ரோபோ புன்னகை என்ன விலை?

DOnf8ENXcAAXL_Zவிருதுகள், தேர்வுகள் என்று வந்தாலே சர்ச்சைகள் எழுவது இயல்பானது தான். ஆனால், சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றில் எழுந்திருக்கும் சர்ச்சை கொஞ்சம் வித்தியாசமானது. இந்த சர்ச்சை விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட புகைப்படத்தின் தரம் அல்லது தகுதி குறித்து உண்டாகவில்லை. மாறாக புகைப்படத்தில் இருக்க வேண்டிய உயிர்த்துடிப்பு அல்லது ஆன்மா தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. இந்த கேள்விகள் சுவாரஸ்யமாக அமைவதோடு, நம் காலத்து கேள்விகளாகவும் இருப்பது தான் முக்கிய விஷயமாக இருக்கிறது.

சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அந்த புகைப்படத்தில் ஒரு நல்ல புகைப்படத்திற்கு தேவையான எல்லா அம்சங்களும் இருக்கவே செய்கின்றன. அந்த படம் அழகாக இருக்கிறது. அதில் ஒரு வசீகரம் இருக்கிறது. அது ஒரு மைய கருத்தை பேசுகிறது. எல்லாம் இருந்தும் அந்த படத்தினுள் உயிரோட்டம் இல்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில் அந்த படத்தில் இருப்பது மனித முகம் அல்ல, மனித இயந்திரம் முகம் என்பது தான்!

மனித மாதிரிகளை போஸ் கொடுக்க வைத்து படம் எடுப்பது போல, புகைப்பட கலைஞர் ஒருவர் இயந்திர மனித மாதிரியை போஸ் கொடுக்க வைத்து படம் எடுத்திருக்கிறார். படம் எடுத்தவர் பின்லாந்து நாட்டைச்சேர்ந்தவர். அவர் படம் எடுத்த மாதிரி, ஜப்பானைச்சேர்ந்த எரிகா எனும் எந்திரன். எரிகா ஒரு ரோபோ தான் என்றாலும், சாதாரண ரோபோ அல்ல. அது ஒரு ஆண்ட்ராய்டு. அதாவது மனித முகம் போன்ற தோற்றத்தை கொண்ட ரோபோ.

ரோப்போக்களி;ல் பலவகை உண்டு. தொழிற்சாலைகளில் பார்க்க கூடிய ரோபோக்கள் இயந்திர வகையை சேர்ந்தவை. மனித வடிவிலான ரோபோக்களும் இருக்கின்றன. ஹோண்டோவின் அசிமோ இதற்கு நல்ல உதாரணம். ரோபோ விலங்குகளும் உள்ளன. அண்மையிம் மறுஅறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட சோனியின் ஐபோ நாய்க்குட்டி இதற்கு அழகான உதாரணம். இன்னும் பல வகை ரோபோக்கள் உள்ளன. இவற்றில் அச்சு அசல் மனித உருவத்தை கொண்டுள்ளவை ஆண்ட்ராய்டு என குறிப்பிடப்படுகின்றன.

ஆண்ட்ராய்டு ரோபோவுக்கு உதாரணம் தேவையில் எனில் நமக்கு பரீட்சயமான எந்திரன் படத்தின் சிட்டி ரோபோவை சொல்லலாம். ரஜினியை போலவே காட்சி அளித்தததால் தான் சிட்டி ஆண்ட்ராய்டு ரகம். இத்தகைய ஆண்ட்ராய்டு ரோபோ உருவாக்கத்திலும், ஆய்விலும் முன்னணியில் இருப்பது ஜப்பானியர்கள் தான். அதிலும் ஹிரோஷி இஷிகுரோ (Hiroshi Ishiguro ) எனும் விஞ்ஞானி தான் படுகில்லாடியாக இருக்கிறார். ரோபோ குரு என்றே வர்ணிக்கப்படும் இஷிகுரோ, மனித வடிவிலான ரோபோக்களை உருவாக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். சுய தோற்றம் கொண்ட ரோபோ ஒன்றையும் உருவாக்கியுள்ள இஷிகுரோவின் மற்றொரு உருவாக்கம் தான் எரிகா.

