ஆன்லைன் வானொலி தளங்கள் – உலக வானொலி தின பதிவு!

Screenshot_2019-02-13 ‘உலக வானொலி தினம்’- ஆன்லைன் வானொலி தளங்கள் தொகுப்புஇணையத்தில் அன்மையில் 90 ஸ் கிட்ஸ் ரூமர்ஸ் (#90sKidsRumors ) எனும் ஹாஷ்டேக் பிரபலமானது. 90 களின் பிள்ளைகளுக்கு நெருக்கமான பல விஷயங்களில் வானொலியும் ஒன்று. இணைய யுகத்து தலைமுறைக்கு வானொலி என்பது கற்கால சங்கதி போல தோன்றாலும் என்றாலும், ஸ்டிரீமிங் யுகத்திலும் வானொலி எனும் ஊடகம் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளது.

வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2012 ம் ஆண்டு முதல் பிப்ரவரி 13 ம் தேதியை உலக வானொலி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு வானொலி தினம், உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் அமைதி எனும் கருத்தாக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.

உலக வானொலி தினத்தை முன்னிட்டு, இணையத்தில் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க உதவும் தளங்கள் பற்றி ஒரு அறிமுகம்:

ரேடியோ கார்டன் : http://radio.garden/

இணையத்தில் வானொலி என்றவுடன், ரேடியோ காரட்ன் தளம் தான் முதலில் நினைவுக்கு வர வேண்டும். அந்த அளவுக்கு  அருமையான இணையதளம் இது.  உலகில் உள்ள வானொலி நிலைய நிலையங்களை எல்லாம் அந்த தளத்தின் மூலம் அணுகலாம். இணைய வானொலி, பண்பலை வானொலி உள்ளிட்ட எல்லா வகையான வானொலி நிலையங்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை இந்த தளம் ஒரே இடத்தில் அணுக வழி செய்கிறது.

அந்த தளத்தின் இடைமுகம் தான் இன்னும் அற்புதமானது. அதன் முகப்பு பக்கத்தில் கிளிக் செய்தால் பூமி உருண்டை தோன்றுகிறது. அந்த பூமி உருண்டையில் பச்சை புள்ளிகளாக தோன்றும் இடங்களை கிளிக் செய்தால், அந்த இடத்தில் ஒருந்து ஒலிபரப்பாகும் வானொலியை கேட்டு ரசிக்கலாம்.

நாம் கிளிக் செய்வதற்கு முன்னரே, நம்முடைய இருப்பிட நகரத்தை அடையாளம் கண்டு, அங்குள்ள வானொலி தானாக கேட்கத்துவங்குகிறது. இது தவிர அருகாமையில் உள்ள வானொலிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். புதுவிதமான இசையை கேட்க விரும்பினால், உலகின் மற்ற பகுதிகளில் உள்ள பச்சை புள்ளிகளை கிளிக் செய்து அங்குள்ள பாடல் அல்லது இசையை கேட்டு மகிழலாம். வானொலி பிரியர்களுக்கு சரியான வேட்டைக்களம் என்று தான் இந்த தளத்தை சொல்ல வேண்டும்.

Radio-Positive-Conversations1549963142141ஆன்லைன் ரேடியோஸ்; https://onlineradios.in/

ரேடியோ கார்டனோடு ஒப்பிடும் போது மிகவும் சாதாரணமான தளம் என்றாலும், ஆன்லைன் ரேடியோஸ் தளம் இந்தியாவில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களையும் அணுக வழி செய்கிறது. இந்திய வானொலி நிலையங்களை காட்சிரீதியாக பட்டியலிடுகிறது. விரும்பிய வானிலியை கிளிக் செய்து கேட்டு ரசிக்கலாம்.

ரேடியோ வேர்ல்ட்: https://www.radioworld.com/

வானொலி உலகம் தொடர்பான செய்திகள் மற்றும் போக்குகளை தெரிந்து கொள்வதற்கான இணையதளமாக ரேடியா வேர்ல்டு விளங்குகிறது. வானொலி நிலைய உரிமையாளர்கள், பொறியாளர்களை மனதில் கொண்டது என்றாலும், வானொலி உலக நிகழ்வுகளில் ஆர்வம் உள்ள எவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இண்டெர்நெட் ரேடியா : https://www.internet-radio.com/

வானொலி நிகழ்ச்சிகளை இணையம் மூலம் கேட்டு ரசிப்பதற்கான இன்னொரு இணையதளம். ஆயிரக்கணக்கான இணைய வானொலிகளை நேரலையாக கேட்டு ரசிக்க வழி செய்கிறது. முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வானொலிகளில் மேற்கத்திய இசை சார்ந்தவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. வானொலிகள் தனியேவும் பட்டியலிடப்பட்டுள்ளன. ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள வானொலி நிலையங்களும் தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த தளம் அளிக்கும் வசதி மூலம் சொந்த இணைய வானிலியும் துவக்கலாம். வானொலி தொடர்பான விவாதத்திலும் பங்கேற்கலாம்.

ரேடியோ லொக்கேட்டர் : https://radio-locator.com/

இணைய வானொலி நிலையங்களுக்கான எளிமையான தேடியந்திரம் இது. அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இணைய வானொலி நிலையங்களை தேட வழி செய்கிறது. தேடலுக்கான எளிமையான இடைமுகமும் கொண்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள இணைய வானொலிகளை தேடலாம்.

இதே போல, streamit-online.com குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக வானொலி தேடல் வசதியை அளிக்கிறது.

இவைத்தவிர மொபைல் போனில் செயலி வழியே இணைய வானொலிகளை அணுக, https://www.radio.net/android, http://onrad.io/ உள்ளிட்ட செயலிகள் வழி செய்கின்றன. மேலும் இணைய யுகத்தில் வானொலியின் முக்கியத்துவத்தை அறிய விரும்பினால், ஆப்பிரிக்காவில் விவசாயிகளுக்காக நடத்தப்படும் பார்ம்ரேடியா (https://farmradio.org/why-radio/) மூலம் அதற்கான பதிலை பெறலாம்.

https://yourstory.com/tamil/world-radio-day-online-radio-sites-package-sffsw27w3e

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.