸ்கி அமோக வெற்றி பெற்று அதிபராகி இருக்கிறார். ஜெலெஸ்கியின் வெற்றியை சர்வர்தேச சமூகம் வியப்புடனும், லேசான திகைப்புடனும் பார்க்கும் நிலையில், உள்நாட்டிலே கூட மக்கள் அவரது வெற்றியை நம்ப முடியாத தன்மையோடு கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

ஜெலென்ஸ்கியின் வெற்றி, இதுவரையான அரசியல் பாடங்களை எல்லாம் தலைகீழாக திருப்பி போட்டிருப்பது தான் வியப்புக்கு முக்கிய காரணம். அதைவிட முக்கியமாக அவர் பிரச்சாரம் செய்த விதம் தான் கவனத்தை ஈர்த்து, இப்படியும் வெற்றி பெற முடியுமா? என பேச வைத்திருக்கிறது.

தேர்தல் அதிலும் அதிபர் தேர்தல் என்றால் அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கும், சூடான விவாதங்களுக்கும் கேட்கவா வேண்டும். அதோடு பேரணி, பொதுக்கூட்டங்கள், அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள் என தேர்தல் களம் களை கட்டும். ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் அதிகம் இல்லாமல், தொலைக்காட்சித்தொடர் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகரான ஜெலென்ஸ்கி அனாயிஸமாக ஜெயித்து வந்திருக்கிறார்.

பிரச்சாரம் செய்யாமலே ஒருவரால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று சொல்வதை நம்ப முடியாமல் இருக்கலாம். ஜெலென்ஸ்கி பிரச்சாரம் செய்தார். ஆனால் அது வழக்கமான பாணி பிரச்சாரம் இல்லை. அவர் அலட்டிக்கொள்ளாமல் பிரச்சாரம் செய்ததோடு, பெரும்பாலும் இணையம் வாயிலாகவே பிரச்சாரம் செய்தார். வாக்காளர்களை அவர் நேரில் சந்திக்கவில்லை. மாறாக, யூடியூப் வீடியோக்கள் வாயிலாகவும், இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலமும் தொடர்பு கொண்டார்.

இணையம் ஆதிக்கம் செலுத்தும் டிஜிட்டல் யுகத்தில், தேர்தலில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் இணையத்தை பிரச்சார கருவியாக பயன்படுத்துவது இப்போது இயல்பாகி விட்டது. இணையத்தின் ஆற்றலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தனி கவனம் செலுத்துவதும் சகஜமாகி இருக்கிறது. ஆனால், முழுக்க முழுக்க இணையத்தை மட்டும் நம்பி யாரும் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றதில்லை. ஜெல்ன்ஸ்கி அதை செய்திருக்கிறார்.

ஜெலென்ஸ்கி வெற்றி பெற்ற விதத்தை புதுமையான கோணத்தில் அலசி ஆராய்ந்து கட்டுரை வெளியிட்டுள்ள பொலிட்டிகோ இணைய இதழ், உலகின் முதல் மெய்நிகர் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்தி அவர் அதிபராகி இருப்பதாக பாராட்டியிருக்கிறது. ஜனநாயக நாடு ஒன்றை தலமையேற்று நடத்தை மிக குறைந்தபட்ச அளவில் தயாரான நிலையில் அவர் இருப்பதாகவும் வர்ணித்துள்ளது.

ஜெலென்ஸ்கியின் இந்த வெற்றிக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்று உக்ரைன் மக்கள், ஆட்சியில் இருந்த அதிபர் போர்ஷென்கோ மீதும், அந்நாட்டில் மலிந்திருந்த ஊழல்களாலும் வெறுத்துப்போயிருந்தனர். அவர்கள் மாற்றத்திற்கு ஏங்கினர். அதே நேரத்தில் நகைச்சுவை நடிகரான ஜெலென்ஸ்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார். மக்கள் அவரை ’மக்களின் சேவகனாக’ அறிந்திருந்தனர்.

ஆம், மக்களின் சேவகன் (“Servant of the People”) எனும் தொலைக்காட்சி தொடர் தான் ஜெலென்ஸ்கியை உக்ரைன் மக்களின் நம்பிக்கை நாயகனாக உருவாக்கியிருந்தது. அந்நாட்டின் பிரபலமான 1+1 தொலைக்காட்சியில் மாதக்கணக்கில் ஒளிபரப்பான இந்த தொடரில், அவர் தற்செயலாக அதிபராகும் பாத்திரத்தில் நடித்திருந்தார். கதைப்படி ஆரிசியரான அவர் ஊழலுக்கு எதிராக வெளியிடும் கருத்துக்களை மாணவர் ஒருவர் இணையத்தில் வீடியோவாக வெளியிட, அந்த வீடியோ வைரலாகி இறுதியில் அவர் நாட்டின் அதிபராகி விடுகிறார்.

இன்று உக்ரனில் இதுவே நிஜமாகவும் ஆகியிருக்கிறது. ஜெலென்ஸ்கி அவர் நடித்த தொலைக்காட்சி தொடர் போலவே நாட்டின் அதிபராகிவிட்டார்.

க்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைவிய சூழலில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தனக்கு உண்டாகியிருந்த செல்வாக்கை பயன்படுத்திக்கொள்ள விரும்பி ஜெலென்ஸ்கி அதிபர் தேர்தலில் குதித்தார். இது வரை வழக்கமான அரசியல் ஸ்கிரிப்ட் தான். ஆனால் இதன் பின்னர் நடந்தவை தான் சற்றும் எதிர்பாராத திருப்பங்களாக அமைந்தன.

static.politico.comஜெலென்ஸ்கி எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் தேர்தலை சந்தித்தார். அரசியலுக்கு வந்துவுடன் அவர் அரசியல்வாதியாக மாறிவிடவில்லை, நடிகராகவே தொடர்ந்தார். நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டே தான் பிரச்சாரத்தை தொடர்ந்தார். புத்தாண்டு கொண்ட்டாட்டத்தின் போது தான் ஜெலென்ஸ்கி தேர்தலில் போட்டியிடும் முடிவை அறிவித்தார். வீடியோ வாழ்த்து வழியே இந்த முடிவை அறிவித்திருந்தார்.

அவர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசம் என அதற்கு முன்னரே, தகவல்கள் வெளியாகி இருந்தது நிலையில் அவர் களத்தில் இறங்கினார். செல்வாக்கு மிக்க நடிகர் அரசியலுக்கு வரும் போது இருக்கும் எதிர்பார்ப்பை பயன்படுத்திக்கொண்டு, பேரணி, மாநாடுகள், பொதுக்கூட்டம் என வரிசையாக நடத்தி மக்கள் ஆதரவை திரட்டுவது தான் வழக்கம்.

ஜெலென்ஸ்கி இந்த பாதையில் இருந்து விலகி நின்றார். நான்கு மாத கால தேர்தல் பிரச்சாரத்தில் அவர் வாக்காளர்களை நேரடியாக சந்திக்காமல், சின்ன சின்ன யூடியூப் வீடியோக்கள், இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் வழக்கமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமே மக்களை ஈர்த்தார். இந்த வீடியோக்கள் ஹிட்களை அள்ளி தெறிக்கவிட்டன. விவாதத்திற்கு அவர் அழைப்பு விடுத்து வெளியிட்ட வீடியோ ஒன்று மட்டும் 14 மில்லியன் பார்வைகளை பெற்றது என்கின்றனர். ( இந்த விவாதத்தை கூட கடைசி நேரம் வரை தாமதமாக்கினார்).

ஒரு பக்கம் இணையத்தின் மூலம் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், இன்னொரு பக்கம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தார். முதல் கட்ட பிரச்சாரத்தின் போது, தனது தொலைக்காட்சி தொடருக்கான அடுத்த எபிசோட்களை தயார் செய்வதில் கவனம் செலுத்தினார். ஆனால் ஒன்று, இந்த சுற்றுப்பயணத்தின் போது தனது திரைப்பாத்திரத்தின் செல்வாக்கை அவர் அழகாக பயன்படுத்திக்கொண்டார்.

வழக்கமான பாணியில் ஆர்ப்பாட்டமான பிரச்சாரத்தை தவிர்த்ததோடு, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, வாக்குறுதிகளை அளிப்பதிலும் அவர் வியக்க வைத்தார். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பது பற்றி எல்லாம் அவர் பெருமை அடித்துக்கொள்ளவில்லை. முக்கிய பிரச்சனைகளில் தனது நிலப்பாடு அல்லது கொள்கை முடிவு குறித்த்தெல்லாம் அவர் கவலைப்படவில்லை. தனக்கென அரசியல் ஆலோசகர்களை நியமித்துக்கொள்ளவும் இல்லை. உக்ரைனுக்கு, ரஷ்யாவுக்கும் இடையே பெரும் பிரச்சனை நிலவி வரும் நிலையில், அவர் வெளியுறவு கொள்கை பற்றி கூட பெரிதாக வாய் திறக்கவில்லை.

இப்படி வித்தியாசமாக பிரச்சாரம் செய்தவர், செய்தியாளர்களை மட்டுமா நேரில் சந்தித்திருப்பார். அதையும் தவிர்த்தார். தயவு செய்து ஊடகங்களை சந்தியுங்கள் என அந்நாட்டு பத்திரிகையாளர்கள் மன்றாடும் நிலையை ஏற்படுத்தியிருந்தார்.

எல்லாவற்றையும் மீறி அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அசர வைத்திருக்கிறார். ஊழல், உள்நாட்டு பிரச்சனைகளால் நொந்து போயிருந்த உக்ரைன் மக்கள், அவரை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர். அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளால் பெரும் ஏமாற்றம் அடைந்திருந்த மக்கள், அதை செய்துவிடுவேன், இதை செய்து விடுவேன் என்று எதையும் சொல்லாத நேர்மையாகவே ஜெலென்ஸ்கியை தேர்வு செய்தது போல இருக்கிறது.

இணைய யுகத்தில், மக்கள் அதிருப்தி எப்படி அமைதி புரட்சியாக வெடிக்கும் என்பதற்கு உதாரணமாக ஜெலென்ஸ்கியின் வெற்றி அமைந்திருக்கிறது. ஆனால், இனி தான் அவருக்கு சவாலே காத்திருக்கிறது. அரசியல் அனுபவமே இல்லாமல் அவர் வெற்றி பெறுவது சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் அரசாள அது கைகொடுக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி.

தேர்தல் வெற்றிக்குப்பின், உங்களை கைவிட மாட்டேன் என்று மட்டுமே ஜெல்ன்ஸ்கி அடக்கமாக கூறியிருக்கிறார். என்ன செய்கிறார் என்று பார்க்க்லாம் என்று உக்ரைன் மட்டும் அல்ல அகில உலகும் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.

ஜெலென்ஸ்கி பிரச்சாரம் பற்றிய கட்டுரை: https://www.politico.com/magazine/story/2019/04/24/ukraine-president-virtual-campaign-226711

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.