கொரோனா உதவி தகவல் வடிகட்டி

Imagerb80-1620982690182கொரோனா உதவி தகவல்களை எளிதாக கண்டறிய உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தளங்களின் வரிசையில் வருகிறது வெரிபைடு கோவிட் லீட்ஸ் (https://verifiedcovidleads.com/ ) இணையதளம்.

கொரோனா பாதிப்ப தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை வடிகட்டித்தரும் இணையதளமாக இது அமைகிறது. அதாவது, கொரோனா உதவி தகவல்களை தொகுத்தளிப்பதோடு நின்றுவிடாமல், அந்த தகவல்கள் சரியானவை தானா? என உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிடுகிறது.

சிருஷ்டி சாஹு என்பவர் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார். கொரோனாவால் தனது குடும்பத்தைச்சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வருபவர்கள் கொரோனா உதவி தொடர்பான சரியான தகவல்கள் கிடைக்காமல் அல்லாடுவதை பார்த்து, சமூக ஊடகங்களில் வெளியாகும் கொரோனா தகவல்களில் சரியானவற்றை எளிதாக கண்டறிய உதவும் இந்த தளத்தை அமைக்க ஊக்கம் பெற்றதாக சாஹூ கூறியுள்ளார்.

தன்னார்வலர்களை கொண்டு கொரோனா உதவி தகவல்களை சரி பார்த்து இந்த தளத்தில் வெளியிட்டு வருகிறார். தகவல்கள் அவை சரி பார்க்கப்பட்ட நேரத்துடன் வெளியிடப்படுகிறது. தேடல் வசதியை பிரதானமாக கொண்டு அமைந்துள்ள இந்த தளத்தில், தில்லி, சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், ஆக்சிஜன், படுக்கை, மருந்துகள், உணவு தொடர்பான உதவிகளை தேடலாம்.

குறைந்தபட்சம் நூறு பேருக்கு உதவினால் கூட போதும் எனும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட இந்த தளம், லட்சக்கணக்கான பயனாளிகளை பெற்றிருப்பதாகவும், தான் துவங்கிய திட்டங்களிலேயே இதுவே தனக்கு மிகவும் திருப்தி அளிப்பதாகவும் சாஹு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்,.

இந்த தளத்தை நடத்துவதில், சித்தாந்த் நாஹு எனும் நண்பரும் சாஹுவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டாலும், பயனாளிகள் அதை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் எனும் பொறுப்பு துறப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.