( வலை 3.0) – செய்திகள் வாசிப்பது உங்கள் அனனோவா…

Ananovaஇணைய செய்தி உலகில், அனனோவாவைப்போல, எதிர்பார்ப்பை ஏற்படுத்திய செய்தி வாசிப்பாளர் இல்லை என்று சொல்லிவிடலாம். புத்தாயிரமாண்டில், அனனோவா அவருக்கான செய்தி தளத்தில், செய்திகளை வாசித்துக்காட்ட துவங்கிய போது, இணைய உலகில் அது முக்கிய நிகழ்வாக பேசப்பட்டது. தொடர்ந்து அனனோவாவின் வருகையும், தாக்கமும் விவாதிக்கப்பட்டது.

வேறு எந்த செய்தி வாசிப்பாளருக்கும் கிடைக்காத பெருமையாக இது அமைந்தது. அது மட்டும் அல்ல, வலை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகவும் அமைந்தது. ஏனெனில், அனனோவா, உலகின் முதல் சைபர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார்.

ஆம், அனனோவா மனித வாசிப்பாளர் அல்ல: சைபர் உருவாக்க அவதாரம் அவர். ( இணைய மொழியில் அவ்தார்). அதாவது கம்ப்யூட்டர் உருவாக்கம்.

அனிமேஷன் ஒரு வகை சித்திரம் என்றால், கம்ப்யூட்டரால் உருவாக்கப்படும் தோற்றங்கள் இன்னொரு வகையாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான புகைப்படங்களை வைத்துக்கொண்டு, அவற்றின் கண், காது, மூக்கு போன்ற அம்சங்களை ஒப்பிட்டுப்பார்த்து அதனடிப்படையில் உருவாக்கப்படும் தோற்றம்.

செய்தி வாசிப்பதற்காக அனனோவா இப்படி தான், ஒவ்வொரு பிக்சலாக உருவாக்கப்பட்டார். பிரிட்டனின் யுகே அசோசியேஷன் பிரஸ் செய்தி நிறுவனம், சார்பில் அனனோவா உருவாக்கப்பட்டார். அவரது பெயரிலேயே இணையதளத்தில் அவர் செய்திகளை வாசித்தார்.

மரகத கண்கள், பாப் பாடகி போன்ற தோற்றம், காமித் பாத்திரம் போன்ற தலைமுடி ஸ்டைல் என நவீன செய்தி வாசிப்பாளராக அவர் தோற்றம் தந்தார்.

உடனுக்குடன் வரும் செய்திகளை, இணைய வாசிகர்களுக்கு வாசித்துக்காட்டும் மெய்நிகர் செய்தி வாசிப்பாளராக அவர் செயல்பட்டார்.

செய்தி வாசிப்பதற்கு என்று பயிற்சி அளிக்கப்பட்ட ஆண், பெண் செய்தி வாசிப்பாளர்கள், பொருத்தமான முக உணர்வுகளோடு, ஏற்ற இறக்கத்துடன் செய்திகளை வாசிப்பதை கேட்டு பழக்கப்பட்டிருந்த நிலையில், செயற்கை குரலோடு, மெய்நிகர் முகத்தோடு, கம்ப்யூட்டர் உருவாக்கித்தந்த உணர்வுகளோடும் அனனோவா அறிமுகம் ஆனார்.

வரி வடிவ எழுத்துக்களை, குரல் வடிவில் வாசித்துக்காட்டும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை அனனோவாவை சாத்தியமாக்கியது. அளிக்கப்படும் செய்திகளின் தன்மைக்கேற்ப வாசித்துக்காட்டுவதோடு, செய்தியின் தன்மைக்கேற்ற உணர்வுகளும் அந்த சைபர் பாவைக்கு கம்ப்யூட்டர் புரோகிராம் மூலம் அளிக்கப்பட்டது.

அனனோவாவின் வருகை இணைய உலகில் பரபரப்பை உண்டாக்காமல் இல்லை. கம்ப்யூட்டர் உருவாக்கிய சைபர் பெண் ஒருவர் மனிதர் போலவே செய்திகளை வாசித்தது புதுமையாக கருதப்பட்டது. என்ன இருந்தாலும் மனிதர் வாசிப்பது போல இல்லை, செயற்கையாக இருக்கிறது என ஒரு சிலர் கருத்து தெரிவித்தாலும், இனி செய்தி வாசிப்பாளர்களுக்கு வேலை இருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

இணையதளத்தில் அறிமுகமான அனனோவா, அதன் பிறகு மொபைல் போன்களில் வலம் வருவார் என தெரிவிக்கப்பட்டது. மொபைல் பயனாளிகள் போன் திரையில் அனனோவா செய்தி வாசிப்பதை கேட்கலாம் என்பதோடு அவர்களின் செய்தி விருப்பத்திற்கு ஏற்க, அனனோவாவை பிரத்யேகமாக வடிவமைத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

ஆரம்ப பரபரப்பை மீறி, சைபர் பெண்ணான அனனோவா அதன் பிறகு காணாமல் போய்விட்டார். முதலில் ஆரஞ்சு எனும் தொலைத்தொடர்பு நிறுவனம் அனனோவா தளத்தை விலைக்கு வாங்கியது. 2004 ம் ஆண்டில் அனனோவா செய்தி வாசிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2009 ல் அந்த தளம் மூடப்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து பழைய ஊழியர்கள் அந்த தளத்தை எடுத்து நடத்த துவங்கினர்.

சைபர் செய்தி வாசிப்பாளரான அனனோவா பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், அவரது அறிமுகம் ஒரு முக்கிய நிகழ்வு என்பதை மறந்து விடக்கூடாது. கம்ப்யூட்டர் மூலமே உருவாக்கப்படக்கூடிய மெய்நிகர் மனிதர்களுக்கான சிறந்த உதாரணமாக அனனோவாவை கருதலாம்.

அனனோவா அறிமுகமாவதற்கு முன், ஜப்பானிய/கொரிய கலைவையிலான சைபர் பாடகி ஒருவர் உருவாக்கப்பட்டிருந்தார். இந்த சைபர் பாடகி தனக்கென தனி இணையதளம் உள்ளிட்டவற்றை பெற்றிருந்தார். அதன் பிறகு பிரிட்டனில், இசைத்தட்டு நிறுவனம் ஒன்று டி-பேப் எனும் மெய்நிகர் பாடகியை உருவாக்கியது. இந்த நிகழ்வுகள், சைபர் அழகிகள் அல்லது சைபர் பெண்கள் உருவாக்கம் பற்றி பரபரப்பாக பேச வைத்தது. பிபிசி இணையதளமே, சைபர் அழகிகள் என வர்ணித்து செய்திகளை வெளியிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த பின்னணியில் தான், அனனோவா சைபர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார்.

ஒரு விதத்தில் பார்த்தால், 2018 ம் ஆண்டில் சீனாவில், ஜின்ஹுவா செய்தி நிறுவனம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஏ.ஐ. செய்தி வாசிப்பாளருக்கான முன்னோடி என்றும் அனனோவாவை சொல்லலாம்.

எதிர்காலத்தில் செய்தி உருவாக்கம், விநியோகம், வாசிப்பு என எல்லாவற்றிலும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டிஜிட்டல் வடிவிலான செய்தி வாசிப்பாளர்களும் சகஜமாகலாம். இந்த போக்கு அனனோவாவில் இருந்து தான் துவங்கியது.

அனனோவா பற்றிய பிபிசி செய்தி: http://news.bbc.co.uk/2/hi/entertainment/718327.stm

( மைல்கல் இணையதளங்கள் மூலம் வலையின் வரலாற்றை விவரிக்கும் வலை 3.0 தொடரின் ஒரு அங்கம்)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *