ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவியத்தின் பின்னணி கதை !

இது பழைய செய்தி தான் என்றாலும், அது தரக்கூடிய புத்துணர்ச்சிக்காக இப்போதும் புதிய செய்தியாக இருப்பதோடு, ஒரு இணைய நிகழ்வு எப்படி செய்தியாகிறது என்பதற்கான உதாரணமாகவும் விளங்குகிறது. அதோடு, இந்த செய்தியாக்கம் பல கட்டங்களை கொண்டிருந்தது, இந்த இணைய நிகழ்வை, இணையம் அதிலும் குறிப்பாக சமூக ஊடகம் எப்படி செய்தி மூலமாக விளங்குகிறது என்பதற்கான பாடப்புத்தக உதாரணமாகவும் அமைகிறது.

ரெட்டிட் மூலம் புகழ் பெற்ற ஓவிய அம்மா ஒருவர் தான் இந்த நிகழ்வின் நாயகி. அவரைத்தவிர பல முக்கிய அங்கத்தினர் இந்த நிகழ்வில் பங்கேற்றதோடு, ரெட்டிட் சமூகம் தான் இதற்கு ஆதாரமாக அமைந்தது.

இந்த இணைய நிகழ்வை பற்றி பார்ப்பதற்கு முன், அதன் உச்சகட்டமாக அமைந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்க்கலாம்.

புளோரிடா அம்மாவுக்கு அவர் வரைந்த ஓவியத்தை அவரே வைத்துக்கொண்டிருப்பது போன்ற ஓவியம் வந்து சேர்ந்த நிகழ்வு தான் அது.

முன்னணி ஊடகமான பிபிசி இதை அப்டேட்டாக கொண்டு செய்தி வெளியிட்டிருந்தது.

” ரெட்டிட் ’பெயினிட்செப்ஷன்’ போக்கிற்கு ஊக்கமாக அமைந்த புளோரிடா அம்மா, இந்த விநோத போக்கின் மற்றுமொரு நிகழ்வாக, தான் வரைந்த ஓவியத்தை தானே வைத்திருக்கும் ஓவியத்தை பெற்றிருக்கிறார்”.

இது தான் அந்த செய்தியின் ஆரம்ப வரிகள்.

இந்த நிகழ்வை சிண்டி டெக்கரின் மகன் உறுதிப்படுத்தியிருப்பதாக அடுத்த பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பத்தியில் உள்ள தகவல்களில் கவனிக்கத்தக்கது, சிண்டி டெக்கரின் மகன் இதை ரெட்டிட்டில் உறுதிபடுத்தியிருக்கிறார் என பிபிசி குறிப்பிட்டிருப்பது.

ராய்டர்ஸ் அல்லது ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது போல, ரெட்டிட்டில் உறுதிபடுத்தியுள்ளார் என பிபிசி தெரிவித்திருப்பது, ரெட்டிட் பதிவுகளும் பகிர்வுகளும் எப்படி செய்திக்கான ஆதாரமாக அமையும் என்பதை உணர்த்துகிறது அல்லவா!

மகிழ்ச்சி பொங்க அம்மா அந்த ஒவியத்தை வைத்திருப்பதை பகிர்ந்து கொண்டவர், அது வந்துவிட்டது (“It arrived.” ) என்று மட்டும் தெரிவித்துள்ளதாகவும் பிபிசி குறிப்பிடுகிறது.

ரெட்டிட்டில் பகிரப்பட்ட இரண்டே வார்த்தைகளுக்கு பிபிசி இத்தனை முக்கியத்துவம் கொடுப்பத்தை கவனிக்க வேண்டும்.

இந்த இணைய நிகழ்வின் பின்னணியை தெரிந்து கொண்டால், இந்த வார்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அழுத்தத்தையும் புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவின் புளோரிடாவில் வசிக்கும் பெண்மணியான சிண்டி டெக்கர், தான் வரைந்த ஓவியத்தால் ரெட்டிட் வழியே இணையம் மூலம் புகழ் பெற்றார். அவர் புகழ் பெற்றது மிகவும் சுவாரஸ்யமான இணைய கதை.

ஓவிய வகுப்பில் சேர்ந்திருந்த சிண்டி ஒரு வாத்து ஓவியத்தை வரைந்திருந்தார். இந்த ஓவியத்தை அவரது மகன், ரெட்டிட் தளத்தில் பகிர்ந்ததோடு, இதை யாரும் விரும்ப மாட்டார்கள் என அம்மா நினைப்பதாகவும் கூறியிருந்தார்.

ரெட்டிட் வெறும் தளம் அல்ல, இணைய சமூகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ரெட்டிட் சமூகத்தினர், இந்த தாயின் ஓவியத்தை கொண்டாடி மகிழ்ந்ததோடு, அவரை ரெட்டிடின் அம்மாவாக சொந்தம் கொண்டாடினர்.

இதன் பிறகு, சின்னதாக ஒரு அற்புதம் நிகழ்ந்தது. ஸ்வீடன் கலைஞர் ஒருவர், ரெட்டிட் கொண்டாடிக்கொண்டிருந்த இந்த ஓவியத்தை சிண்டி வைத்திருப்பது போல ஒரு ஓவியம் வரைந்து அதை தான் வைத்திருப்பது போல படம் எடுத்து பகிர்ந்து கொண்டார். ஓவியத்திற்குள் ஓவியமாக இருந்த இந்த படம் பலரையும் கவர, ஒவ்வொருவரும் இந்த படத்துடன் தங்கள படமெடுத்து பகிர்ந்து கொள்ள, ஓவியத்திற்குள் ஓவியமான இந்த போக்கு இணையத்தில் வைரலானது.

( இது பற்றிய விரிவான பதிவு)

இந்த நிகழ்வு, ஓவியத்திற்குள் ஓவியமாக நீளும் சித்திரத்தை குறிக்கும் டோர்ஸ்டே விளைவை (Droste effect.) ஒத்திருந்தது. இணையம் இது பற்றியும் பேசித்தீர்த்தது.

வாரக்கணக்கில் நீடித்த இந்த இணைய போக்கின் உச்சக்கட்டமாக தான், சிண்டி ஓவியத்தை முதலில் வரைந்த ஸ்வீடன் கலைஞர் அந்த படத்தை அனுப்பி வைத்தார். சிண்டிக்கு இணைய புகழ் பெற்றுத்தந்த ஓவியம் அவரிடமே வந்து சேர்ந்ததும் செய்தியானது இப்படி தான்.

இணைய நிகழ்வின் போக்கு எப்படி எல்லாம் செய்தியாகிறது என்பதற்கு இது காவிய உதாரணம். ஏனெனில், விஷயம் இத்துடன் நின்றுவிடவில்லை. செய்தி தாக்கம் தொடர்ந்தது.

இந்த ஓவியம் இணையத்தில் பரவிய விதத்தை குறிப்பாக ரெட்டிட் சமூகத்தில் பரவி விவாதிக்கப்பட்ட விதத்தை, ரெட்டிட் பயனாளி ஒருவர் புளோசார்ட்டாக உருவாக்கி வெளியிட்டிருந்தார்.

இந்த வைரல் நிகழ்வின் முக்கிய தருணங்களை அந்த புளோசார்ட்டில் அழகாக படம் பிடித்திருந்தார். ஓவியம் எங்கிருந்து எங்கெல்லாம் பரவியது என்பதை உணர்த்திய இந்த வரைபடம், வரி வடிவத்தில் மட்டும் அல்லாமல், செய்தியை காட்சிமயமாக வெளியிடுவதன் அருமையையும் புரிய வைக்கிறது. (இதை ஒருங்கிணைவு இதழியலுக்கான (Convergence journalism ) உதாரணமாகவும் கருதலாம்). – https://nubleh.github.io/i_painted/old.html

இணைய நிகழ்வுகளை காட்சிமயமாக பகிர்வதற்கான இன்னொரு உதாரணமாக, இம்கூர் தளத்தில், இந்த நிகழ்வு ஜிப் ஆக்கமாகவும் பகிரப்பட்டது.- https://imgur.com/l5mXRKS

ஒரு இணைய நிகழ்வு எப்படி வைரலாகிறது, அழகிய மீமாகிறது என்பதை எல்லாம் உணர்த்தும் இந்த போக்கின் முழுமையான சித்திரத்தை பெற விரும்பினால், மீம்களின் இணைய களஞ்சியம் என கருதப்படும் நோ யுவர் மீம் (https://knowyourmeme.com/memes/slow-meme#fn4 ) தளம் இந்த மொத்த நிகழ்வின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை ஆதாரங்களோடு ஆவணப்படுத்தியிருக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.