டிஜிட்டல் டயரி! – டக்டக்கோவை அங்கீகரித்த கூகுள்!

டக்டக்கோவை ஒரு மாற்று தேடியந்திரமாக கூகுளே ஒப்புக்கொண்டிருக்கிறது தெரியுமா? அதனால் தான் குரோம் பிரவுசரின் புதிய பதிப்பில், மாற்று தேடியந்திரமாக டக்டக்கோவை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை சத்தமில்லாமல் வழங்கியுள்ளது. இந்த செய்தியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முதலில் டக்டக்கோ பற்றி அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். டக்டக்கோ ஒரு தேடியந்திரம்- மாற்று தேடியந்திரம்!. பிரைவஸி பாதுகாப்பு தான் அதன் பலம். அந்த காரணத்திற்காக தான் கூகுளுக்கு மாற்றாக அதை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

ஆம், டக்டக்கோ இணையத்தில் உங்களை பின் தொடர்வதில்லை என உறுதி அளிக்கிறது. உங்கள் தேடல் முடிவுகளை கண்காணிப்பதில்லை என்றும் சொல்கிறது. இந்த அம்சத்தை பக்கபலமாக வைத்துக்கொண்டே அது மாற்று தேடியந்திரங்களில் முதன்மையானதாக வளர்ந்திருக்கிறது.

கூகுள் எல்லாம் வல்ல தேடியந்திரம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது எல்லாம் அறிந்த தேடியந்திரமுமாகவும் இருப்பது தான் பிரச்சனை. ஆம், கூகுள் நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பதை கவனித்துக்கொண்டே இருக்கிறது. இணைய உலகில் உங்கள் தேடல் அடிச்சுவடு ஒவ்வொன்றையும் கூகுள் குறித்து வைத்துக்கொள்கிறது. நீங்கள் தேடும் விஷயங்களுக்கு பொருத்தமான விளம்பரத்தை அளிப்பதற்காக கூகுள் இவ்வாறு தகவல்களை சேகரித்தாலும், தன்னை நாடு வரும் ஒவ்வொருவரின் தேடல் வரலாற்றை அது உருவாக்கி வைத்துக்கொள்வது பிரைவஸி கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. உங்களைப்பற்றி கூகுளுக்கு என்ன எல்லாம் தெரியும் என்பது உங்களுக்கேத்தெரியாது.

ஆனால், டக்டக்கோ இப்படி எல்லாம் செய்வதில்லை. பத்தாண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான காலத்தில் இருந்து அது இணையவாசிகளின் பிரைவஸிக்கு மரியாதை அளித்து வருகிறது. இணைவாசிகளின் தேடல் தொடர்பான எந்த தகவலையும் அது சேமித்து வைப்பதில்லை. அதனால் தான், இணைய உலகில் உங்களை பின் தொடர்வதில்லை என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறது. தகவல்களை சேகரிக்காத தன்மையே மாற்றுத்தேடியந்திரமாக டக்டக்கோவை நிலை நிறுத்தியுள்ளது.

பேஸ்புக் அனலிடிகா பிரச்சனைக்குப்பிறகு, இணைய உலகில் எப்படி எல்லாம் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு நிலையில், கூகுளுக்கு மாற்று என்ற முறையில் டக்டக்கோவிற்கான மதிப்பும் கூடியுள்ளது. இதை கூகுளே ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளதன் விளைவு தான், குரோம் பிரவுசரில் மாற்று தேடியந்திரங்களில் ஒன்றாக டக்டக்கோவும் சேர்க்கப்பட்டுள்ளது.

தேடியந்திரங்களில் நம்பர் ஒன்னாக இருக்கும் கூகுள், ஜிமெயில், குரோம், ஆண்ட்ராய்டு…என இணைய உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பயனாளிகளை இடைவெளி இல்லாமல் பின் தொடர்கிறது என்பது கூகுள் மீதான மிகப்பெரிய விமர்சனமாக இருப்பது போல், இணைய உலகில் தனக்குள்ள ஆதிக்க நிலையை பயன்படுத்திக்கொண்டு நேர்மை இல்லாமல் நடந்து கொள்வதாகவும் அதன் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அதாவது தேடல் உலகில் இருக்கும் செல்வாக்கை கூகுள் தனது சேவைகளையும், விளம்பரங்களையும் முன்னிறுத்தி லாபம் பார்க்க பயன்படுத்திக்கொள்வதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த உள்ளூர் விமர்சன சேவையான யெல்ப் எனும் நிறுவனம் இது போன்ற புகாருடன் கூகுளுடன் பல ஆண்டுகளாக மல்லு கட்டி வருகிறது. கூகுளில் ஒருவர் உள்ளூர் சேவை தொடர்பான தகவலை தேடும் போது, யெல்ப் தளத்தின் விமர்சனம் பின்னுக்குத்தள்ளப்பட்டு, கூகுள் தனது விளம்பர பரிந்துரைக்கு முன்னுரிமை அளிக்கிறது என யெல்ப் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கேற்ப தேடல் அல்கோரிதமில் மாற்றம் செய்வதாகவும் யெல்ப் கூறி வருகிறது. கூகுள் இதை மறுத்தாலும், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.

