இப்ப‌டியுமொரு இணைய‌த‌ள‌ம்

walmartஒரு இணைய‌த‌ள‌த்தை துவ‌க்குவ‌த‌ற்கான‌ எண்ண‌மும் ஊக்க‌மும் யாருக்கு எப்போது ஏற்ப‌டும் என்ப‌து சுவார‌ஸ்ய‌மான‌ விஷ‌ய‌ம் தான்.

சில‌ருக்கு சொந்த‌மாக‌ இணைய‌த‌ள‌ம் வேண்டும் என்ற‌ விருப்ப‌ம் இருக்க‌லாம். ஆனால் அந்த‌ த‌ள‌த்தில் என்ன‌ மாதிரியான‌ த‌க‌வ‌ல்க‌ளை இட‌ம்பெற‌ச்செய்வ‌து என‌த்தெரியாமால் திண்டாடிக்கொண்டிருக்க‌லாம்.

தொழில்நுட்ப‌ த‌டையைவிட‌ மீற‌ முடியாத‌ த‌டை இது.

ஆனால் ஒரு சில‌ருக்கு திடிரென‌ மின்ன‌ல் கீற்று போல‌ இணைய‌தள‌த்திற்கான‌ க‌ரு உருவாக‌லாம்.உட‌னே காரிய‌த்தில் இற‌ங்கி விடுவார்க‌ள்.

அமெரிக்காவை சேர்ந்த‌ மூன்று வாலிப‌ர்க‌ளுக்கு வால்மார்ட் விஜ‌யத்தின் போது இப்ப‌டிதான் ஒரு எண்ண‌ம் உத‌ய‌மான‌து. அத‌ன‌டிப்ப‌டையில் அவ‌ர்க‌ள் அமைத்த‌ இணைய‌த‌ள‌ம் பிர‌ப‌ல‌மாக‌வும் ஆகியுள்ள‌து.

வால்மார்ட் அமெரிக்காவின் பிர‌ப‌ல‌மான‌ சூப்ப‌ர் மார்கெட்.தூங்கா ந‌க‌ர‌ம் போல் அத‌னை தூங்கா வ‌ளாக‌ம் என்றும் சொல்ல‌லாம்.வால்மார்ட்டிற்கு ப‌ல‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் வ‌ந்து செல்கின்ற‌ன‌ர்.அவ‌ர்க‌ள் ப‌ல‌வித‌ உடைய‌ணிந்தும் வ‌ருகின்ற‌ன‌ர்.ஒரு சில‌ரரின் உடை விநோத‌மாக‌ இருக்க‌லாம். சில‌ர‌து உடை பார்த்த‌வுட‌ன் சிரிப்பை உண்டாக்க‌லாம்.

இவ‌ர்களை எல்லாம் ப‌ட‌ம் பிடித்து போடுவ‌த‌ற்காக‌ என்றே ‘பியுப்பில் ஆப் வால்மார்ட்’ என்னும் த‌ள‌த்தை ஆன்ட்ரூ ம‌ற்றும் அவ‌ர‌து ந‌ண்ப‌ர்க‌ள் துவ‌க்கியுள்ள‌ன‌ர்.

வால்மார்ட்டிற்கு வேடிக்கையாக‌வும் விவ‌கார‌மாக‌வும் உடைய‌ணிந்து வ‌ருப‌வ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ள் இந்த‌ தள‌த்தில் இட‌ம்பெறுகின்ற‌ன‌.

ஒரு முறை ஆண்ட்ரூ வ‌ட‌க்கு க‌ரோலினாவில் உள்ள‌ வால்மார்ட் க‌டைக்கு சென்றிருந்த‌ போது ஒரு பெண்ம‌ணி அணிந்திருந்த‌ ஆடையை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க‌த்தோன்றிய‌தாம்.கொஞ்ச‌ம் த‌ள்ளிச்சென்ற‌ போது வொநோத‌மாக் தாடி வைத்திருந்த‌ ம‌னித‌ர் க‌ண்ணில் ப‌ட்ட‌ராம். தொட‌ர்ந்து க‌வ‌னித்து பார்த்த‌போது மேலும் சில‌ விநோத‌மான‌வ‌ர்க‌லை பார்க்க‌ முடிந்த‌தாம்.

பின்ன‌ர் ஆன்ட்ரு த‌ன‌து ந‌ன்ப‌ர்க‌ளோடு பேசிக்கொண்டிருந்த‌போது இந்த‌ காட்சிக‌ளை புகைப்ப‌ட‌மெடுத்து ஒரு இணைய‌த‌ள‌த்தில் இட‌ம்பெற‌ வைக்க‌லாமே என்று தோன்றிய‌தாம். உட‌னே மேலே சொன்ன‌ த‌ள‌த்தை துவ‌க்கி விட்ட்ன‌ர்.

ஆர‌ம்ப‌த்தில் த‌ங்க‌ள் ந‌ட்பு வ‌ட்ட‌தை தாண்டி இந்த‌த‌ள‌ம் பார்க்க‌ப்ப‌டும் என்ற‌ எண்ண‌ம் கூட‌ அவ‌ர்க‌ளுக்கு இருக்க‌வில்லை.ஆனால் உள்ளூர் இனைய‌த‌ள‌ம் ஒன்று இதுப‌ற்றி த‌க‌வ‌ல் தெரிவித்து இணைப்பை கொடுத்த‌ பிற‌கு இந்த தள‌ம் திடீரென‌ பிர‌ப‌ல‌மாகி விட்ட‌தாம்.

ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் இந்த‌ ப‌ட‌ங‌க்ளை பார்த்து ர‌சிப்ப‌தோடு தாங்க‌ல் எடுத்த‌ ப‌ட‌ங்க‌ளையும் அனுப்பி வருகின்ற‌ன‌ர்.

இந்த‌ த‌ள‌த்தின் அடிப்ப‌டையான‌ நோக்க‌ம் கிண்ட‌ல் செய்வ‌து தான் என்றாலும் அத‌ற்கு ஒரு வ‌ரைமுறை வைத்துள்ள‌ன‌ர்.ஊன‌முற்றோர்,குண்டான‌வ‌ர்க‌ள்,தொட‌ர்பான‌ ப‌ட‌ங்க‌ள் க‌ண்டிப்பாக‌ அனும‌திக்க‌ப்ப‌டுவ‌தில்லையாம்.

—–
link;
http://www.peopleofwalmart.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இப்ப‌டியுமொரு இணைய‌த‌ள‌ம்

  1. இதற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லையா! 🙂

    Reply
    1. cybersimman

      என்னுடையது இல்லை என்று ஒதுங்கியுள்ளனர்

      Reply
  2. தளம் திறக்கவில்லை

    Reply
    1. cybersimman

      மன்னிக்கவும் தொழில்நுட்ப கோளாறு என்று கருதுகிறேன்

      Reply
  3. இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது

    இனையமுகவரி :
    டெக்னாலஜி.காம்

    Reply
  4. நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்….

    நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

    எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

    நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

    இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்….. தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

    இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

    ஊர் கூடி தேர் இழுப்போம்.

    எப்படி பணம் அனுப்புவது ?

    முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

    Reply

Leave a Comment

Your email address will not be published.