வலை 3.0: இணைய வலை விரித்த மேதை

Kirstein_Peterஇணைய வரலாற்றில் பீட்டர் கிர்ஸ்டனுக்கு (Peter Kirstein) முக்கிய இடம் இருக்கிறது. இவர் தான், இணையத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு வந்தவர் அல்லது கொண்டு சென்றவர். அந்த வகையில், கிர்ஸ்டன் ஐரோப்பிய இணையத்தின் தந்தை என போற்றப்படுகிறார்.

ஆனால், கிர்ஸ்டனின் பங்களிப்பு ஐரோப்பாவுடன் முடிவடந்துவிடவில்லை. அகில உலகிற்கும் அதை விரிவாக்கியதாக அவரது செயல் அமைந்திருக்கிறது.

இணையத்தின் அடிப்படை அம்சத்தை புரிந்து கொண்டால், அதன் வையம் தழுவிய விரிவாக்கத்தில் கிர்ஸ்டனின் பங்களிப்பையும் புரிந்து கொள்ளலாம்.

இணையம் என்பது கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னல். உண்மையில் வலைப்பின்னல்கள் இணைந்த வலைப்பின்னல். 1969 ல் அமெரிக்காவில் அர்பாநெட் ஆய்வு வலைப்பின்னலாக இணையம் உண்டான போது, அதில் அமெரிக்காவில் நான்கு வெவ்வேறு இடங்களில் இருந்த அக்காக சூப்பர் கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்டிருந்தன.

வெகு தொலைவில் இருந்த கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்டு, அவற்றுக்கு இடையே தகவல் பரிமாற்றம் சாத்தியமானதை தொழில்நுட்ப அற்புதம் என்றே சொல்ல வேண்டும். இதனால் ஆய்வு தகவல்களை பரிமாறிக்கொள்வது எளிதானது என்றாலும், அடிப்படையில் இது அமெரிக்க வலைப்பின்னலாகவே இருந்தது.

இந்நிலையில் தான் 1973 ல், பிரிட்டனின் லண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு கம்ப்யூட்டர் இந்த வலைப்பின்னலுடன் ஐந்தாவதாக இணைந்தது. இதே காலகட்டத்தில் நார்வேயில் இருந்தும் ஒரு கம்ப்யூட்டர் இணைந்தது.

இப்படி கடல் கடந்து இணைந்த கம்ப்யூட்டர்கள் மூலமே, ஐரோப்பா முதன் முதலில் இணையமாக பின்னர் உருவாக இருந்த வலைப்பின்னல் இணைந்தது. அல்லது இந்த வலைப்பின்னலில் முதல் விரிவாக்கமாக இது அமைந்தது. பின்னர் ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அடுத்தடுத்து கம்ப்யூட்டர்கள் இணைந்த போது இணையம் எனும் வலைப்பின்னல் வேகமாக வளர்ந்தது.

லண்டன் கம்ப்யூட்டர், ஆர்பாநெட்டுடன் இணைவதற்கு காரணமாக இருந்த கம்ப்யூட்டர் மேதை தான் பீட்டர் கிர்ஸ்டின். அதற்கு முன்னர் அவர் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றிருந்ததாலும், அங்குள்ள கம்ப்யூட்டர் அறிஞர்களுடன் தொடர்பில் இருந்ததாலும், புதிதாக உருவாகி கொண்டிருந்த இணைய வலைப்பின்னலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனது நாடு அதில் இணைய வழி வகுத்தார். அப்படியே ஐரோப்பாவையும் அகில உலகையும் இணைத்து வைத்தார்.

பின்னர், இணையத்தின் முக்கிய தொழில்நுட்ப அம்சமான டிசிபி நெறிமுறை ஏற்கப்படுவதிலும் முக்கிய பங்காற்றினார். அது மட்டும் அல்ல, 1976 ல் பிரிட்டன் மகாராணி எலிசிபெத்திற்கு இமெயிலை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் இமெயில் அனுப்பிய முதல் உலக தலைவர் எனும் பெருமை இரண்டாம் எலிசிபெத் மகாராணிக்கு கிடைத்தது.

இணையமும், இமெயிலும் வளர்ந்து கொண்டிருந்ந்த காலத்தில் வெகுமக்கள் கவனத்தை ஈர்க்க இந்த மைல்கல் உதவியது. ஆக, அந்த வகையில் இணைய பயன்பாடு பரவலாவற்கான அடிக்கற்களில் ஒன்றையும் கிர்ஸ்டன் அமைத்துக்கொடுத்தார்.

அண்மையில் 86 வது வயதில் இயற்கை எய்திய பீட்டர் கிர்ஸ்டன் நினைவாக இந்த பதிவு!

https://www.theguardian.com/technology/2020/feb/09/peter-kirstein-obituary

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.