Tag Archives: songs

பாட்டு கேட்டால் டிஷர்ட் தரும் இணையதளம்.

பாண்டேராவோ,லாஸ்ட்.எப் எம்மிலோ அல்லது ஸ்பாட்டிபையிலோ எதில் வேண்டுமானாலும் பாட்டு கேளுங்கள் அந்த தகவலை மட்டும் எங்களிடம் சொல்லுங்கள் உங்கள் அபிமான இசைக்குழுவின் ட் ஷர்ட்களை அனுப்பி வைக்கிறோம் என்று சொல்கிறது ஷர்டிபை இணையதளம்.

பாண்டோரா ,ஸ்பாட்டிபை போன்ற தளங்களை இணைய வானொலி என்றும் வர்ணிக்கலாம்.பாடல் பரிந்துரை தளங்கள் என்றும் சொல்லலாம்.பிடித்தமான மற்றும் புதிய பாடல்களை கேட்டு ரசிக்க உதவும் இந்த தளங்கள் இசை பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன.

ஷர்டிபை இசை பிரியர்களை மனதில் கொண்டு துவக்கப்பட்டுள்ள தளம் என்றாலும் இந்த தளங்களோடு எந்த விததிதிலும் போட்டி போடுவது அல்ல இதன் நோக்கம்.மாறாக ரசிகர்களுக்கு அவர்களின் அபிமான இசைக்குழுவின் சார்பில் டிஷர்ட்களை அனுப்பி வைக்கும் சேவையை மட்டுமே இந்த தளம் வழங்குகிறது.

அந்த வகையில் இசைக்குழுவிற்கும் ரசிகர்களுக்கும் இடையே பாலமாக விளங்குகிறது.

டிஷர்ட்கள் அபிமானத்தின் வெளிப்பாடாக அமையக்கூடியவை அல்லவா?நிறுனவங்கள் மற்றும் இசை குழுக்கள் போன்றவை நிதி திரட்டவும் விளம்பர்த்துக்காகவும் பிரத்யேக டி ஷர்ட்களை வெளியிடுவதுண்டு.இவை இலவசமாகவும் கிடைக்கும்.விற்கப்படுவதும் உண்டு.படம் மற்றும் வாசகம் பொறிக்கப்பட்ட இத்தகைய டி ஷர்ட்களை ரசிகர்களும் விரும்பி அணிந்து தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்துவதுண்டு.

டி ஷர்ட்களை வாங்குவதற்கோ பெறுவதற்கோ பலவிதமான வழிகள் இருக்கின்றன.அவற்றோடு இன்னொரு சுலபமான சுவாரஸ்யமான வழியாக ஷர்டிபை அறிமுகமாகியுள்ளது.

ரசிகர்கள் எந்த பாடகர் அல்லது இசைக்குழுவின் பாடல்களை அதிகம் கேட்டு ரசிக்கின்றனரோ அந்த பாடகர் அல்லது இசைக்குழுவின் டி ஷர்ட்டை இந்த தளம் அனுப்பி வைக்கிறது.இலவசமாக இல்லை.கட்டணம் செலுத்த வேண்டும்.மூன்றுவிதமான சந்தா திட்டங்கள் இருக்கின்றன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு எந்த சேவையை பயன்படுத்து பாடல் கேட்கின்றனர் என்ப்தை குறிப்பிட்டால் அந்த சேவையில் கேட்கப்படும் பாடல்களை கவனித்து அதனடிப்படையில் பிடித்தமான பாடகர்களை அனுமானித்து டி ஷ்ர்ட்டை அனுப்பி வைக்கும்.டி ஷர்ட்டுக்கான தொகை சம்பந்தப்பட்ட இசைக்குழுவுக்கே நேரடியாக அனுப்பி வைத்து விடுவதாக இந்த தளம் சொல்கிறது.

இடைத்தர்கர்கள் இல்லாமல் நேரடியாக இசைக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பினால் இந்த சேவையை நாடலாம்.

அமெரிக்க ரசிகர்களை மனதில் கொண்டு துவக்கப்பட்டுள்ள தளம் என்ற போதிலும் எப்படி எல்லாம் புதுசாக யோசித்து சேவைகளை உருவாக்குகின்றனர் என்ற வியப்பை ஏற்படுத்தும் தளம்.மிகப்பெரிய சேவை எல்லாம் கிடையாது.எளிமையான சேவை.ஆனால் இசைப்பிரியர்களுக்கு சுவாரஸ்யமானது.

இணையதள முகவரி;http://www.shirtify.fm/

பேஸ்புக்கில் பாடல் வரிகளை பகிர …

‘பனியில்லாத மார்கழியா…’ என்பது போல பாடல் வரியை பகிர்ந்து கொள்ளாதவர் எல்லாம் ஒரு பேஸ்புக் பயனாளியா என்று கேட்கிறது மியூசிக்கோ இணையதளம்.

லிரிக்ஸ் ஸ்டேடஸ் இணைய சேவைக்கான அறிமுகத்தில் தான் இந்த தளம் இப்படி குறிப்பிடுகிறது.

அடிப்படையில் லிரிக்ஸ் ஸ்டேடஸ் பாடல் வரிகளுக்கான தேடியந்திரம். ஆனால் பேஸ்புக்கை மையமாக கொண்டது.இதில் வரிகளை தேடலாம்,தேடிய கையோடு பேஸ்புக்கில் அதனை பகிர்ந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் அப்போதைய மன‌நிலையை பகிர்ந்து கொள்ளும் போது எப்படி உண‌ர்கிறோம் என்பதை இசைமய‌மாக உணர்த்த நினைப்பவர்களுக்கானது இந்த சேவை.

அப்படி செய்யும் வழக்கம் இல்லாதவர்களும் இருக்கின்றனரா என்ன?(இதுவும் மியுசிக்கோவில் வரும் குறிப்பு)

யோசித்து பார்த்தால் எல்லாமே இசைமயமானது தான்.சந்தோஷமாக இருக்கும் போது நாம் அதற்கேற்ற பாடலை முணுமுணுப்பது இல்லையா?அதே போல ஒவ்வொரு மன‌நிலைக்கேற்ற பாடல்களையும் பாடுவது தான் இல்லையா?

சொல்லப்போனால் நம்மூர் மாமூம் மசாலா படங்களை (ஆதவன் மொழியில் மெலோடிராமாக்கள்)எவ்வள்வு தான் விமசன‌ம் செய்தாலும் அவற்றில் வரும் சிச்சுவேஷன் பாடல்களை நமக்காகவே பாடியிருப்பதாக தோன்றுகிறது.என்ன சூழ்நிலைக்கு தான் தமிழில் பாடல்கள் இல்லை.எந்த மன‌நிலையில் இருந்தாலும் சினிமா பாடல்களை பாடி மனதை வெளிப்படுத்தி கொள்ளலாம்.

இதே போலவே பேஸ்புக்கிலும் மனதில் உள்ளதை சில நேரங்களில் பாடல் வரிகளாகவே வெளிப்படுத்தலாம் அல்லவா?

மகிழ்ச்சியை வெளிப்படுத்த ‘இன்றைக்கு ஏன் இந்த அனந்தமோ…’ என்ற வரிகளை போடுவது இசைமயமாக தானே இருக்கும்.

ஆனால் இதில் உள்ள ஒரே சிக்கல் பாடல் வரிகளை பிழையில்லாமல் சரியாக மேற்கோள் காட்டுவது தான்.வார்த்தைகள் மாறிவிட்டால் அர்த்தம் மாறிவிடலாம்.நண்பர்களும் வறுத்தெடுத்துவிடுவார்கள்.

இது போன்ற நேரங்களில் சரியான பாடல் வரிகளை தேடுவதற்காக என்றே லிரிக்ஸ் ஸ்டேடஸ் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.மனதில் உள்ள பாடலை இந்த தேடியந்திரத்தில் டைப் செய்து தேடினால் அந்த பாடல் வரிகள் வருகிற‌து.அதை அப்படியே கிளிக் செய்து பேஸ்புக்கில் பகிரலாம்.தேவைப்பட்டால் முழு வரிகளையும் இணைக்கலாம்.

பாட‌ல் ,பாடியவர் என்று இரண்டையுமே குறிப்பிட்டு தேடலாம்.ஏற்கனவே தேடப்பட்ட வரிகளையும் அவற்றில் பிரபலமாக‌ உள்ளவற்றையும் பார்க்கலாம்.எல்லாவற்றுக்கும் தனி பட்டியல் உள்ளது.நாமும் பாட‌ல்களை சம‌ர்பிக்க‌லாம்.நமக்கான பாடல்களை கோரலாம்.

பாடல் வரி தேடியந்திரங்களிலேயே மிகவும் வித்தியாசமானது.ஆனால் ஒன்று நாம் தேடினால் கண்ணதாசனோ வாலியோ வைரமுத்துவோ கிடைக்க மாட்டார்கள்.எல்லாம் ஜஸ்டீன் பைபரும் ரிக்கி மார்டினும் தான்.

இணையதள முகவ‌ரி;http://www.lyricstatus.com/

எல்லாம் சரி பேஸ்புக்கில் பாட‌ல்களை பகிரும் வழக்கம் உங்களுக்கு இருக்கிற‌தா?அப்படி நீங்கள் பகிர்ந்த பாடல் என்ன?

மெட்டைச் சொல்லவா!

தமிழ் திரைப்பட ரசிகர்கள் பொறா மைப்படவும், ஏங்கித் தவிக்கவும் இன்டெர்நெட்டில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்களை  பொறாமையில் புழுங்கித் தவிக்க வைக்க கூடிய இணையதளங்களும், இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன.”வாட்சட் சாங்’  (தீச்t த்ச்t ண்ணிணஞ்) நிச்சயம் அதில் ஒன்று.
.
மெட்டைச் சொன்னால் பாட்டைச் சொல்லி இசைப்பிரியர்களை மகிழ வைக்கும் தளமாக இது இருக்கிறது. இப்போது நீங்கள் மெட்டை முணுமுணுத்தபடி பாடல் வரிகளை தேடி ஞாபக விதிகளில் அலைந்த  அனுபவத்தை நினைத்துப்பாருங்கள். அந்த பாட்டு என்றோ ஒரு நாள் கேட்டு ரசித்திருந்தும், அதன் பாடல் வரிகள் மட்டும் நினைவில் வராமல் ஆட்டம் காட்டுகிறது. கண்ணை மூடியபடி அதன் வரிகளை முணுமுணுத்து பார்க்க முயற்சி செய்வீர்கள். வரிகள் காதின் அருகே கேட்பது போல தோன்றும். ஆனால் வாயில் வார்த்தைகள் வராமல் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். வாய் வரை வந்து விட்டது ஆனால்… என்று அலுத்துக் கொள்ள வைக்கும் அனுபவம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். 

பஸ்சில் போய்க்கொண்டிருக்கும் போது, தொலைவில் பாடிக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியில் இருந்து அருமையான பாடல் ஒன்று காதில் விழும். வீட்டுக்கு வந்ததும் அதன் மெட்டு மட்டும் தாலாட்டிக் கொண்டிருக்கும். வரிகள் மறந்து போயிருக்கும். அல்லது வரிகள் நினைவில் இருந்தாலும், என்ன பாடல்? அது இடம் பெற்ற படம் எது? பாடியது யார்? போன்ற விவரங்கள் தெரியாது!

தொலைக்காட்சியில் அல்லது வானொலியில் நிகழ்ச்சிக்கு நடுவே எப்போதோ கேட்டு ரசித்த பாடலை கேட்க நேரில் அடடா, நல்ல பாடலாச்சே என்று மெய் மறக்கும் கணத்தில் பாடலும் மறந்திருக்கும்.

இன்னும் சில நேரங்களில் அழகான யுவதி மெல்லிய குரலில் பாடல் ஒன்றை தனக்குள் முணுமுணுத்தபடி போவதை கேட்கும்போது, அந்த பாடல் வரிகள் கண்ணாமூச்சி காட்டும்.
இசைப்பிரியர்கள் இப்படி மெட்டையும், வரிகளையும் வைத்துக் கொண்டு பாட்டைத் தேடி அலையும் அனுபவத்தை பல முறை பல விதங்களில் எதிர் கொண்டிருக்கலாம்.

இவ்வளவு ஏன்? கைவசம் நேரம் இருந்தால் நண்பர்கள் மெட்டைச் சொல்லி பாட்டை கேட்கும் விளையாட்டில் மூழ்கி இசை மயமாகி பொழுதை கழிக்கலாம்.
இப்போது மீண்டும் “வாட் சன் சாங்’ தளத்திற்கு போகலாம்.

மனதின் ஒரு மூளையில் கேட்டுக் கொண்டே இருந்தாலும், நினைவில் வராத பாடல் வரிகளை அறிய விரும்புகிறவர்கள், (அதாவது ஆங்கில (அ) மேற்கத்திய பாடல்கள் என்று அர்த்தம்) இந்த தளத்திற்குள்  நுழைந்து அந்த மெட்டை பாடிக்காட்டினால் அதற்குரிய முழு பாடல் வரிகளையும் தெரிந்து கொள்ளலாம். அதோடு பாடலை பாடியவர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் அந்த பாடலை எங்கே வாங்கலாம் என்னும் தகவலையும் கூட தெரிந்து கொண்டு விடலாம்.