இதே போன்ற புகார்கள் ஐரோப்பாவில் கூகுள் மீது தீவிரமாக கூறப்பட்டு வருவதோடு, கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படு வருகிறது. போட்டித்தன்மைக்கு விரோதமாக நடந்து கொள்வதாக, ஓரிரு முறை கூகுளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கூட கூகுள் மீது ஐரோப்பிய ஒன்றியம், 1.5 பில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. இதனிடையே ஆண்ட்ராய்டு விஷயத்திலும், ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூகுள் வம்பில் மாட்டிக்கொண்டது.

ஆண்ட்ராய்டு போன்களில், மற்ற நிறுவன சேவைகளை பின்னுக்குத்தள்ளும் வகையில் தனது பிரவுசர்களையும்,தேடல் சேவையையும் முன்னிறுத்துவதாக கூகுள் மீது புகார் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் கூகுள், ஆண்ட்ராய்டு போன்களில், குரோம் அல்லாத மாற்று பிரவுசர்களையும், கூகுள் அல்லாத பிற தேடியந்திரங்களையும் பயனாளிகள் தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பளிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே, குரோம் பிரவுசர்களின் புதிய பதிப்பில் மாற்று தேடியந்திரமாக யாஹு, பிங் தவிர டக்டக்கோவை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பையும் கூகுள் வழங்கியுள்ளது. இதே போல, பிரான்ஸ் நாட்டில், ஐரோப்பிய தேடியந்திரமான குவான்ட் தேடியந்திரத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குரோம் பிரவுசர் கூகுளுடையதாக இருக்கலாம். ஆனால் அதை பயன்படுத்தும் பயனாளிகள் எந்த தேடியந்திரத்தை நாடுவது என்பது,  அவர்களின் தேர்வாக இருக்க வேண்டும் என்பதே இணைய நீதியாக கருதப்படுகிறது. எனவே தான் அதற்கான தேர்வு வாய்ப்பு வழங்கப்பட வலியுறுத்தப்படுகிறது. பயனாளிகள் விரும்பினால், கூகுள் தவிர வேறு எந்த தேடியந்திரத்தையும் தங்களுக்கான டிபால்ட் தேடியந்திரமாக அமைத்துக்கொள்ளலாம்.

இந்த பட்டியலில் பிரைவஸி காக்கும் டக்டக்கோவும் இணைந்திருப்பது டக்டக்கோவிற்கு மட்டும் அல்ல, இணையவாசிகள் எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் இணையவாசிகளை பின் தொடராத ஒரு தேடியந்திரத்தை டிபால்ட் தேர்வாக அமைத்துக்கொள்ளும் வாய்ப்பை கூகுளே அங்கீகரித்துள்ளது.

உங்களுக்கும் பிரைவசி கவலை இருந்தால் டக்டக்கோவை பயன்படுத்திப்பாருங்கள். தேடல் சேவையிலும், குறிப்பிட்ட இணையதளத்தில் நேரடியாக தேடும் ஐபேங் வசதி, உடனடி தகவல் வசதி உள்ளிட்டவற்றை அது வழங்கி வருகிறது. முக்கியமாக விளம்பர நெடி இல்லாத தேடல் முடிவுகளை பெறலாம். டக்டக்கோவிலும் விளம்பரங்கள் உண்டு என்றாலும், அவை தேடப்படும் குறிச்சொற்கள் தொடர்பானவை தானே தவிர, தேடுபவர்களின் விருப்பு வெறுப்புகள் சார்ந்தவை அல்ல.

கூகுளை விட்டு டக்டக்கோவிற்கு மாறுங்கள் தான் என்று பிரைவஸி காவலர்கள் பலரும் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு டக்டக்கோ தகுதியானதா என்பதை நீங்கள் அதை பயன்படுத்திப்பார்த்து தீர்மானியுங்களேன்; https://duckduckgo.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.