நம் பேஸ்புக் பதிவுகள் யாருக்கு சொந்தம்?

இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும். வைரஸ் தாக்குதலும், ஹேக்கர்கள் கைவரிசையும், மால்வேர் பாதிப்புகளும் மட்டும் அல்ல, வைரலாக பரவும் பொய்யான தகவல்களும் கூட இணையவாசிகளை ஏமாற்ற காத்திருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, பேஸ்புக்கில் பயனாளிகளின் தனியுரிமையை பாதுகாப்பது தொடர்பாக பரவிய அறிவிப்பை சொல்லலாம்.

பேஸ்புக்கில் நிலைத்தகவலாக இந்த அறிவிப்பை பார்த்தவர்கள் திடுக்கிட்டு போயிருப்பார்கள். ஏனெனில், பேஸ்புக்கில் பயனாளிகள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் மற்றும் ஒளிபடங்கள் அனைத்தும் பொதுவெளியில் வர உள்ளன, ஏற்கனவே டெலிட் செய்த தகவல்களுக்கும் இது பொருந்தும் என்றும், இதற்கேற்ற வகையில் பேஸ்புக் தனது தனியுரிமை (பிரைவஸி) கொள்கையை மாற்றி இருக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சேனல் 13 ல் செய்தி வெளியாகி இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுருந்ததோடு, பேஸ்புக் உங்கள் தகவல்கள் மற்றும் ஒளிப்படங்களை பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், பேஸ்புக்கிற்கு எதிராக ஒரு சட்ட அறிவிப்பை உங்கள் பேஸ்புக் சுவற்றில் வெளியிட வேண்டும் என்பது போலவும் அந்த அறிவிப்பு அமைந்திருந்தது.

இது போன்ற அறிவிப்பை வெளியிடா விட்டால், உங்கள் தகவல்கள் மற்றும் ஒளிப்படங்களை பேஸ்புக் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது போல ஆகிவிடும் என்ற எச்சரிக்கையும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த அறிவிப்பை பகிர்ந்தால் பயனில்லை, அப்படியே காபி பேஸ்ட் செய்து வெளியிடவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மாத இறுதியில் பேஸ்புக்கிலும், இணையத்திலும் பரவலாக வலம் வந்த இந்த அறிவிப்பு அப்பாவி பயனாளிகளிடம் பல வித குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. என்னடா இது, நம் பேஸ்புக் பக்கத்தில் இப்படி ஒரு சட்ட அறிவிப்பை வெளியிட்டால் தான் நமக்கு பாதுகாப்பா?என்றும் கூட பலர் கவலைப்பட்டிருக்கலாம்.

ஆனால் நல்ல வேளையாக அதே வேகத்தில் இது உண்மையான அறிவிப்பு அல்ல, எமாற்று வேலை என்பது தெரிய வந்தது. பேஸ்புக் நிறுவன தரப்பிலும் இது தொடர்பாக அதிகாரபூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டது. பேஸ்புக்கில் வலம் வரும் தனியுரிமை தொடர்பான பதிவு பொய்யானது, பேஸ்புக்கில் நீங்கள் பகிரும் தகவல்கள் உங்களுக்கே சொந்தம், அவை எப்படி பகிரப்படுகின்றன என்பதையும் பிரைவசி செட்டிங் படி நீங்கள் தீர்மானிக்கலாம் என பேஸ்புக் தெளிவுபடுத்தியது.

பேஸ்புக் பயனாளிகளை ஏமாற்ற பார்க்கும் இந்த பொய்யான அறிவிப்பு கூட ஏற்கனவே கடந்த ஆண்டு உலா வந்தது தான். அதன் வேறுபட்ட வடிவம் தான் இப்போது மீண்டும் தலை தூக்கியிருக்கிறது, இதை பார்த்து ஏமாற வேண்டாம் என்று இணைய நோக்கர்களும் கூறியுள்ளனர். அது மட்டும் அல்ல, 2012 ம் ஆண்டிலும் இதே போன்ற பொய்யான பதிவு வலம் வந்திருக்கிறது. அதோடு பேஸ்புக் பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், கட்டணச்சேவை அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கும் பொய்யான அறிவிப்பும் உலா வந்திருக்கிறது.

ஆக, பயனாளிகள் பேஸ்புக் சுவற்றில் எந்த அறிவிப்பையும் வெளியிட்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த அறிவிப்பை பகிர வேண்டாம், காபி பேஸ்ட் செய்யுங்கள் எனும் வேண்டுகோளில் இருந்தே இதன் பொய்யான தன்மையை புத்திசாலி இணையவாசிகள் புரிந்து கொண்டிருக்கலாம். ஏனெனில் அப்போது அதை பார்க்கும் மற்றவர்களும் ஏமாந்து போவார்கள்.

எனவே பேஸ்புக் பயனாளிகள் இந்த பொய்யான பதிவுகள் குறித்து தூக்கத்தை தொலைக்க வேண்டியதில்லை. ஆனால் பேஸ்புக் உள்ளிட்ட பிரபலமான சேவைகள் குறித்து இது போன்ற பொய்யான பதிவுகள் உருவாக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். இது தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என்பதோடு, இணையத்தில் சந்தேகப்படும்படியான தகவல்கள் உலா வரும் போது, ஸ்நோப்ஸ்.காம் (www.snopes.com/computer/facebook/privacy.asp ) போன்ற இணையதளங்களில் இதற்கான விளக்கத்தை தேடிப்பார்க்கலாம். இணையத்தின் ஆரம்ப காலம் முதல் இத்தகைய பொய்யான வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் குறித்த ஆதாரபூர்வமான விளக்கத்தை இந்த தளம் அளித்து வருகிறது.

இந்த விழிப்புணர்வுடன் பேஸ்புக் பயனாளிகள் தங்களின் தகவல்கள் பயன்படுத்தப்படும் விதம் குறித்து கொஞ்சம் அறிந்து வைத்திருப்பது நல்லது என தனியுரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பேஸ்புக் தெரிவித்துள்ள படி, பயனாளிகள் வெளியிடும் நிலைத்தகவல்கள் அவர்களுக்கே சொந்தமானவை. அவற்றுக்கு பேஸ்புக் உள்பட யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், நிலைத்தகவல்களை பேஸ்புக் சொந்தம் கொண்டாட முடியாதே தவிர, அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பாக அந்நிறுவனத்திற்கு பரவலான உரிமை இருக்கிறது.

பேஸ்புக்கில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளும் போது, பயனாளிகள் ஏற்றுக்கொள்ளும் அதன் விதிமுறைகள் மற்றும் ஒப்பந்தங்களின் ஷரத்து படி, தகவல்களை பேஸ்புக் தனது விருப்பம் போல பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் அளிக்கின்றனர். ஏற்கனவே ஒப்புக்கொண்ட இந்த விதிமுறையை எந்த ஒரு பயனாளியும் தனியே மறுபரிசீலனை செய்யக்கோர முடியாது. விதிமுறைகள் ஏற்புடையதாக இல்லை என்று நினைத்தால் பேஸ்புக் கணக்கை டெலிட் செய்யலாம். ஆனால் அப்போது கூட பழைய தகவல்களை நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாது என்கின்றனர்.

இருந்தாலும், பேஸ்புக்கில் தகவல்கள் பகிரப்படும் விதத்தை பயனாளிகள் ஓரளவு கட்டுப்படுத்தலாம். தங்கள் கணக்கில் பிரைவஸி செட்டிங் பகுதிக்குச்சென்று, தகவல்களை யார் பார்க்க்லாம், யார் அணுகலாம் என்பது தொடர்பான கட்டுப்பாடுகளை உண்டாக்க முடியும். இது தொடர்பாக விளக்கம் தேவை என்றால் இணைய பாதுகாப்பு வல்லுனரான கிராஹாப் குலுலே எழுதியுள்ள இந்த பதிவை அணுகலாம்: https://www.grahamcluley.com/2016/03/facebook-privacy-settings/

அப்படியே, பயனாளிகளின் தகவல்கள் மற்றும் பகிர்வுகளை பேஸ்புக் கண்காணித்து அவற்றை விளம்பர நோக்கில் பயன்படுத்தி வருவது குறித்து தனியுரிமை ஆர்வலர்கள் முன்வைக்கும் விமர்சனம பற்றியும் கொஞ்சம் அறிந்து கொள்வது நல்லது. விளம்பரங்கள் மட்டும் அல்லாமல் நியூஸ்ஃபீட் பரிந்துரை உள்ளிட்டவை இப்படி பயனாளிகள் பதிவுகளின் உள்ளட்டகத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன, என்றும் இவை அந்தரங்கத்தின் மீதான ஊடுருவல் என்ற விமர்சனமும் வலுப்பெற்று வருகிறது. பேஸ்புக் மட்டும் அல்ல, பொதுவாகவே இணைய பயன்பாட்டை தனியுரிமை நோக்கில் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகி இருக்கும் காலம் இது.

வால்; சமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் வெளியிட்ட ஒரு ஒளிப்படத்தில் அவர் தனது லேப்டாப்பில் வேப்காமிராவை டேப் போட்டு மூடியிருந்ததை சுட்டிக்காட்டும் செய்திகள் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தின. தாக்களர்கள் மால்வேர் மூலம் வெப்காமிராவை கட்டுப்படுத்தி அதன் வழியாக காட்சிகளை படம் பிடித்து ஒளிபரப்புவது போன்ற ஆபத்திற்கு எதிரான தற்காப்பாக ஜக்கர்பர்கின் செயல் அமைகிறது. இதே போன்ற முன்னெச்சரிக்கை இணைய பயனாளிகளுக்கும் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் மற்றும் அவை பயன்படுத்தப்படும் விதம் பற்றி தேவை என்கின்றனர் இணைய வல்லுனர்கள்!

——

நன்றி; இந்து தமிழி வெற்றிக்கொடி பகுதிக்காக எழுதியது.

https://www.facebook.com/fbfacts/1573108242983244

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

One Comment on “நம் பேஸ்புக் பதிவுகள் யாருக்கு சொந்தம்?

  1. karthi

    ஐயா கிராஹாப்
    குலுலே எழுதியதை எளிய தமிழில் அனைக்கும் புரியும் மாதிரி படங்களோடு நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். இன்றைய நிலையில் அனைத்து இளைஞர்களும் பேஸ்புக்கில் உள்ளனர். ஆனால் பேஸ்புக்கில் எப்படி பிரைவசி செட்டிங்கை செட் செய்ய வேண்டும் என்று பலருக்கு தெரியவில்லை. குறிப்பாக பெண்கள் சுவாதி கொலைக்கு பிறகு பிரைவசிக்கு பயந்து பேஸ்புக்கை விட்டே நிறைய பேர் வெளியேறிவிட்டனர். அப்படியே இருந்தாலும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளனர். எதையும் பகிர்ந்து கொள்ள பயப்படுகிறார்கள். குறிப்பாக போட்டோக்களை. எனவே பேஸ்புக் பிரைவசி செட்டிங் பற்றி நீங்கள் தனியாக ஒரு கட்டுரை எழுதினால் நல்ல வரவேற்பை பெரும் என்று நினைக்கிறேன்.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *