கூகுளின் பயண வழிகாட்டி இணையதளம்

touring_bird_google_full_1536559989903இணையவாசிகளின் தேடலுக்கு வழிகாட்டி வரும் கூகுள், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனமாக கூகுள் நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. கூகுள் நிறுவனம் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் 20 சதவீத நேரத்தை சொந்த விருப்பம் சார்ந்த திட்டங்களில் ஈடுபட அனுமதிக்கிறது. இந்த திட்டங்களில் சில கூகுளின் முழு நேர சேவையாகவும் அறிமுகமாவதுண்டு.

இத்தகைய பகுதி நேர திட்டங்களை ஊக்குவிப்பதற்காக கூகுள் நிறுவனம், ’ஏரியா 120 டிவிஷன்’ எனும் திட்டத்தையும் கூகுள் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான், பயண வழிகாட்டி இணையதளமான டூரிங் பேர்ட் தளம் அறிமுகம் ஆகியுள்ளது.

முதல் கட்டமாக 20 நகரங்களுடன் அறிமுகம் ஆகியுள்ள இந்த சேவையை, சுற்றுலா நகரங்கள் தொடர்பான தகவல்களை அறியவும் பயன்படுத்தலாம். பயண திட்டமிடலுக்கும் பயன்படுத்தலாம். சுற்றுலா இடங்களை கண்டறிவதோடு, பயண சேவைகளை ஒப்பிட்டு பதிவு செய்வதற்கான வசதியையும் அளிக்கிறது. இவை எல்லாம் ஒரே இடத்தில் வழங்கப்படுவது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம்.

இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில், இதில் வழிகாட்டி தகவல்கள் இடம்பெற்றுள்ள நகரங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலும் காட்சி வடிவில் அமைந்துள்ளது. பாரிசிலோனா, மேட்ரிட், போஸ்டன், லண்டன், சிக்காகோ, மியாமி, நியூயார்க், புதுதில்லி, ரோம், பாரீஸ், வாஷிங்டன் என நீளும் இந்த காட்சி பட்டியலில் இருந்து விரும்பிய நகரை தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட நகரை கிளிக் செய்ததும், அந்த நகருக்கான தகவல்கள் காட்சி பட்டியலாக விரிகின்றன. முதலில் நகரில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் தோன்றுகிறது. இதில் இடம்பெறும் புகைப்படத்தை கிளிக் செய்தால் அந்த இடம் தொடர்பான தகவல்கள் விரிகின்றன. சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் அந்த இடம் பற்றிய பொதுவான தகவல்களோடு, அங்குள்ள ஆச்சர்யம் அளிக்கும் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு மியாமி நகரை கிளிக் செய்தால் அங்குள்ள கடற்கரை பகுதி உலகின் நீளமான பவளப்பாறையை கொண்டிருக்கும் தகவலை அறிய முடிகிறது. இடத்தை சுற்று பார்ப்பது தொடர்பான பயண தகவல்களை அறிவதோடு, தொடர்புடைய இடங்கள் குறித்த விவரங்களையும் தனித்தனியே அறியலாம்.

சுற்றுப்பார்க்க வேண்டிய இடங்கள் தவிர, நகரில் செய்யக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களும் தனியே பட்டியலிடப்படுள்ளன. ஒவ்வொரு நடவடிக்கையையும் கிளிக் செய்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நடவடிக்கை தொடர்பான தகவல்களும் புகைப்படங்களுடன் விரிவாக தரப்பட்டுள்ளன. தொடர்புடைய நடவடிக்கைகளையும் அறியலாம்.

இவைத்தவிர உள்ளூர் மக்களின் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. உள்ளூர் வழிகாட்டிகள் பார்வையில் இந்த குறிப்புகள் அமைகின்றன. மேலும், பயணிகள் தங்கள் விருப்பம் அல்லது ரசனை சார்ந்த இடங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணமாக குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க கூடிய இடங்களை மட்டும் பார்வையிடலாம். இதே போல, வழக்கமாக பலரும் செல்லாத இடங்கள் மற்றும் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம். உள்ளூர் உணவுச்சுவை அடிப்படையிலான இடங்களையும் தெரிந்து கொள்ளலாம். இணைய யுகம் அல்லவா? அதற்கேற்ப, எழில் கொஞ்சும் காட்சிகளை படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளத்தக்க இடங்களையும் தனியே பார்வையிடலாம்.

இவ்வாறு ஒவ்வொரு நகரமாக பார்வையிடலாம். அல்லது விரும்பிய நகரை தேர்வு செய்து பார்வையிடலாம். வெறும் தகவல்கள் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நகரிலும் என்ன எல்லாம் செய்யலாம் என்பது தொடர்பான தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன. இந்த தகவல்களை பார்க்கும் போது பயணம் மேற்கொள்ளும் எண்ணம் ஏற்படலாம். ஏற்கனவே பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் தங்களுக்கு பொருத்தமான நகரை தேர்வு செய்யவும், அந்த நகரில் விடுமுறையை கழிப்பதை திட்டமிடவும் இந்த தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பயணங்களை திட்டமிடுவதற்கு நாட்காட்டியுடன் இணைந்த திட்டமிடல் வசதியும் இருக்கிறது. பயண நாட்களை அதில் குறிப்பிட்டால் தொடர்புடைய நிகழ்ச்சிகள் அடையாளம் காட்டப்படுகின்றன. நிகழ்ச்சிகளை தேடும் போது பட்ஜெட்டிற்கு ஏற்ப தேடும் வசதியும் இருக்கிறது. பயணம் தொடர்பாக தேவைப்படக்கூடிய தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதோடு, சேவைகளை ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் இருக்கிறது.

முதல் கட்டமாக 20 நகரங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும் படிப்படியாக மேலும் பல நகரங்கள் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை பயன்படுத்துவதோடு இதில் பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்து பயண வழிகாட்டியாக உங்களுக்கான சொந்த பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம். உள்ளூர் வழிகாட்டியாக இணைந்து குறிப்புகளை வழங்கலாம். உங்கள் வலைப்பதிவு அல்லது சமூக வலைதளங்களுக்கான இணைப்பை அளிக்கலாம். உங்கள் பயண அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

சுற்றுலா மற்றும் பயணங்களில் ஆர்வம் உள்ளவர்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய இணையதளமாக டூரிங்பேர்ட் அமைந்துள்ளது.

இணையதள முகவரி: https://www.touringbird.com/

தகவல் புதிது; யூடியூப்பில் சிறார் மீட்பு ஆவணப்படம்

குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பாடுபட்டு வரும் நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி தொடர்பான ஆவணப்படத்தை வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் வாங்கியுள்ளது.

தி பிரைஸ் ஆப் பிரி எனும் பெயரிலான இந்த ஆவணப்படம், கைலாஷ் சதியார்த்தி களத்தில் செயல்படும் விதம் மற்றும் அவர் சிறார்களை மீட்கும் முயற்சி ஆகியவற்றை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆவணப்படத்தை டெரிக் டோனீன் இயக்கியுள்ளார். இந்த படம் 90 நிமிட அளவு கொண்டது. பார்டிசிபண்ட் மீடியா மற்றும் கான்கார்டியோ ஸ்டூடியோ இணைந்து இதை தயாரித்துள்ளது.

குழந்தை தொழிலாளர் பிரச்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதை யூடியூப் வாங்கியுள்ளது. இந்த படம் நவம்பர் 27 ம் தேதி யூடியூப்பில் சோபான்கேக் சேனலில் அறிமுகம் ஆகிறது. இந்த படம் ஏற்கனவே சண்டான்ஸ் திரைப்பட விழாவில் ஆவணப்பட பிரிவில் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கைலாஷ் சத்யார்த்தியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேடியந்திரம் புதிது: ஒரே இடத்தில் பலவகை தேடல்

இசிடோ பழைய பாணி தேடியந்திரமாக இருந்தாலும் அதன் சேவை ஈர்ப்புடையதாக இருக்கிறது. எப்படி எனில், இந்த தேடியந்திரம் ஒரே இடத்தில் பலவகையான தேடலை மேற்கொள்ள வழி செய்கிறது. அந்தாவது இந்த தேடியந்திரத்தில், யாஹூ, பிங் போன்ற தேடியந்திரங்களில் தேட முடியவதோடு, யூடியூப், விக்கிபீடியா போன்ற தளங்களிலும் தேடலாம்.

இவைத்தவிர புகைப்படங்கள், செய்திகள், வீடியோ, விக்கி தகவல்களும் தேடலாம். நாம் தேடும் பதங்கள் தொடர்பான தொடர்புடைய பதங்களும் பட்டியலிடப்பட்டு பரிந்துரைக்கப்படுகின்றன. தேடல் கட்டத்தின் கீழ் பகுதியிலும் தொடர்புடைய பதங்களை பார்க்கலாம்.

தேடல் முடிவுகளில் இருந்து நேராக அதற்குறிய பக்கத்திற்கு செல்ல, இணையதளத்திற்கான இணைப்பும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான தனித்தனி பக்கங்களும் இருக்கின்றன. அண்மையில் தேடியவற்றை பார்க்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. தேடல் வடிகட்டிகளும் இருக்கின்றன. விரும்பினால் மேம்பட்ட தேடல் வசதியையும் நாடலாம்.

மேம்பட்ட தேடல் வசதியில் பல விதங்களில் தேடல் குறிப்புகளை மாற்றி அமைக்கும் வசதி இருக்கிறது.

தேடியந்திர முகவரி: https://www.izito.com/

செயலி புதிது; தினம் ஒரு தகவல் தரும் செயலி

ஸ்மார்ட்போன் பல நேரங்களில் கவனிச்சிதறலாக அமைந்து நேரத்தை வீணடிக்கலாம். ஆனால் ஸ்மார்ட்போனை சரியான விதத்தில் பயன்படுத்தினால், ஊக்கம் தரும் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் தினம் தினம் புதுப்புது தகவல்களை தெரிந்து கொள்ள கியூரியாசிட்டி செயலி உதவுகிறது. இந்த செயலியில் சிறிய கட்டுரை வடிவிலான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இது தவிர சின்ன சின்ன வீடியோக்களையும் பார்க்கலாம். எல்லாமே கவனமாக தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்படுபவை.

இந்த செயலியில் உள்ள கட்டுரைகள் மற்றும் வீடியோக்களில் விருப்பமானதை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது. கட்டுரைகளில் விருப்பமானவற்றை சேமித்து கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பயனாளிகள் தங்களுக்கான பிரத்யேக சேமிப்பு பட்டியலை உருவாக்கி கொள்ளலாம்.

தொழில்நுட்பம், விஞ்ஞானம், உடல் நலம், அருமையான இடங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் தகவல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வினாடிவினா மற்றும் புதிர்களும் இடம்பெற்றுள்ளன. பிரபலமாக உள்ள கட்டுரைகளையும் பார்வையிடலாம்.

செயலி வடிவம் தவிர இணையதளத்திலும் இந்த தகவல்களை அணுகலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://curiosity.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.