அகராதி இல்லாத (இணைய)அகராதி.

அகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகாரபூர்வ தனமையும் இருக்கிறது.அகராதிகள் கராரானவை.ஒரு சொல் என்றால் அவை சொல்வ‌து தான் பொருள்.அதனால் தான் எப்போதும் சட்டம் பேசுவது போல பேசுபவர்களை அகராதி பிடித்தவர்கள் என்று சொல்வதுண்டு.

இணைய யுகத்திலும் இன்னும் நிபுணர்கள் கையிலேயே இருக்கும் பொருட்களில் அகராதியும் ஒன்று.அகராதி தயாரிக்க மொழியில் நிபுணத்துவமும் புலமையும் தேவை.

ஆனால் சோ சிலேங்க் இணைய அகராதி இதனை மாற்றி காட்டுகிறது. ஆங்கில சொற்கலூக்கான பொருள் தரும் இந்த அகராதியை பொருத்தவரை ஒரு சொல்லுக்கு பலவிதமான பொருட்கள் உண்டு.அதாவது ஒரே சொல்லை பலவிதமாக வரையறுக்கலாம்.எது சிறந்த பொருள் தருகிற்தோ அதனை ஏற்றுக்கொள்ளலாம்.

இதை மக்கள் அகராதி என்றும் சொல்லலாம்.காரணம் இந்த அகாராதியில் இணையவாசிகளே சொற்களுக்கான பொருட்களை சம்ர்பிக்கலாம்.இந்த அக‌ராதியில் இடம் பெற்றுள்ளவை எல்லாமே இணையவாசிகளால் சம‌ர்பிக்கப்பட்ட அர்த்தங்கள் தான்.நீங்கள் நினைத்தாலும் இதில் ஒரு வார்த்தையை சேர்க்கலாம்,ஏற்கனவே உள்ள சொல்லுக்கு உங்கள் அர்த்ததை சமர்பிக்க‌லாம்.

எனவே இதில் எந்த சொல்லுக்கும் இது தான் என்ற வரையறுக்கப்பட்ட பொருள் கிடையாது.அதாவது சொல்லின் பொருள் மாறுவதில்லை,ஆனால் அவ‌ற்றை விளக்கும் விதம் மாறுபடலாம்.

இணையவாசிகள் ஏற்கனவே உள்ள சொற்களுக்கும் தங்களின் விளக்கத்தை சம‌ர்பிக்கலாம்.ஒரு சொல்லுக்கு எத்தனை விதமான விளக்கத்தை அளிக்க முடியுமோ அத்தனை விளக்கத்தை அளிப்பது தான் இந்த அகராதியின் நோக்கம்.எந்த விளக்கமாக இருந்தாலும் குறிப்பிட்ட சொல்லின் பொருளை எளிதாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.

ஒரு சொல்லுக்கு பல வித விளக்கங்கள் இருந்தாலும் அவை அந்த சொல்லை புரிந்து கொள்ள எந்த அளவுக்கு உதவுகின்றன என்பதன் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 60 லட்சம் வார்த்தைகளுக்கு மேல் பட்டியலிடப்பட்டுள்ளன.அக‌ர வரிசைப்படி சொற்களை அணுகலாம்.சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட சொற்களும் பட்டியலிடப்படுகின்ற‌ன.

அகராதியின் பொருள் புரிய வைப்பது தான் என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் அகராதிகளுக்கான ஜனநாயகமயமான முயற்சி தான்.

இணையவாசிகள் உருவாக்கும் அகராதி தான் என்ற போதிலும் தவறான தன்மையோ சொற்களின் பொருளை மலினப்படுத்தும் முயற்சியோ இருப்பதாக‌ தெரியவில்லை.நடைமுறை வாழ்க்கை சார்ந்த உதாரணங்களோடு சொற்களின் அர்தத்தை புரிந்து கொள்ளும் விதத்தை எளிமையாக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.

மரபின் மீது நம்பிக்கை கொண்டவர்களை இந்த அகராதி கொஞ்சம் அதிர்ச்சிக்கு ஆளாக்கினாலும் எதிலும் எளிமையை எதிர்பார்ப்பவர்கள் இதனை ஆதரிக்கலாம்.

இணையதள் முகவரி;http://www.soslang.com/

0 thoughts on “அகராதி இல்லாத (இணைய)அகராதி.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *