டிஜிட்டல் குறிப்புகள்- 8 கோட்சே, கமல் மற்றும் இணையத்தின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்!

kகோட்சே, காந்தியை கொலை செய்தது ஏன்? கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் என்ன தொடர்பு? கோட்சே ஒரு தீவிரவாதியா? கோட்சேவை இந்து தீவிரவாதி என சொல்வது சரியா?

தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகரும், அரசியல்வாதியுமான கமல் ஹாசன், கோட்சேவை சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என கூறியதால் உண்டான சர்ச்சையை அடுத்து எழுந்திருக்கும் பல்வேறு கேள்விகளில் சிலவற்றை தான் மேலே பார்க்கிறீர்கள்.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்லப்போவதில்லை. அது என் நோக்கமும் அல்ல: அதற்கு தேவையான தரவுகளும், புரிதலும் என்னிடம் இல்லை. ஆனால், விஷயம் என்னவெனில் இந்த கேள்விகளுக்கு எல்லாம் தகுதியுடையவர்கள் சரியான வரலாற்று பார்வை மற்றும் அரசியம் புரிதலோடு தெளிவாக பதில் அளித்திருக்கின்றனர் என்பது தான்.

முரண்பட்ட பார்வைகள் கொண்ட பதில்களும் இருக்கின்றன. ஆனால் விஷயம் என்னவெனில், இந்த தலைப்பில் பொதுவாக கேட்க்கப்படும் கேள்விகள் எதுவுமே புதிதில்லை என்பதும் அவற்றுக்கான விளக்கமான பதில்கள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன என்பதும் தான்.

இதை சுட்டிக்காட்டுவதன் நோக்கம் என்னவென்றால், புதிதாக இந்த விவாதத்தில் இணைந்து வரலாற்று தரவுகள் தெரியாமல் அரைகுறை புரிதலோடு பதில் சொல்வதை விட்டு விட்டு, இந்த சர்ச்சையின் மூல பிரச்சனை தொடர்பான கருத்துக்களை முதலில் படியுங்களேன் என்று வேண்டுகோள் வைப்பதற்காக தான்.

அது மட்டும் அல்ல, இணையம் தொடர்பாக என்னை ஈர்த்த ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக்காட்டுவதும் தான்!.

இவை எல்லாம் பதில் தெரியாத கேள்விகள் அல்ல: ஏற்கனவே பதில் சொல்லப்பட்ட கேள்விகள். இத்தகைய கேள்விகள் இணைய கலாச்சாரத்தில், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்று குறிப்பிடப்படுகின்றன.

ஆங்கிலத்தில் இவை Frequently Asked Question  என சொல்லப்படுகின்றன. சுருக்கமாக (FAQ). – ஃபேக் !

Screenshot_2019-05-15 Frequently Asked Questions (FAQ) Historyஅந்த கால இணையதளங்கள் பலவற்றில் இந்த ஃபேக் பகுதி தவறாமல் இடம் பெற்றிருப்பதை பார்க்கலாம். இணையதளத்தின் உரிமையாளரைப்பற்றி விளக்கும் எங்களைப்பற்றி (அபவுட் அஸ்) பக்கம் போலவே, ஃபேக் பகுதியும் தவறாமல் இடம்பெற்றிருக்கும். இப்போது கூட, பல இணையதளங்கள் இந்த வழக்கத்தை கடைப்பிடிக்கின்றன.

இவை வெறும் கேள்விகளின் பட்டியல் அல்ல: இணைய கலாச்சாச்சாரத்தின் அங்கம்.

ஒரு தலைப்பு தொடர்பாக பொதுவாக மீண்டும் மீண்டும் கேட்கப்படும் அடிப்படையான கேள்விகளே, இப்படி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளாக குறிப்பிடப்படுகின்றன. இந்த கேள்விகள் முக்கியமானவையாகவும், தவிர்க்க இயலாதவையாகவும் இருக்கும். ஆனால் பிரச்சனை என்னவெனில், இவை புதியவர்களால் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

உதாரணமாக, இசை சேவை தொடர்பான இணையதளம் எனில், பயணர் பெயர் அவசியமா? கோப்புகளை தரவிறக்கம் செய்வது எப்படி? தரவிறக்கம் பாதியில் நின்றால் என்ன செய்வது? எந்த மொழியில் எல்லாம் பாடல்கள் இருக்கின்றன? போன்ற பல கேள்விகள் எழலாம். பயனாளிகள் கேட்கும் ஒவ்வொரு முறைக்கும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்க, இந்த கேள்விகள் மற்றும் அவற்றுக்கான பதில்களை தொகுத்தி தனியே பட்டியலிடுவார்கள்.

இந்த கேள்விகள் தான் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். எல்லா துறைகளிலும் இந்த வழக்கம் உண்டு. இணையத்தில் மிகவும் பிரபலமாகவும், அவசியமாகவும் இருக்கிறது.

ஏற்கனவே பதில் அளிக்கப்பட்ட அடிப்படையான கேள்விகளை புதிதாக எழுப்பாமல், அதற்கான ஃபேக் பகுதியை பாருங்கள் என்பது தான் இணைய பயன்பாட்டு விதிகளில் முக்கியமானது. இன்றளவும் கேள்வி பதில் தளமான குவோரா போன்ற தளங்களில், முதலில் வலியுறுத்தப்படுவது நீங்கள் கேட்க இருக்கும் கேள்வி ஏற்கனவே இந்த தளத்தில் கேட்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள் என்பது தான்.

அந்த வகையில் கமல் புத்திசாலித்தனமாக அல்லது திட்டமிட்டு அல்லது வில்லங்கமான நோக்கத்துடன் கூறிய கருத்தை விவாதிக்கும் போது எழும்பும் அடிப்படையான கேள்விகளுக்கான பதில் ஏற்கனவே பல்வேறு அரங்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை படித்து புரிந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்பது நலம்.

திராவிட இயக்கம் என்ன செய்தது?, பெரியார் என்ன செய்தார்?. மார்சியம் தோற்றுவிட்டதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு இப்படி ஒரு ஃபேக் பட்டியல் தயாரிப்பது அவசியம்.

நிற்க, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக சில முக்கிய கேள்விகள் எழலாம். இந்த வழக்கம் துவங்கியது எப்போது? முதல் ஃபேக்கை தயாரித்தவர் யார்? ஃபேக் பட்டியல் அளிக்கும் வழக்கம் இணையத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டது ஏன்? இப்படி பல கேள்விகள் எழலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை தொகுக்கும் வழக்கம் பல காலமாகவே இருப்பதாக கருதப்பட்டாலும், இணைய பயன்பாட்டிற்கு பிறகு தான் பிரபலமானதாக கொள்ளலாம்.

உண்மையில், இணையத்தில் இமெயில் சார்ந்த குழுக்கள் மற்றும் விவாத குழுக்கள் பிரபலமாகத்துவங்கிய காலத்தில், இந்த பழக்கம் உண்டானது. ஏற்கனவே உள்ள குழுவில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த விவரம் தெரியாமல் புதிய உறுப்பினர், ஒரு கேள்வியை எழுப்புவார். அந்த கேள்வி மிக அடிப்படையானதாக இருந்தாலும், அதற்கான பதிலை மீண்டும் சொல்வது தவிர்க்க கூடியது தானே. எனவே தான், பலரும் கேட்க கூடிய கேள்விகளை தொகுத்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எனும் கோப்பாக அளிப்பார்கள். புதியவர்களுக்கான வழிகாட்டு இவை.

அந்த காலத்தில் யூஸ்நெட் எனும் விவாதக்குழு மிக பிரபலமாக இருந்தது. ஒருவிதத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றுக்கு எல்லாம் முன்னோடி இந்த யூஸ்நெட்.

இதில் தான், மார்க் ஹார்டன் என்பவர் முதல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை எழுதினார். பின்னர் இணையத்தின் மூல வடிவான அர்பாநெட்டில், யூஜின் மியா என்பவர் ஒரு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பட்டியலை எழுதினார்.

யூஸ்நெட் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் வரலாறு பற்றி அறிய: https://www.livinginternet.com/i/it_faq_history.htm

இதே போலவே கோட்சே பற்றியும் காந்தி பற்றியும் அறிய பல தரவுகள் உள்ளன,. தேடுங்கள்.

பி.கு: கமல் வலதுசாரியா? கமல் இடதுசாரியா? அவர் ஆர்.எஸ்.எஸின் பி டீமா? கமலின் உண்மையான கொள்கை என்ன? என பல முக்கிய கேள்விகள் அடங்கிய, கமலைப்பற்றிய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பட்டியல் ஒன்றையும் தயார் செய்யலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.