நீங்கள் அறிய விரும்பும் பாடலின் மெட்டைக் கேட்டு அந்த புதிரை விடுவிப்பதற்காக என்று யாராவது ஒருவர் பலர் தளத்தில் காத்திருப்பார் கள். யார் இவர்கள்? என்று நீங்கள் கேட்கலாம். அவர்களும் உங்களைப் போன்ற இசைப் பிரியர்கள்தான்! உங்களைப் போலவே  மெட்டுக்குரிய பாடலை கேட்கவும், மற்றவர்களின் இசை சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் விரும்பும் இந்த தளத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டார்கள்.

மெட்டாகவே தொண்டையில் சிக்கியிருக்கும் பாட்டை அறிய துடிக்கும் நேரத்தில் நீங்கள் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிட மும் கேட்டுப்பார்ப்பதுதானே வழக்கம்.
“வாட் சட் சாங்’ இணையதளம், இத்தகைய இசைப் பிரியர்களின் சங்கமமாக  உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பாட்டில் ஏதாவது சந்தேகம் என்றால், இந்த தளத்தில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

பாடலை நீங்களே பாடிக் காட்டலாம். பாடியவர் (அ) இடம்பெற்ற படம்/ஆல்பம் விவரம் தெரிய வேண்டும் என்றால் அந்த இசைக் கோப்பை அப்படியே பதிவேற்றவும் செய்யலாம்.
சங்கீத சந்தேகம் நீங்கப் போவதோடு, இசை பட நட்பை வளர்த்துக்கொண்டு இனிமையாக  நேரத்தை செலவிடவும் இந்த தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்களுக்கு தெரியாத பாட்டே கிடையா என்று வைத்துக்கொள்வோ அல்லது எந்த பாட்டை கேட்டாலும் உடனே பாடிக்காட்டி விடுவீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் நீங்கள் இந்த தளத்தில் மற்றவர்கள் கேட்கும் சந்தேகங் களுக்கு பதில் அளித்து இவ்வாறு நீங்கள் பாடிக்காட்டிய பாடல்களை எல்லாம் உங்களுடைய உறுப்பினர் பக்கத்திலேயே குறிப்பிட்டு வைக்கலாம். இதனடிப் படையில் தரவரிசை பட்டியலும் உண்டு. அதில் முந்தி நிற்பதில் மகிழ்ச்சி அடைய லாம். மற்றவர்களின் உறுப்பினர் பக்கத்தை பார்த்து ஒப்பீடும் செய்து கொள்ளலாம். தேவைப் பட்டால்  இணைய தளத்தையே மெட்டுக்களை சொல்லச் சொல்லி அதற்கான பாடல்களை பாடிக்காட்டி உங்கள் திறமையை பரிசோதித்துக் கொள்ளலாம். இந்த விளையாட்டில் மற்ற உறுப்பினர் களையும் சேர்த்துக் கொண்டு போட்டா போட்டியில் ஈடுபடலாம்.

நீங்கள் இசைப்பிரியராக இருந்து, ஒரு முறை இந்த தளத்திற்குள் உள்ளே நுழைந்து விட்டீர்கள் என்றால் இந்த இசை சமூகத்தில் அப்படியே ஐக்கியமாகி விடுவீர்கள்.
தளத்தின் உள்ளே நுழைந்ததுமே, மற்றவர்கள் கேட்கும் மெட்டுகள் மற்றும் நீங்கள் கேட்க்கூடிய மெட்டு ஆகியவற்றுக்கான வாசகங்கள் வரவேற்கின்றன. அதன் கீழே சமீபத்தில் கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியல், தீர்க்கப்பட வேண்டிய பாடல்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

நிற்க, தமிழில் தேனாய் தித்திக்கும் திரைப்பட பாடல்களும், மெல்லிசை பாடலும், ஆயிரமாயிரம் இருந்தென்ன இப்படி வழிகாட்டும் தளம் இல்லையே!
பி.கு.: டிஞீஞுண.tடிtதூ.தண் என்று மற்றொரு இணையதளம் இருக்கிறது. இதுவும் இசை தீர்வு அளிக்கும் தளம்தான். இங்கும் தெரியாத பாடல்களை பாடிக்காட்டி தெளிவு பெறலாம்.