சாப்ட்வேருக்கும் சார்பு உண்டு!

software
பெரும்பாலான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை எல்லாம் முதலில் சாப்ட்வேர் தான் படித்துப்பார்த்து முதல் கட்டமாக தேர்வு செய்கின்றன. வேலைக்கு பொருத்தமான தகுதியை உணர்த்தக்கூடிய குறிச்சொற்களை அடிப்படையாக கொண்டு சாப்ட்வேர்கள் விண்ணப்பக்குவியலை வடிகட்டித்தருகின்றன. இது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். வேலைவாய்ப்பு என்றில்லை, கடனுக்கான விண்ணபங்களையும் கூட சாப்ட்வேர் தான் வடிகட்டித்தருகின்றன. அதனால் தான் சாப்ட்வர் அடையாளம் காணக்கூடிய குறிச்சொற்கள் விண்ணபத்தில் இருந்தால் நல்லது என்கின்றனர்.

விண்ணப்பங்களை பரிசிலித்து பிரித்தரியும் பொறுப்பு சாப்ட்வேரிடம் ஒப்படைக்கப்படும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து கவலை அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மனிதர்கள் போலவே சாப்ட்வேர்களும் கூட தேர்வில் சார்புத்தன்மையை வெளிப்படுத்தலாம் என்பது தான் அந்த தகவல்.

இந்த பணிக்காக உருவாக்கப்படும் சாப்ட்வேர்களுக்கு, தரவுகள் அளிக்கப்பட்டு அவற்றில் இருந்து அடிப்படையான அம்சங்களை கண்டறிந்து செயல்படுவதற்கான குறிப்புகள் அலோகோரிதமாக வழங்கப்படும். அதே முறையில் அவையும் விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து வடிகட்டித்தருகின்றன.தகுதிக்கான அம்சங்கள் அடிப்படையில் எப்படி மனிதர்கள் தேர்வு செய்கின்றனரோ அதே போலவே அல்கோரிதம்களும் செயல்படுகின்றன.
ஆனால்,மனித தேர்வில் சார்புகள் உண்டாக வாய்ப்பு இருப்பது போலவே சாப்ட்வேர் தேர்விலும் நிகழலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் உட்டா, அரிசோனா மற்றும் ஹாவர்போர்டு உள்ளிட்ட பல்கலைகழகங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். தங்கள் ஆய்வு முடிவுகளை சமீபத்தில் சிட்னியில் நடைபெற்ற இயந்திர புரிதல் தொடர்பான மாநாட்டில் வெளியிட்டுள்ளனர். இந்திய அமெரிக்கரான சுரேஷ் வெங்கடசுப்பிரமணியன் எனும் பேராசிரியர் தலைமையில் தான் இந்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது.

இந்த ஆய்வு மூலம் சாப்ட்வேர்களின் தேர்வில் அவற்றை அறியாமல் சார்பு உண்டாக வாய்ப்பிருக்கிறதா? என கண்டுபிடிக்கும் சோதனை ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பரிசிலிக்கும் அல்கோரிதம்களை இந்த சோதனைக்கு உட்படுத்தினால் அவை தங்களை அறியாமல் விண்ணப்பதாரர்களின் இனம் அல்லது பாலினம் தொடர்பான தகவல்களை, அவை மறைந்திருந்தாலும் ஊகித்தறிய முடிந்தது என்றால் அது சார்பு நிலைக்கு வித்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனைக்காக உருவாக்கப்பட்டுள்ளதும் ஒரு அல்கோரிதம் தான்.

சாப்ட்வேர்கள் இவ்வாறு செய்வதாக கூறவில்லை, ஆனால் இதற்கான வாய்ப்பு இருப்பதாக பேராசிரியர் சுரேஷ் வெங்கடசுப்பிரமணியன் கூறியுள்ளார். முரண் என்ன என்றால், மனிதர்களை செயல்படும் விதத்தை போலி செய்யும் வகையில் சாப்ட்வேர்களை உருவாக்கும் போது , செயற்கை அறிவு நம்மை போலவே செயல்பட முற்படும் போது நம்மை போலவே சார்பு கொள்ளவும் வாய்ப்பிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
விண்ணப்பங்களை சாப்ட்வேர் மூலம் வடிகட்டுவதை மையமாக கொண்டு ஒரு தொழில் துறையே உருவாகியுள்ள நிலையில் , அது செயல்படும் வித்த்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான தன்மை இருக்கும் என்றால் அது நியாயமாக இருக்காது என்றும் அவர் சொல்கிறார்.

ஆனால் நல்லவேளையாக, இது போன்ற சார்பு சாப்ட்வேரிடம் இருப்பது தெரியவந்தால் அதை சீராக்கும் தரவுகளை சமர்பித்து சாப்ட்வேர் செயல்பாட்டை சரி செய்துவிடலாம் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார். ஆக, சாப்ட்வேர் தவறு செய்தாலும் திருத்திக்கொண்டு விடும்! மனிதர்கள்?

—–
hதளம் புதிது: வாசிப்பு காலம் என்ன?

புத்தக பிரியர்களுக்கான புதுமையான இணையதளம் இது. படிக்க விரும்பும் புத்தகத்தை படித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என கணித்து சொல்வது தான் இந்த தளத்தின் சிறப்பு. அதுவும் எப்படி உங்கள் வாசிப்பு வேகத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப தகவல் தருகிறது. எப்படி?
நீங்கள் எந்த புத்தகத்தை படிக்க விரும்புகிறீர்களே அதன் தலைப்பை இந்த தளத்தில் சமர்பிக்க வேண்டும். உடனே அந்த தலைப்பிலான புத்தகம் மற்றும் தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய விவரங்களை காண்பிக்கிறது.புத்தகத்தில் உள்ள மொத்த வார்த்தைகள் தொடர்பான தகவலும் இடம்பெறுகிறது. இந்த பட்டியலில் இருந்து உங்களுக்கான புத்தகத்தை தேர்வு செய்த்தும், அந்த புத்தகத்தில் இருந்து ஒரு மாதிரி பக்கம் வருகிறது. அதை நீங்கள் படித்துக்காட்ட வேண்டும். நீங்கள் படிக்கும் வேகத்தை கொண்டு அந்த முழு புத்தகத்தையும் படித்து முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என கணித்து சொல்கிறது.
துல்லியமான கணிப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் சுவாரஸ்யமான சேவை. பயணங்களின் போது கையில் எடுத்துச்செல்ல வேண்டிய புத்தகத்தை தீர்மானிக்க இந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்கலாம். அதே நேரத்தில் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான வழியாகவும் கூட இதை கருதலாம். புத்தக தேடியந்திரம் என்று வர்ணித்துக்கொள்ளும் இந்த தளம் ஒரு கோடிக்கு மேற்பட்ட புத்தகங்களின் விவரங்களை கொண்டுள்ளது. புத்தகங்களை அமேசான் தளத்தில் வாங்கிக்கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி; http://www.howlongtoreadthis.com

———

செயலி புதிது; போனுக்குள் ஒரு தோழன்

அலுப்பாக உணர்கிறீர்களா? அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லையா? இது போன்ற நேரங்களில் ஸ்மார்ட்போனில் பதில் பெற முடிந்தால் எப்படி இருக்கும்? ’ஷபிள் மை லைப்’ செயலி இதை தான் செய்கிறது. ஆண்ட்ராய்ட் போனுக்கான இந்த செயலி, பொழுதுபோக்க வழி தெரியாத நேரங்களில் அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை சொல்கிறது. அருங்காட்சியகத்திற்கு செல்லலாம் அல்லது யூடியூப்பில் கான் அகாடமி கல்வி வீடியோவை பார்க்கலாம் என்பது போல இந்த பரிந்துரைகள் அமைகின்றன. சும்மாயில்லை அன்றைய தினத்தின் வானிலை மற்றும் பயனாளிகளின் இருப்பிடம் அடிப்படையில் இந்த பரிந்துரைகள் இருக்கின்றன. பரிந்துரைக்கப்படும் செயல்களின் தன்மை பற்றிய விளக்கம் மற்றும் அவற்றுக்கு ஆகக்கூடிய செலவு பற்றிய விவரங்களும் இடம்பெறுகின்றன. இப்போதைக்கு 250 க்கும் மேற்பட்ட செயல்களின் பட்டியல் இருக்கிறது. பயனாளிகளும் புதிய செயல்களை இந்த செயலியிடம் பரிந்துரைக்கலாம்.
Shuffle My Life
தரவிறக்கம் செய்ய; https://play.google.com/store/apps/details?id=com.gadsby.shufflemylife&hl=en

—–

பிடிஎப் கோப்பாக இ-மெயில்

முக்கிய மெயில்களாக இருந்தால் சில நேரங்களில அவற்றை அச்சிடும் தேவை ஏற்படலாம். இவ்வாறு மெயில்களை அச்சிட்டுக்கொள்வது எளிதானது தான். ஆனால் காகித வடிவில் இல்லாமல் மெயில்களை கோப்பு வடிவில் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் என்ன செய்வது? அதாவது மெயில்களை பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள விரும்பினால்,டஃப்பல் பிரவுசர் நீட்டிப்பு சேவை அதற்காக வழி காட்டுகிறது. குரோம் பிரவுசர்களுக்கான இந்த நீட்டிப்பு சேவையை டவுண்லோடு செய்து கொண்டு ஜிமெயிலில் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை இன்பாக்சை ஓபன் செய்து மெயில்களை படிக்கும் போது, மெயிலின் மேல் பகுதியில் உள்ள டூல்பாரில் டவுண்லோடு எனும் ஐகான் எட்டிப்பார்க்கும். அதை கிளிக் செய்தால் பார்த்துக்கொண்டிருக்கும் மெயில் பிடிஎப் கோப்பாக மாற்றப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட மெயில்களை செலக்ட் செய்து அவற்றை கோப்புகளாக மாற்றவும் இதே முறையை பயன்படுத்தலாம்.

தரவிறக்கம் செய்ய: https://getduffel.com/

——–

வை-பை குப்பைத்தொட்டி

wi-fi-binபொது (புது) இடங்களுக்கு செல்லும் போது அருகே வை-பை வசதி எங்கே இருக்கிறது என அறிந்து கொள்ளும் ஆர்வமும் தேவையும் உண்டாகும். ( இலவச சேவையாக இருந்தால் இன்னும் நல்லது!). இந்த கேள்விக்கு விடையாக மட்டும் அல்ல போனசாக பரிசு அளிக்கும் வகையில் புதுமையான யோசனையை மும்பை இளைஞர்கள் பரதீக் அகர்வால் மற்றும் ராஜ் தேசாய் முன்வைத்துள்ளனர். இருவரும் வை-பை வசதி கொண்ட குப்பைத்தொட்டியை வடிவமைத்துள்ளனர். இந்த குப்பைத்தொட்டியில் குப்பையை போடும் ஒவ்வொரு முறையும் அதில் ஒரு எண் பளிச்சிடும். அந்த எண்ணை கொண்டு இலவச வை-பை இணைப்பு வசதியை பெற்றுக்கொள்ளலாம்.
டென்மார்க் போன்ற நாடுகளில் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதை பார்த்து வியந்த போது அதே போன்ற நிலையை இந்தியாவில் உண்டாக்க வேண்டும் என்றால் மக்கள் அணுகுமுறையில் மாற்றம் தேவை என உணர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் குப்பை போட்டால் வை-பை புள்ளிகளாக பரிசளிக்கும் இந்த நவீன குப்பைத்தொட்டி மாதிரியை வடிவமைத்ததாக இருவரும் கூறியுள்ளனர். அதே நேரத்தில் வை-பை இணைப்பு தொடர்பான தேடலுக்கும் இது தீர்வாகும் என்கிறனர். அதாவது வை-பை இணைப்பையும் அளிக்கும், குப்பைத்தொட்டியில் குப்பை போடும் பழக்கத்தையும் ஊக்குவிக்கும். இந்த யோசனை நடைமுறைக்கு வந்தால் நன்றாக தான் இருக்கும் அல்லவா?

=–

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *