மென்பொருள்களுக்கான நம் நன்றிக்கடன் அறிவோம்!

maxresdefaultநாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் அனைத்துவிதமான பயன்பாடுகளையும், அவற்றுக்கான நுணுக்கங்களையும் கரைத்து குடிப்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. தேவையும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால், இப்படி மென்பொருள் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தவர்களை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த வகையில், ரஸ் க்ரோலேவும் (Russ Crowley ) வியக்க வைக்கும் மனிதராக தான் இருக்கிறார்.

க்ரோலேவை வேர்டு வித்தகர் என்று சொல்லலாம். மைக்ரோசாப்டின் வேர்டு மென்பொருள் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தவராக இருக்கிறார். 1997 ம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருளை பயன்படுத்தி ஆவணங்களை உருவாக்குவதில் வல்லவராக இருப்பவர் இதையே தொழில்முறையிலான சேவையாக வழங்கி வருவதை அவரது இணையதளம் மூலம் அறிய முடிகிறது. (https://www.russcrowley.com/) தொழில்நுட்ப எழுத்து சேவைக்காக இன்னொரு இணையதளத்தையும் நடத்தி வருகிறார். (https://russcrowleycopywriting.com/)

இது அவரது யூடியூப் பக்கம்: https://www.youtube.com/channel/UCrq_LEhiVqH50l1b50fLJiw

வேர்டு பயன்பாடு தொடர்பாக க்ரோலே அளிக்கும் சேவையில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் இல்லாமல் போகலாம். ஆனால், மனிதர் குவோரா கேள்வி பதில் தளத்தில் எக்ஸெல் தொடர்பாக அளித்துள்ள பதில் சுவாரஸ்யமாக இருக்கிறது.

எக்ஸெல் மென்பொருளை பயன்படுத்தி ரெஸ்யூமை உருவாக்குவது எப்படி? என்பது தான் கேள்வி. (https://www.quora.com/How-can-I-write-my-resume-on-Microsoft-Excel )

இணைய யுகத்தில் ரெஸ்யூமை உருவாக்குவது பெரிய விஷயம் இல்லை தான். இதற்காக என்றே எண்ணற்ற இணையதளங்கள் இருக்கின்றன. மேலும், வேர்டு மென்பொருளை கையாளத்தெரிந்தால் அருமையான ரெஸ்யூமை தயார் செய்துவிடலாம். அப்படியிருக்க, பெரும்பாலும், எண்களையும், தரவுகளையும் கையாள உதவும் எக்ஸெல் மென்பொருளை ரெஸ்யூம் உருவாக்கத்திற்கு பயன்படுத்துவது என்பது கொஞ்சம் விநோதமானது தான்.

நாம் நினைத்து பார்க்க முடியாத விதங்களில் எல்லாம் எக்ஸெல் மென்பொருளை பயன்படுத்த முடியும் என்பதற்கு, எக்ஸெல்லில் ரெஸ்யூம் உருவாக்கம் ஒரு உதாரணமாக அமைகிறது என்பதோடு, இதற்காக க்ரோலே அளித்துள்ள பதில் மென்பொருள் வரலாறு பற்றி நமக்கு எத்தனை குறைவாக தெரிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன், வேர்டு மென்பொருளில் இப்போது இருக்கும் பெரும்பாலான வசதிகள் சாத்தியமாகாத நிலையில், சகோதரர் அவரது ரெஸ்யூமை உருவாக்கித்தருமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும், முழுவதும் பார்மெட் செய்யப்பட்ட அந்த ரெஸ்யூமை வேர்டில் உருவாக்க முடியாது என்பதால், எக்ஸெல் மென்பொருள் கொண்டு அதை செய்து கொடுத்ததாக தெரிவித்துள்ள க்ரோலே இதற்கான வழிமுறையையும் அந்த பதிலில் விவரித்துள்ளார்.

இன்று வேர்டில் ரெஸ்யூம் பார்மெட்டிங் என்ன, முழு புத்தகத்தையும் வடிவமைத்துவிடலாம். அந்த அளவுக்கு அந்த மென்பொருள் மேம்பட்டிருக்கிறது. இருப்பினும், 20 ஆண்டுகளுக்கு முன், ரெஸ்யூமை பார்மெட் செய்யக்கூடா எக்ஸெல்லை நாட வேண்டியிருந்ததாக க்ரோலே சொல்வது வியப்பாக தான் இருக்கிறது.

நாம் பயன்படுத்தும் மென்பொருள் நுணுக்கங்களை எல்லாம் அறிந்து கொள்கிறோமோ இல்லையோ அவற்றின் வரலாற்றை கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அந்த வகையில் பார்த்தால் வேர்டு வரலாற்றை தெரிந்து கொள்வதோடு, வேர்டு அங்கமாக அமையும் எழுதி ( வேர்டு பிராசஸ்ர் ) மென்பொருள் வரலாற்றை இன்னும் விரிவாக அறிந்து கொள்வது அவசியம். அப்படியே தமிழில் உருவாக்கப்பட்ட எழுதிகளையும் அறிந்து கொள்வது மென்பொருள்களுக்கான நம் நன்றிக்கடனாக அமையும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.