எங்கெங்கு காணினும் கலைகளடா!

பரிசுப்பொருட்களை வாங்க நினைக்கும் போது ஒரு குழப்பம் வரும் அல்லவா?வழக்கமான பொருட்களாக இல்லாமல் வித்தியாசமான பயனுள்ள பொருட்களை பரிசளித்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம் ஆனால் அவற்றை எங்கே வாங்குவது என தெரியாமல் தவிப்போம் அல்லவா?

இத்தகைய குழப்பம் உள்ளவர்கள் ஆப் டே தளத்திற்கு சென்றால் சொக்கிப்போய் விடுவார்கள்.அதே போல கலை உள்ளம் கொண்டவர்களும் இந்த தளத்தை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்.

இ காமர்ஸ் என்று சொல்லப்படும் இணைய வணிக வகையை சேர்ந்த இந்த தளம் இந்திய கலைப்பொருட்களை விற்பனை செய்கிறது.

கலைப்பொருட்கள் என்றால் பொதுவாக ஒரு கண்ணோட்டம் இருக்கும் அல்லவா! அத்தகைய வரையரை எதுவும் இல்லாமல் பாரம்பரிய வகையில் இருந்து நவீன வகை வரை எல்லா வகையான கலைப்பொருட்களும் இங்கே இடம் பெறுகின்ற‌ன.வித்தியாசமானவை ,விநோதமானவையும் இதில் அடங்கும்.

அதற்கேற்ப எங்கெங்கும் கலைகள்,என்பதே இந்த தளத்தின் கொள்கையாக இருக்கிறது.நம்மை சுற்றி எல்லா இடங்களிலும் கலைகள் எல்லா வடிவிலும் இருக்கின்றன என்று சொல்லும் இந்த தளம் சிலையிலும் கலையை காணலாம்,மோதிரத்திலும் காணலாம் என்கிற‌து. இப்படி கலையை காணக்கூடிய பொருட்களை எல்லாம் விற்பனை செய்வதற்கான களமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.அதாவது தினசரி வாழ்கையிலேயே கலைகளை காண முடியும் .இதன் ஆங்கில வாசகமான ஆர்ட் பார் எவ்ரிடே என்பதன் சுருக்கமே தளத்தின் இணைய முகவரி.

அதோடு இந்திய கைவினை கலைஞர்களும் படைப்பாற்றலோடு விதவிதமான கலைப்பொருட்களை உருவாக்கி வருகின்றனர்.இந்த பொருட்களுக்கான இணைய சந்தையாகவும் ஆப் டே செயல்ப‌டுகிறது.கலைப்பொருட்களை யாரும் எவரும் சுலபமாக வாங்கி கொள்வதற்கான வழியாகவும் இந்த தளம் விளங்குகிறது.

கலை ஆர்வம் கொண்டவ‌ர்களை முதல் பார்வையிலேயே கவர்ந்துவிடக்கூடிய வகையில் எளிமையான ,நேர்த்தியான முறையில் கலை பொருட்கள் முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

முதலில் நச்சென ஒர் பொருள் இடம் பெறுகிறது.புகைப்படத்தோடு அதன் விவரங்களும் விலையும் கொடுக்கப்பட்டுள்ளது .அதன் கீழே வரிசையாக புகைப்படத்தோடு பொருட்கள் பட்டியல் தொடர்கின்றன.எந்த பொருள் கவர்கிறதோ அதனை கிளிக் செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அருகிலேயே பொருட்கள் அவற்றின் வகைகளுக்கு ஏற்பவும் பட்டியலிடப்பட்டுள்ளன.கைப்பைகள்,ஓவியங்கள்,நகைகள்,விளையாடு பொருட்கள்,கல்வி பொருட்கள்,கடிகார‌ங்கள்,காகித பொருட்கள் என பல வகை பொருட்கள் பட்டியலில் உள்ளன.மேலும் சுடுமண் பொம்மைகள்,விளக்குகள்,வீடுகளுக்கான அலங்கார‌ பொருட்கள் ஆகியவகையும் உள்ளன.

ஓவ்வொரு பொருளாக கிளிக் செய்து பார்த்தால் ஏதோ கலை கூடத்தை சுற்றி பார்த்த உண‌ர்வு ஏற்படுகிறது.ஒவ்வொரு பொருளும் தன் கவண்ணத்திலும் பயன்பாட்டு தன்மையிலும் கவர்ந்திழுக்கின்றன.

வித்தியாசமான் சுவர் கடிகாரம்,அலங்கார கைப்பை,சிறுவர்களுக்கான பென்சில் பாக்ஸ் ,ஓவியம் போன்ற‌ அஞ்சல் அட்டை,மர கார் பொம்மை என எல்லா பொருட்களுமே கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.விலையும் கையை கடிக்காமல் தான் இருப்பதாக‌ தோன்றுகிறது.

வீட்டு உபயோகத்திற்கும் வாங்கலாம்.மற்றவர்களுக்கு பரிசளிக்கவும் வாங்கலாம்.இணையம் வழி ஷாப்பிங் மட்டும் அல்லாமல் ஆர்டர் செய்து விட்டு டெலிவரியின் போது பணம் தரும் வசதியும் உள்ளது.

ஐஐஎம் பட்டதாரியான ராஷ்மி என்னும் பெண்மணி இந்த தளத்தை நடத்திவருகிறார்.ராஜஸ்தான்,பஞ்சாப்,ஜம்மு ஆகிய இடங்களில் பயணம் செய்த போது பார்க்க நேர்ந்த பல வகையான கலைகள் தன்னை கவர்ந்ததாகவும் கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் இவற்றை பெரும்பாலும் காண முடியாமல் போனதையும் பார்த்து இந்த இடைவெளியை போக்கும் வகையில் ஆப் டே தளத்தை துவக்கியதாக ராஷ்மி உற்சாகமாக் கூறுகிறார்.

இணையதள முக‌வரி;http://www.afday.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “எங்கெங்கு காணினும் கலைகளடா!

  1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    Reply

Leave a Comment

Your email address will not be published.