தகவல் திங்கள்; முடிவில்லா குதிரையும், இணைய கண்டறிதலும்!

ஒரு சில இணையதளங்கள் இணைய கலை திட்டங்களாக உருவாக்கப்படுகின்றன தெரியுமா? இந்த தளங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கும். அவை வழக்கமான இணையதளங்கள் போல இல்லாமல் ஏதாவது ஒரு வகையில் வித்தியாசமான தன்மையுடன் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். அதோடு, அவற்றின் உள்ளட்டக்கம் ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்டதாக அல்லது ஒரு குறிப்பிட்ட செய்தியை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும்.

இதற்கான அழகான உதாரணம் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இப்போது, முடிவில்லா குதிரை இணையதளத்தை மட்டும் பார்க்கலாம்.எண்ட்லஸ்.ஹார்ஸ் (http://endless.horse/ ) எனும் இந்த தளத்தில் நுழைந்தால் அசந்துல் போவீர்கர்கள்- கூடவே அலுத்துக்கொள்ளவும் செய்வீர்கள்.

இந்த தளத்தின் ஒரு குதிரை படத்தை தவிர வேறு எதுவும் கிடையாது. அந்த குதிரையும் வித்தியாசமாக இருக்கும். சித்திரமாகவோ ஓவியமாகவோ இல்லாமல் கோடுகள், அடைப்புக்குறிகள் ,புள்ளிகள் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட குதிரை இது. கம்ப்யூட்டர் மொழியில் இந்த வகை சித்திரங்களுக்கு ஒரு பெயர் இருக்கிறது.

வெள்ளை நிற பின்னணியில், கோட்டுருவமாக காணப்படும் இந்த குதிரையின் கால்கள் சின்ன சின்ன கோடுகளாக நீள்கிறது. இந்த நீளத்தில் தான் தளத்தின் விஷயமே இருக்கிறது. குதிரையின் கால்களை பார்க்கலாம் என்று கொஞ்சம் கீழே இறங்கி வந்தால் கால்கள் நீண்டு கொண்டே இருக்கிறது. மவுசை எந்த அளவு ஸ்கிரோல் செய்தாலும் சரி, கால்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன. ஸ்கிரோல் செய்ய செய்ய, குதிரையின் கால்கள் நீண்டு கொண்டே தான் இருக்கும், முடிவில்லாமலே- அது தான் இந்த தளத்தின் சிறப்பு.

ஆக, இது முடிவில்லா குதிரை. அது தளத்தின் பெயரும் கூட. பொருததமாக தான் இருக்கிறது அல்லவா?
நிச்சயம் முதல் அறிமுகத்தில் புன்னகைக்க வைக்ககூடிய தளம் தான் அல்லவா!
எல்லாம் சரி, எதற்கு இந்த முடிவில்லா குதிரை தளம்.

வெறும் நகைச்சுவை தான் இதன் நோக்கமா? இந்த இணையதளத்தின் அதன் நோக்கத்தை தெரிவிக்கும் அறிமுகப்பகுதி எதுவும் இல்லாததால் இந்த கேள்விகளுக்கான பதில் தெரியவில்லை. ஆனால் ஒன்று இந்த தளம் வடிவமைக்கப்பட்ட விதத்தில் சின்னதாக ஒரு புரோகிராமிங் நுட்பம் இருக்கிறது. அந்த நுட்பத்தை விளையாட்டு நோக்கில் பயன்படுத்தியுள்ளனர்.

இணையத்தில் பயனில்லா இணையதளங்கள் என்று ஒரு ரகம் இருக்கிறது. ஏதேனும் ஒரு வகையில் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்ட ஆனால் வேறு எந்த பயனும் இல்லாத தளங்களை இப்படி சொல்கின்றனர்.
முடிவில்லா குதிரை தளமும் இந்த ரகம் தானோ என்று நினைக்கலாம். இந்த நினைப்புடன் மறந்தும் விடலாம்.
ஆனால் முடிவில்லா குதிரை தேடலை கொஞ்சம் மேற்கொண்டு பார்த்தால் சுவாரஸ்யமான பல விஷயங்கள் தெரிய வருகின்றன.

கூகுளில் இருந்து தேடத்துவங்கினால், முடிவில்லா குதிரை தளம் பற்றி ரெட்டிட் சமூக தளம் மற்றும் போயிங் போயிங் வலைப்பதிவில் குறிப்புகளை பார்க்க முடிகிறது. ரெட்டிட்டின் விவாதம் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கிறது.

முடிவுகளை தேடியபடி சென்றால் , கோலீன் ஜோசப்சன் என்பவரின் இணையதளம் தட்டுப்படுகிறது. அவர் தான் இந்த முடிவில்ல குதிரையை உருவாக்கியவர்.
2015 ம் ஆண்டில் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார். மிகவும் விநோதமான நோக்கத்தோடு நடத்தப்படும் ஹேக்கத்தான் நிகழ்வுக்கான இதை உருவாக்கி சமர்பித்திருக்கிறார்.

ஹேக்கத்தான் நிகழ்வுகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். தொழில்நுட்ப ஆர்வலர்களி ஓரிடத்தில் திரளச்செய்து, இணையதளம், செயலி போன்றவற்றை உருவாக்கச்செய்யும் நோக்கத்துடன் இவை நடத்தப்படுகின்றன. ஒரு வகையான போட்டி என்றும் வைத்துக்கொள்ளலாம். புதியவற்றை உருவாக்க ஊக்கமும் வாய்ப்பும் அளிக்கும் போட்டி. பல வகையான ஹேக்கத்தான்கள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.

இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு எந்தவித பயனில்லா மற்றும் ஒருவருக்கும் பயன்படாத இணைய தளங்களை உருவாக்குவதற்காக என்றெ அமெரிக்காவில் ஸ்டுப்பிட் ஷிட் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க தான் அவர் முடிவில்லா குதிரை தளத்தை உருவாக்கி சமர்பித்திருக்கிறார்.
இந்த போட்டியில் சமர்பிக்கப்பட்ட மற்ற தளங்களை பார்த்தால் நம்பமுடியாமல் இருக்கிறது. இப்படி எல்லாம் படைப்பாற்றலை வெளிப்படுத்த முடியுமா என அவை வியக்க வைக்கின்றன. ஆனால் எல்லாமே பயனில்லா நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது கொஞ்சம் அயர்ச்சியை தரலாம்.- http://stupidhackathon.github.io/
நிற்க, முடிவில்லா குதிரையை முற்றிலும் பயனில்லாத தளம் என்று ஒதுக்கிவிட முடியாது.
இந்த தளத்தின் பெயரில் விஷயம் இருக்கிறது.

டொமைன் நேம் என குறிப்பிடப்படும் இணைய முகவரிகள் வெறும் டாட்.காம், டாட்.ஆர்க் என இருந்த நிலை மாறி இப்போது பல விதமான விரிவடைந்திருக்கின்றன. டாட்.பிஸ் போன்ற முகவரிகளுடன் டாட்.லண்டன் போன்ற முகவரிகள் எல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இப்படி சகட்டு மேனிக்கு இணைய முகவரிகள் அறிமுகமாகும் போது பயனில்லா முகவரிகள் பல இருக்கும், அதில் என் பங்கிற்கு ஒன்று இருக்கட்டுமே என்று முடிவில்லா குதிரையை உருவாக்கியதால ஜோசப்சன் தனது தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இணையதளத்தில் இதே போன்ற மேலும் பல புதுமையான இணைய உருவாக்கங்களை பார்க்க முடிகிறது. அமெரிக்காவின் ஸ்டாட்போர்ட் பல்கலையில் பி.எச்டி மாணவியான இவர் கம்ப்யூட்டர் நெட்வொர்கிங் மற்றும் டிஜிட்டல் தொடர்பில் ஆய்வு செய்ய இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு விநோதமான இணையதளத்தின் பின்னணியை தேடிச்சென்றதில் எத்தனை விதமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது எனும் வியப்பு எனக்கு. இந்த வியப்பு தான் இணையத்தில் தொடர்ந்து சலிப்பில்லாமல் உலாவ வைத்து, கண்டறியும் விஷயங்களை பகிர வைக்கிறது.
horse
இணைய வாசகர் ஒருவர், என் வலைப்பதிவில் அறிமுகம் செய்யும் இணையதளங்களை எல்லாம் எப்படி கண்டறிகிறேன் என கேட்டிருந்தார். அவருக்கு என்ன பதில் சொல்லலாம் என யோசித்துக்கொண்டிருந்த போது தான் ,முடிவில்லா குதிரையை தேடிச்சென்ற அனுபவத்தை எழுத தீர்மானித்தேன். அலுப்பாக இருந்திருக்காது என நம்புகிறேன்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *