Tag Archives: video

புதிய வீடியோ தேடியந்திரம்.

பேஸ்புக்கில் நுழைந்தால் நண்பர்கள் உபயத்தில் புதிய யுடியூப் வீடியோக்கள் வந்து நிற்கின்றன.இமெயிலை திறந்தால் வீடியோக்கள் எட்டிப்பார்க்கின்றன.புதிய வீடியோக்களை பார்த்து ரசிக்க என்றே இணையதளங்களும் இருக்கின்றன.யூடியுப்பில் வெளியாகும் மற்றும் பிரபலமாகும் வீடியோக்களை பட்டியலிட ஒவ்வொரு தளமும் ஒரு பிரத்யேக வழி முறையையும் வைத்திருக்கின்றன.

வீர்ல் தளமும் இப்படி புதிய முறையிலேயே யூடியூப் வீடியோக்களை பட்டியலிட்டு உங்கள் பார்வைக்கு வைக்கிறது.

வீடியோ கண்டுபிடிப்பு இயந்திரம் என வீர்ல் தன்னை அழைத்து கொள்கிறது.அதாவது இணையத்தில் வெளியாகும் புத்தம் புதிய வீடியோக்களை கண்டுபிடித்து தருகிறது.

வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் நொடி தோறும் புதிய வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த வீடியோ கடலில் இருந்து புதிய நல் முத்துக்களை அறிமுகம் செய்து கொள்ள வழிகாட்டுதல் தேவை தான்.

அதை தான் வீர்ல் அழகாக செய்கிறது.யூடியுப்பில் வெளியாகும் புதிய வீடியோக்களை முன்னணி வீடியோக்களாக பட்டியலிட்டு முகப்பு பக்கத்தில் பார்வைக்கு வைக்கிறது.அதில் விருப்பமானதை கிளிக் செய்து பார்த்து ரசிக்கலாம்.

எப்படி வலைவாசல்கள் புதிய செய்திகளை திரட்டித்தருகின்றனவோ அதே போல இந்த தளம் புதிய வீடியோக்களை திரட்டித்தருகிறது.

வீடியோ காட்சிகளை பார்த்து ரசித்த பின் அதனை டிவிட்டர் அல்லது பேஸ்புக் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இந்த பகிர்வில் இருந்து தளத்தின் இரண்டாவது சிறப்பம்சம் பிறக்கிறது.ஆம் வீடியோக்கள் எத்தனை பேரால் பகிரப்பட்டுள்ளனவோ அந்த கணக்கின் அடிப்படையில் அவை வரிசைப்படுத்தப்பட்டு முன்னணி வீடியோக்களாக பட்டியலிடப்படுகின்றன.

வீடியோக்களின் மூளையில் அவை பகிரப்பட்ட எண்ணிக்கை சிறியதாக குறிப்பிடப்படுகிறது.

ஆக புதிய வீடியோக்களை மட்டும் அல்ல பிரபலமாக இருக்கும் வீடியோக்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

இவற்றை தவிர நமக்கு தேவையான தலைப்புகளில் வீடியோக்களை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.

இனையதள முகவரி;http://www.viirl.com/

வீடியோ இமெயில் சேவை.

12 செகன்ட்ஸ் டிவி சேவையை நினைவிருக்கிறதா?வீடியோ குறும்பதிவு சேவையாக அறிமுகமான 12 செகன்ட்ஸ் போதிய வரவேற்பு இல்லாமல் மூடப்பட்டு விட்டது.ஆனால் அந்த சேவையை நினைவு ப‌டுத்தும் வ‌கையில் விஸ்னேப் அறிமுகமாகியுள்ளது.

விஸ்னேப் வீடியோ மூலம் செய்திகளை அனுப்புவதற்கான சேவை.இமெயிலுக்கான இனிமையான மாற்று என்று வைத்து கொள்ளுங்களேன்.இதனை பயன்ப‌டுத்தி வீடியோ வடிவில் நீங்கள் சொல்ல நினைக்கும் செய்தியை பதிவு செய்து இமெயில் மூலம் அனுப்பி வைக்கலாம்.

ஆனால் அரட்டை அடிப்பது போலவோ சொற்பொழிவு ஆற்றுவது போலவோ எல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியாது.ரத்தினசுருக்கமாக முடித்து கொள்ள வேண்டும்.அதிகபட்சமாக 60 விநாடிகள் தான் பேசலாம்.

இப்படி வீடியோ செய்தி அனுப்ப எதையும் டவுண்லோடு செய்ய வேண்டியதில்லை.வெப்கேமிரா வசதி இருந்தால் போதுமானது.

வீடியோ வடிவில் தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதோடு இமெயிலை காட்டிலும் தனிப்பட்ட அடையாளத்தோடு இருக்கும்.நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்களுக்கு நாம் நேரில் பேசுவது போலவே செய்தி அனுப்புவது கொஞ்சம் பர்சனல் டச் கொண்டது தானே.

டைப் செய்வதை காட்டிலும் சுருக்கமாக பேசி விஷயத்தை சொல்லி விடுவது சுவாரஸ்யம் தானே.

இந்த சேவையில் விஷேசம் என்னவென்றால் இமெயில் போலவே இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம்.

ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மெயிலை பயன்படுத்தி கொள்ளலாம்.இதன் மூலம் இணைப்புகளின் சாரம்சத்தை எளிதாக புரிய வைக்கலாம்.

இனி 12 செகன்ட்ஸ் தளத்திற்கு வருவோம்.அறிமுகமான போது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏறபடுத்திய சேவை இது.டிவிட்டரில் 140 எழுத்துகளில் தகவல்களை பகிர்ந்து கொள்வது போல எல்லாவ்ற்றையும் 12 நொடி வீடியோவாக பகிர்ந்து கொள்ள வழி செய்யும் நோக்கத்தோடு உருவான தளம் இது.

வீடியோ வடிவிலான‌ குறும்பதிவு சேவையாக பரபர்ப்பை ஏற்படுத்திய இந்த தளம் மூடப்பட்டு விட்டது.

புழக்கத்தில் இருந்த காலத்தில் இந்த தளம் சுவாரஸ்யமான வழிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.ஈரானை சேர்ந்த மனிதர் ஒருவர் இதனை தினந்தோறும் பயன்படுத்தி ஈரானில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உலகிற்கு சாம்பிள் காட்டியிருக்கிறார்.

இதே போலவே சீஸ்மிக் டிவி என்னும் தளமும் கொஞ்ச காலம் புழக்கத்தில் இருந்தது.இதுவும் வீடியோ வழி பகிர்வு சேவையை அளித்த தளம் தான்.

https://www.vsnap.com/

poly

பேசுங்கள்;புதிய மொழியை கற்று கொள்ளுங்கள்!

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கைகொடுக்கும் இணையதளங்களின் வரிசையில் பாலிஸ்பீக்ஸ் இணையதளமும் சேர்ந்திருக்கிறது.

ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல்லாம் நடத்துவதில்லை.அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பும் மொழியில் பயிற்சி பெற உதவுகிற‌து.அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையாடலில் ஈடுபட வழி செய்கிற‌து.

புதிதாக மொழியை கற்க முற்படும் போது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரோடு பேசிப்பார்ப்பதை விட சிறந்த வழி வேறு இருக்க முடியாது.

இத்தகைய சிறந்த வழியை தான் பாலிஸ்பீக்ஸ் தளம் உண்டாக்கி தருகிறது.

இந்த தளத்தில் உறுப்பினரானவுடன் எந்த மொழியில் பேச வேண்டும் என்று கேட்பது போல பல்வேறு மொழி பேசுபவர்களோடு தொடர்பு ஏற்படுத்தி தருகிற‌து.பயனாளிகள் தாங்கள் கற்க விரும்பும் மொழி பேசுபவரோடு இணையத்தில் உரையாட துவங்கி விடலாம்.

உதாரனத்திற்கு ஜப்பானிய மொழி கற்று கொள்பவர்கள் இந்த தளம் மூலம் ஜப்பானியரோடு அரட்டை அடித்து அந்த மொழியில் உள்ள பேச்சு நுணுக்கங்களை தெரிந்து கொள்ள‌‌ முற்படலாம்.

இதே போலவே வேற்று மொழி பேசுபவர்களோடு வீடியோ வழியே உரையாடும் வசதியை வெர்ப்லிங் தளம் தருகிறது.

ஆனால் பாலிஸ்பீக்ஸ் வீடியோ வசதி இல்லாமல் சாட் செய்வது போலவே இணைய உரையாடலில் ஈடுபட வைக்கிறது.புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ளும் நிலையில் பேசுவதை விட எழுத்து மூலம் உரையாடுவதே உகந்த‌தாக இருக்கும் என்று நினைத்து இந்த அரட்டை வசதியை தருவதாக பாலிஸ்பீகஸ் தளம் தெரிவிக்கிற‌து.

பேஸ்புக் கணக்கை கொண்டே இதில் உறுப்பினராகி வேற்று மொழி பேசுபவருடன் அரட்டையில் ஈடுபட்டு மொழியை வளர்த்து கொள்ளலாம்,நட்பையும் வளர்த்து கொள்ளலாம்.

ஒரு காலத்தில் சாட் என்று சொல்லப்படும் அரட்டை தளங்கள் இணையத்தில் கொடி கட்டி பறந்தன.அதன் பிறகு அரட்டை தளங்களின் செல்வாக்கு தேய்ந்து போய்விட்டன.

அதன் பிறகு சாட்ரவுலட் தளம் மீண்டும் அர‌ட்டை தளங்களுக்கு புதிய மவுசை தேடித்தந்தது.

இந்த நிலையில் அரட்டையை மொழி கற்பது உள்ளிட்ட பயனுள்ள வழிகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை பாலிஸ்பீக்ஸ் போன்ற தளங்கள் ஏற்படுத்தி தருகின்ற‌ன.

இணையதள முகவரி;http://www.polyspeaks.com/

வெர்ப்லிங் பற்றிய எனது முந்தைய பதிவு இதோ;http://cybersimman.wordpress.com/2011/09/10/learning/

இது தொழில்நுட்ப தொலைக்காட்சி

இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக என்று தனியே ஒரு தொலைக்காட்சி சேனல் துவங்கப்பட்டால் எப்படி இருக்கும்?

இலக்கிய டிவியில் இலக்கிய கூட்டங்களின் நேரடி ஒளிபர‌ப்பை கண்டு ரசிக்கலாம்,எழுத்தாள‌ர்களின் நேர்முகத்தை கேட்டு மகிழலாம்,வாசக‌ர் சந்திப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பை பார்க்கலாம் என்றெல்லாம் இலக்கிய பிரியர்கள் நினைத்து மகிழலாம்.கூடவே இதெல்லாம் நடக்கிற கதையா என்றும் ஆதங்க‌ப்படலாம்.

மெகா சீரியல்கள் தவிர வேறுவிதமான நிகழ்ச்சிகள் டிஆர்பி க்கு உதவாது என்று கருதப்படும் நிலையில் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு என்று தொலைக்காட்சி மட்டும் அல்ல நம்மூர் டிவிகளில் இலக்கிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதே கடினம் தான்.

இலக்கிய பிரியர்களும் தனி இலக்கிய டிவி என்று பேராசைப்படுவதெல்லாம் இல்லை.

ஆனால் இலக்கிய டிவியை இணையத்தில் உருவாக்கி கொள்வது சாத்தியமே.அந்த டிவி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ள உதவியாக தொழில்நுட்ப டிவியாக துவங்கப்பட்டுள்ள டெக்டாக்ஸ் டிவியை மேற்கோள் காட்டலாம்.

தொழில்நுட்ப மாநாடு மற்றும் கருத்தரங்க உரைகள் ஆகியவர்றின் தொகுப்பு ,தொழில்நுடப் பயிலரங்குகளின் பதிவு,நிபுணர்கள் உரையின் நேரடி வீடியோ ஒளிபரப்பு என சகலமும் தொழில்நுட்ப மயமாக இருக்கிறது டெக்டாக்ஸ்.டிவி.

தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்த டிவியில் தொழில்நுட்பம் சார்ந்த பயனுள்ள வீடியோ தொகுப்புகளையும் உரைகளையும் கேட்டு பயன்பெறலாம்.

தொழில்நுட்பத்திற்கான தனி தொலைக்காட்சி போல வியக்கவும் லயிக்கவும் வைத்தாலும் அடிப்படையில் இந்த டிவி மிகவும் எளிமையானது.குறிப்பிட்ட தலைப்பிலான செய்திகளை ஒரே இடத்தில் திரட்டிதரும் வலைத்திரட்டிகளை போல இந்த டிவி தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை திரட்டித்தருகிறது.

தொழில்நுட்ப கருததரங்குகள் மற்றும் மாநாடுகள் ஆகியவற்றில் தொழில்நுட்ப நிபுணர்களின் சிந்டனையை கிளறக்கூடிய உறைகளையும் விவாதங்களையும் கேட்பதற்கான வாய்ப்புள்ளது.பல்வேறு பல்கலைகளும் இதர அமைப்புகளும் இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றன.

ஆர்வத்தோடு இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களும் கணிசமாக இருக்கின்றனர்.இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனவர்கள் அல்லது வாய்ப்பு கிடைக்காதவர்கள் வசதிக்காக நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் வீடியோவாக்கப்பட்டு யூடியூப்பில் பதிவேற்றப்படுகின்றன.நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளப்ப்படுகின்றன.ஒரு சில அமைப்புகல் இவ்ற்றை நேரடியாக இனையத்தில் ஒளிபரப்பவும் செய்கின்றன.

இப்படி தொழில்நுட்ப நிகழ்ச்சிகள் சார்ந்த வீடியோக்களின் தொகுப்ப்பாக டெக்டாக்ஸ்.டிவி திகழ்கிறது.

தொழில்நுட்பத்தில் நாட்டம் கொண்டவ‌ர்கள் இதில் இடம் பெறும் தொழில்நுட்ப வீடியோக்களை பார்த்தால் துள்ளி குதிப்பார்கள் .

பல்கலைகழங்களின் சொற்பொழிவுகளுக்கோ கருத்தரங்குகளுக்கோ போக வாய்ப்பில்லாதவ‌ர்கள் அங்கு நிகழ்த்தப்படு உரைகளை இங்கே பார்த்தும் கேட்டும் மகிழ‌லாம்.

தொழில்நுட்ப வீடியோக்கள் சமீபத்தில் பதிவேற்றப்பட்டவை,மிகவும் பிரபலமானவை,இப்போது பார்த்து கொண்டிருப்பவை என மூன்று விதமான தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.பார்த்து ரசித்த வீடியோவை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல விரைவில் நடக்க உள்ள நிகழ்ச்சிகளின் நேரடி இணைய ஒளிபரப்பிற்கான‌ அறிவிப்புகளும் இடம் பெறுகின்றன.

கல்லூரி மாணவர்கள்,ஆய்வு மாண‌வர்ள் மற்றும் தொழில்நுட்ப பிரியர்களுக்கு இந்த தொழில்நுட்ப டிவி ஒரு வரப்பிரசாதம் தான்.

தொழில்நுட்ப வீடியோக்களுக்கு என்று தனியே ஒரு இடம் உருவாக்ப்பட்டுள்ளதால் நிகச்சி ஏற்பாட்டாளர்கள் புதிய உற்சாகத்தோடு அவற்றின் வீடியோ ப‌திவை வெளியிடும் வாய்ப்புள்ளது.தொழில்நுட்ப வீடியோக்களை பார்த்து ரசிபவர்கள் அவற்ரை பகிர்ந்து கொள்வதால் மேலும் பல ரசிகர்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.இதன் காரணமாகவே கருத்தரங்களும் உரைகளும் நேரடியாக ஒளிபர்ப்படலாம்.

இதே அற்புதம் இலக்குயத்திலும் நிக்ழலாம்.ஆனால் அதற்கு முதலில் இலக்கிய கூட்டங்களை வீடியோவில் பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட் துவங்க
வேண்டும்.நிகழ்ச்சிகளை வெப்காஸ்டிங் செய்ய வேண்டும்.யூடியூப்பில் இல‌க்கியம் சார்ந்த கோப்புகள் கணிசமாக சேர்ந்தால் அதை கொண்டு ஒரு இணைய டிவியை துவக்கி விடலாம்.

இணையதள முக‌வரி;http://www.techtalks.tv/