டிஜிட்டல் குறிப்புகள்- 12 கூகுள் வரைபடத்தை ஏமாற்றிய டிஜிட்டல் கலைஞர் செய்தியின் நிஜ பின்னணி தெரியுமா?

imrs99 போன்கள் ( 99 phones ) என்பது கூகுளில் தேடப்படும் பதமாகி இருக்கிறது. 99 என டைப் செய்யும் போதே கூகுள் 99 போன்கள் என்பதையும் தனது பரிந்துரையில் சேர்த்திருப்பதில் இருந்தே இதை புரிந்து கொள்ளலாம். அதற்கேற்பவே, இந்த பதத்திற்கான தேடல் பட்டியலில், கலைஞர் ஒருவர் 99 போன்களை கொண்டு கூகுள் வரைபட சேவையை ஏமாற்றி இல்லாத போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி காட்டிய தொழில்நுட்ப விளையாட்டு தொடர்பான செய்திகள் முன்னிலை பெறுவதையும் பார்க்கலாம்.

விதவிதமான தலைப்புகளில் இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள செய்தி தளங்களில் வெளியாகியிருக்கிறது. நம்மூரிலும் பலரும் இதை பிரதியெடுத்து வெளியிட்டுள்ளனர்.

செய்தி இது தான்: ஜெர்மனியைச்சேர்ந்த கலைஞர் ஒருவர், நகரின் சாலை ஒன்றில், வெறும் 99 ஸ்மார்ட்போன்களை வைத்துக்கொண்டு, இல்லாத போக்குவரத்து நெரிசலை கூகுள் வரைபடத்தில் உருவாக்கி காட்டியிருப்பது தான். இதை அவர் எப்படி செய்திருக்கிறார் என்றால், ஒரு சின்ன தள்ளுவண்டி பெட்டியில் 99 பழைய ஸ்மார்ட்போன்களை போட்டு வைத்துக்கொண்டு சாலையில் மெதுவாக இழுத்துச்சென்றிருக்கிறார். 99 போன்களிலும் கூகுள் வரைபட சேவை இயக்கத்தில் இருந்ததால், அந்த வாகனம் மெதுவாக சென்றதன் அடிப்படையில், கூகுள் வரைபடம், அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக காண்பித்துள்ளது.

கூகுள் வரைபடம் வெறும் இடங்களை காட்டுவதோடு நிற்பதில்லை. அது உடனடி தகவல்களையும் அளிக்கிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அடிப்படையில் பொதுமக்களிடம் இருந்து திரட்டப்படும் தகவல்கள் அடிப்படையில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான தகவல்களையும் அளிக்கிறது. போக்குவரத்து நெரிசல் எனில், அந்த இடம் சிவப்பாக காண்பிக்கப்படும்.

ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றுவது என்பதை போல, அதிக வாகனம் இல்லாத சாலையில், தள்ளுவண்டி பெட்டியில் 99 போன்களை மெதுவாக இழத்துச்சென்றதன் மூலம், அங்கு ஒரே நேரத்தில் பல வாகனங்கள் மெதுவாக நகரும் தோற்றத்தை கூகுள் வரைப்படத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்.

அந்த கலைஞரின் பெயர் சைமன் வெக்கர்ட் (Simon Weckert). கூகுள் மேப்ஸ் ஹேக்ஸ் எனும் பெயரில், இந்த தொழிநுட்ப விளையாட்டை அவர் வீடியோவாக தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

கூகுள் ஸ்டீரீட்வியூ அல்லது கூகுள் மேப்ஸ் சேவை தொடர்பான எந்த நிகழ்வாக இருந்தாலும் அது செய்தி தான். அப்படியிருக்க, கூகுள் வரைபடத்தை ஏமாற்றி, பொய்யான போக்குவரத்தி நெரிசலை காண்பிக்க வைத்துள்ள சாகசம் நிச்சயம் கூடுதல் கணமான செய்தி தான். இதன் எதிரொலியை இணையத்தின் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

கூகுள் மேப்சையே ஏமாற்றியிருக்கிறார் என்பது செய்திக்கான சுவாரஸ்யமான பொறி என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால், வெறும் சுவாரஸ்யமான செய்தி என்பதை கடந்து இதில் பல விஷயங்கள் இருக்கிறது. இவற்றை அலட்சியம் செய்யாமல் கவனிப்போம்.

முதல் விஷயம், இந்த கூகுள் வரைபட விளையாட்டை நிகழ்த்திக்காட்டிய சைமன் வெக்கர்ட் சாதாரணமான நபர் இல்லை. அவர் ஒரு டிஜிட்டல் கலைஞர். வெக்கர்ட்டின் இணையதளத்தில், அவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.

பெரிலினின் வாழும் கலைஞரான அவர், உருவாக்க வடிவமைப்பு முதல் பெளதீக கம்ப்யூட்டிங் வரையான பல வகை துறைகள் குறித்து தனது அறிவை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார் என துவங்கும் அவரைப்பற்றிய அறிமுக குறிப்பு, டிஜிட்டல் உலகில் அவர் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கிறது.

தனது படைப்புகள் மூலம் அவர், தொழில்நுட்பத்தின் மதிப்பை அதன் தற்போதைய பயன்பாட்டின் அடிப்படையில் அல்லாமல், எதிர்கால தலைமுறையின் பார்வையில் இருந்து பகிர்ந்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெக்கர்ட் ஒன்றும் விளையாட்டு கலைஞர் அல்ல என்பது இப்போது புரிந்திருக்கும். இந்த பின்னணியில் பார்த்தால், அவரது கூகுள் வரைபட விளையாட்டின் பின்னே உள்ள பரந்த நோக்கமும் புரியும். இது கவனத்தை ஈர்க்கவோ, சுவாரஸ்ய அதிர்ச்சிக்காகவோ செய்யப்படவில்லை. மாறாக, கூகுள் வரைபடம் போன்ற டிஜிட்டல் சேவைகள் நம் வாழ்வில் தாக்கம் செலுத்தி வரும் நிலையில், அவற்றை அப்படியே நம்புவதில் உள்ள சிக்கல்களை இது சுட்டிக்காட்டுகிறது.

இது போன்ற கேள்விகளை விரிவாக எழுப்பும் மோரிட்ஸ் அல்ஹர்ட் எனும் டிஜிட்டல் அறிஞரின் ஆய்வுக்கட்டுரையையும், வெக்கர்ட் தனது பதிவுடன் இணைத்துள்ளார். கூகுள் வரைபடம் நகரங்கள் மீது மெய்நிகர் மாற்றங்களை செய்யக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டி, உபெர் போன்ற பல இணைய சேவைகளை அதை சார்ந்திருப்பதையும் குறிப்பிட்டு, நம் கால டிஜிட்டல் சூழல் தொடர்பான அர்த்தமுள்ள கேள்விகளை இந்தக்கட்டுரை எழுப்புகிறது.

ஆக, முடிந்தால், கூகுள் வரைபடத்தை ஏமாற்றிய கலைஞர் எனும் தலைப்பிலான செய்தியை மட்டும் படித்துவிட்டு கடந்து செல்லாமல், வெக்கர்ட் இணையதளத்திற்கு சென்று பாருங்கள்: http://www.simonweckert.com/googlemapshacks.htm

வெக்கர்ட்டின் மற்ற டிஜிட்டல் படைப்புகளும் சிந்திக்க வைக்கின்றன.

அப்படியே,வெக்கர்ட் சுட்டிக்காட்டியுள்ள, மூல ஆய்வுக்கட்டுரையையும் வாசித்துப்பாருங்கள். https://journals.sub.uni-hamburg.de/hjk/article/view/1395/1203

பி.கு: இதழியல் நோக்கில் இந்த செய்தி பற்றி மேற்கொண்டு சில தகவல்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த நிகழ்வு தொடர்பான பெரும்பாலான செய்திகளில் சைமர் வெக்கர்ட் இணையதளம் பற்றிய குறிப்பும், இணைப்பும் இல்லை. கார்டியன், வெர்ஜ் போன்ற இணையதளங்கள் இந்த இணைப்பை அளித்துள்ளன.

கூகுள் சேவை தொடர்பான செய்திகளை வெளியிட்டு வரும் 9டு5 இணையதளம், கொஞ்சம் கூடுதலாக வெக்கர்ட்டின் கருத்துகளை வெளியிட்டிருப்பதோடு, இந்த நிகழ்வு தொடர்பான கூகுள் தரப்பு எதிர்வினையையும் வெளியிட்டுள்ளது. இது போன்ற புதுமையான பயன்களை வரவேற்கிறோம் என தெரிவித்து, தனது சேவையை ஏமாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டிருந்தாலும், கூகுள் வரைபட சேவை ஏற்கனவே, கார்கள் மற்றும் பைக்குகளை பிரித்தறிய கற்றுள்ளன, ஆனால் தள்ளுவண்டி பெட்டியை கவனத்தில் கொள்ளவில்லை என்று கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள், கூகுள் வரும் காலத்தில் இத்தகைய குறைகளையும் சரி செய்து விடலாம் என்பதாகும்.

நிற்க, புகழ்பெற்ற வாஷிங்டன் டைம்ஸ் இதழ் இது தொடர்பான விரிவான செய்தி வெளியிட்டிருந்தாலும், வெக்கர்ட் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மூலக்கட்டுரையில் உள்ள கருத்துக்களை அவரது கருத்தாக தவறாக மேற்கோள் காட்டியுள்ளது. https://www.washingtonpost.com/technology/2020/02/04/google-maps-simon-weckert/

இணையத்தில் தான் எவ்வளவு விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.