23 வயது பெண் தோற்றம் கொண்ட எரிகாவை விஷேசமான ரோபோ என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இது பேசும் ரோபோ என்பது மட்டும் அல்ல, கிட்டத்தட்ட மனிதர்கள் போலவே பேசும் ஆற்றலும் கொண்டது. குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் உரையாடவும் செய்யக்கூடியது. உலகிலேயே மிகவும் அழகான ஆண்ட்ராய்டு என வர்ணிக்கப்படும் எரிகா, மனித தோற்றத்துக்கு மிகவும் நெருக்கமான உருவ அமைப்பையும் கொண்டிருக்கிறது.

இஷிகுரோ உருவாக்கிய ரோபோக்களில் எரிகா மட்டும் தான் சுயம்பு ரகம். அதாவது, மனித மாதிரியை அடிப்படையாக கொள்ளாமல் சுயேட்சையாக உருவாக்கப்பட்டது.

எரிகா ரோபோ பற்றியே நிறைய பேசலாம். ஆனால், இப்போதைக்கு எரிகாவால் உண்டான சர்ச்சை மற்றும் அது தொடர்பான இருத்தலியல் கேள்விகள் பார்க்கலாம்.

எரிகா அச்சு அசல் பெண் போலவே இருப்பதால் பின்லாந்து புகைப்படக்கலைஞரான மைஜா டம்மி என்பவர், எரிகாவை அழகாக படமெடுத்து டெய்லர் வெஸிக் போட்டோகிராபில் போர்ட்ரய்ட் பரிசுக்கு அனுப்பி வைத்தார். அந்த புகைப்படம் இறுதிச்சுற்றுக்கு தேர்வானதோடு, மூன்றாவது பரிசையும் வென்றிருக்கிறது. இந்த தேர்வே சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

போட்டியே போர்ட்ரயட் எனப்படும் உருவப்படம் தொடர்பானது. உருவப்படம் என்றால், மனிதர்களின் ஆளுமை சித்திரங்கள் என புரிந்து கொள்ளலாம். இந்த வகை படங்கள் பல உணர்வுகளை சொல்லாமல் சொல்லக்கூடியவை. இந்த போட்டியிலேயே முதல் பரிசை வென்ற லிபியா கடற்கரை பகுதியில் மீட்கப்பட்ட ஆப்பிரிக்க அகதியின் புகைப்படம் இதற்கான சரியான உதாரணமாக அமைகிறது. காமிராவை அகன்ற கண்களால் வெறித்துப்பார்ப்பது போல அமைந்துள்ள அந்த அகதியின் ஊடுருவும் பார்வை, மீட்கப்பட்ட நம்பிக்கை, சூழலின் மீதான அவநம்பிக்கை, இனம் புரியாத அச்சம் என பலவித உணர்வுகளை பேசுவதாக பாராட்டப்படுகிறது.

இத்தகைய ஆளுமை சித்திரங்கள் நடுவே ஒரு ரோபோ படத்தை தேர்வு செய்வது சரியா? என்பது தான் கேள்வியாக எழுந்துள்ளது. ஆனால், இந்த கேள்விக்கு பதில் தேடும் முன் எரிகாவின் உருவப்படத்தை ஒரு முறை பார்த்துவிட வேண்டும். முதல் பார்வைக்கு ஜப்பானிய பெண் எனும் தோற்றத்தை தரக்கூடிய அந்த புகைப்படத்தில் எரிகா, பக்கவாட்டில் நோக்கியபடி புன்னகைக்க முயல்பவர் போல காட்சி அளிக்கிறார். இந்த படத்தை சட்டென்று பார்க்கும் எவரும் இதில் உள்ளது ரோபோ என உணர மாட்டார்.

எனினும் எரிகா ரோபோ என்று கண்டுபிடிக்க முடியாதது என்பதல்ல விஷயம். எரிகா எனும் ரோபோவை படம் எடுத்து அனுப்பியிருக்கிறேன் என்று குறிப்பிட்டே புகைப்பட கலைஞர் டம்மி போட்டியில் பங்கேற்று இருக்கிறார். இந்த விஷயம் தெரிந்து விவாதிக்கப்பட்டே நடுவர்களும் இந்த படத்தை அனுமதித்து தேர்வும் செய்துள்ளனர்.

_97673208_taylor_wessing_ppp_2017_0155உருவப்படத்திற்கான போட்டி விதிகளின் படி, வாழ்க்கையில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் மற்றும் உயிருடன் போஸ் கொடுத்தவரின் படமாக இருக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி பார்த்தால், ரோபோவை படமெடுத்தது உருவப்படம் கீழ் வராது. ஆனால் இந்த காரணத்தினால் படத்தை தகுதி நீக்கம் செய்யாமல், தேர்வு செய்ய நடுவர்கள் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக விதிகளில் மாற்றம் தேவையா என பின்னர் தீர்மானிக்கபடும் என கூறியுள்ள போட்டி நிர்வாகிகள், ஒரு சில தீவிரமான உருவப்பட சித்திரங்கள், அவற்றின் ரகம் தொடர்பாக வலுவான கேள்விகளை எழுப்பக்கூடியவை எனும் அடிப்படையில் எரிகாவின் தேர்வு அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு ரோபோ புகைப்படம் பரிசுக்குறியதாக தேர்வு செய்யப்பட்டது சுவாரஸ்யமாக இருந்தாலும், புகைப்பட வல்லுனர்கள் இதை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர். உருவப்படம் என்பது ஜீவன் சார்ந்தது, உயிரில்லாத ஒரு படத்தை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த படம் அழகாக இருக்கலாம் ஆனால், அதில் ஜீவனோ, உயிரோட்டமோ இல்லையே என விமர்சித்துள்ளனர். எரிகா ஒரு பொம்மை போல் அல்லவா இருக்கிறது, அதன் ஆன்மா எங்கே என்றும் சிலர் கேட்டுள்ளனர்.

இந்த கேள்விகளே அழமான விவாதத்திற்கு வழி வகுத்துள்ளன. ரோபோக்கள் சகஜமாக துவங்கும் சாத்தியம் உள்ள சூழலில், ஆன்மா இல்லை என்பதால் அவற்றை நிராகரிக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. அதிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பேசும் இயந்திரங்களும், இன்னும் பிறவகை புத்திசாலி இயந்திரங்களும் உருவாக்கப்பட்டு வரும் சூழலில் இயந்திரம் தொடர்பான நம்முடைய புரிதல் எவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் எனும் கேள்வி எழுகிறது.

ஒரு சில புகைப்பட கலைஞர்கள் எரிகா சர்ச்சை சார்ந்து இருத்தலியல் தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். எது ரோபோ தன்மை, எது மனித தன்மை எனும் கேள்விகளும் இது தொடர்பாக எழுகின்றன.

எரிகாவை படமெடுத்த புகைப்படக்கலைஞர் டம்மி எதிர்பார்த்ததும் இத்தகைய விவாதத்தை தான். ’ மனிதர்களாக இருப்பது என்றால் என்ன? உயிருடன் இருப்பது என்றால் என்ன? என்பது போன்ற கேள்விகளை எழுப்ப முயன்றிருக்கிறேன் என அவர் கூறியிருக்கிறார். இதற்காகவே ஜப்பான் சென்று எரிகாவுடன் அரை மணி நேரம் செலவிட்டு இந்த படத்தை எடுத்துள்ளார்.

புகைப்படக்கலையில் டாக்டர் பட்டம் பெற ஆய்வு செய்து வருபவர் ரோபோக்களை நாம் அணுகும் விதத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார். அவர் எழுப்பும் கேள்வியில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? உங்கள் பதிலை பதிவு செய்யுங்களேன்.

எரிகா தேர்வு புகைப்பட போட்டி செய்தி: http://www.bbc.com/news/in-pictures-41161964

புகைப்பட போட்டி அமைப்பின் இணையதளம்: https://www.npg.org.uk/whatson/twppp-2017/exhibition.php

நன்றி; யுவர் ஸ்டோரி தமிழ் இணையதளத்தில் எழுதும் பத்தியிர்ல் இருந்து…

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.