Category Archives: ஐபோன்

உங்களுக்கு தேவையான செயலிகளை தேட உதவும் தேடியந்திரங்கள்.

இது ஸ்மார்ட்போன்களின் காலம்.ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் அவற்றின் நம் தேவைக்கேற்ற செயலிகளை (அப் எனப்படும் அப்ளிகேஷன்) டவுண்லோடு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.தினசரி நடவடிக்கைகளை திட்டமிடுவதில் துவங்கி புதிய விளையாட்டுக்களை ஆடி மகிழ்வது வரை எல்லாவற்றுக்குமான செயலிகள் இருக்கின்றன.இவற்றைத்தவிர தினமும் புதிய செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆப்பிலின் ஐபோனுக்கான செயலிகள்,ஆன்ட்ராய்டு போனுக்கான செயலிகள் டேப்லெட் கம்ப்யூட்டர்களுக்கான செயலிகள் என்று புதிய செயலிகள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த புதிய செயலிகளில் சில உங்கள் தேவையை தீர்த்து வைப்பதாக அல்லது உங்கள் பிரச்சனைக்கான தீர்வாகவோ இருக்கலாம். அட இதை தான் நான் எதிர்பார்த்திருந்தேன் என என்று நீங்கள் வியந்து போக கூடிய அருமையான புதிய செயலிகளை தொழில்நுட்ப தளங்களோ அல்லது உங்கள் நண்பர்களே அறிமுகம் செய்து வைக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்.நீங்களே புதிய செயலிகளில் உங்களுக்கு பயன் தரக்கூடியவற்றை தேடி கண்டுபிடித்து விடலாம். இதற்கு உதவுவதற்காக என்றே பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கின்றன. அப் எஞ்சின் என்று சொல்லப்படும் இந்த வகை செயலி தேடியந்திரங்களை பார்க்கலாம்:

 

1. மிம்வி.காம்(http://www.mimvi.com/ )

 

மிம்வியை தேடியந்திரங்களுக்கான கூகுல் என்று சொல்லலாம்.இதற்கு காரணம் இதன் முகப்பு பக்கமும் கூகுல் போலவே எந்த கவனச்சிதறலும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கிற‌து. அதில் உள்ள தேடல் கட்டத்தில் உங்களுக்கு எந்த வகையான செயலி தேவையோ அதற்கான கீவேர்டை டைப் செய்தால் தொடர்புடைய செயலிகளின் பட்டியல் தோன்றுகிறது.தேடல் பட்டியல் செயலியின் ஸ்கிரின்ஷாட்களோடு அவை பற்றிய விவரங்களை தொகுத்தளிக்கின்றன. குறிப்பிட்ட அந்த செயலி இலவசமானதா? கட்டணம் செலுத்த வேண்டியதா? போன்ற தகவல்களோடு அவற்றை டவுண்லோடு செய்து கொள்வதற்கான இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது கூகுல் போன்றது என்று சொன்னோம் அல்லவா? கூகுல் தேடல் முடிவுகளை அவற்றின் பொருத்தமான தனமைக்கேற்ப பட்டியலிடுவது போல இந்த தேடியந்திரமும் செயலிகளை அவை உங்கள் தேடலுக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறது என்பதன் அடிப்படையில் பட்டியலிடுகிறது. இதற்கான மதிப்பீடு புள்ளிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

 

புதிய செயலிகளை தேடும் போது கவனிக்க வேண்டிய விஷயம் நீங்கள் தேடும் செயலிகள் உங்கள் வசம் உள்ள ஸ்மார்ட்போன் வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது தான்.அதாவ‌து நீங்கள் வைத்திருப்பது ஆன்ட்ராய்டு போன் என்றால் ஆன்ட்ராய்டு செயலிகள் மட்டும் தான் உங்களுக்கு தேவை.ஐபோன் செயலிகளால ஏந்த பயனும் இல்லை. மிம்வியில் இதை நீங்கள் மிகவும் சுலபமாக தேர்வு செயது கொள்ளலாம். தேடல் பட்டியலின் மேலே ஐபோன்,ஆன்ட்ராய்ட்,விண்டோஸ் என வரிசையாக செயலி வ‌கைகள் குறிப்பிடப்ப்ட்டுள்ளன. அவற்றில் தேவையான பிரிவை கிளிக் செய்து கொண்டால் அந்த வகை செயலிகளை மட்டுமே பார்க்கலாம். இனையத்திற்கான செயலி பிரிவும் உள்ளது.

 

தோற்றம் தான் எளிதாக இருக்கிறதே தவிர இதன் செயல்பாடு சிறப்பாக இருப்பதை பயன்படுத்தி பார்க்கும் போது உணரலாம்.

 

2.குவிக்சே(https://www.quixey.com/ ) 

 

செயலிகள் உங்கள் தினசரி வாழ்க

புதிய ஐபோனை அறிந்து கொள்ள பத்து வீடியோ.

tim-cook-apple-iphone-840x420ஆப்பிலின் புதிய அறிமுகமான ஐபோன் 5எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? தொழிநுட்ப இணையதளமான மேக் யூஸ் ஆப் இது தொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுரைய வெளியிட்டுள்ளது.ஐபோன்5 தொடர்பான செய்திகளும் அதன் சிறப்பம்சம் மற்றும் குறைகளை அலசும் கட்டுரைகளும் இணயம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன.என்ன தான் ஆர்வத்தோடு படித்தாலும் ஐபோன் பற்றி முழு சித்திரம் கிடைக்காமல் குழப்பமாக தான் இருக்கும்! ஐபோன்5 சூப்பரா? ஏமாற்றமா? என்று தெளிவாக சொல்லிவிட முடியாது.

 ஆனால் மேக் யூஸ் ஆப்பின் இந்த‌ கட்டுரை ஐபோன் 5 குறை நிறைகள் தொடர்பான அலசலில் இறங்காமல் இந்த போனை புரிந்து கொள்ளக்கூடிய 10 யூடியூப் வீடியோக்களை மட்டும் அழகாக பட்டியலிட்டுள்ளது. ஒவ்வொரு வீடியோ பற்றியும் சுருக்கமான அறிமுகமும் இருக்கிற‌து.

முதல் வீடியோ ஐபோன் 5 அறிமுகம் தொடர்பான அறிமுகத்தின் கீநோட் உரையின் முன்னோட்டம். ( அடடா! ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாத ஆப்பில் கீநோட் உரையா?).அடுத்த வீடியியோ இந்த உரையின் முழுப்பகுதி.அடுத்த இரண்டு வீடியோக்கள் இரண்டு போன்களுக்கான முன்னோட்டம். இவையெல்லாம் ஆப்பில் தரப்பிலானவை.

இந்த கதை எல்லாம் வேண்டால் ஐபோன் 5 எப்படி? என்ற கேள்விக்கு சுயேட்சையான கருத்து தேவை என நினைத்தால்,கிறிஸ் பிரில்லோவ்ன் வீடியோ அதற்கு பதிலாகிறது. கிறிஸ் பிரில்லோ இணையத்தின் பிரபல் புள்ளி. தொழில்நுட்பம் தொடர்பான தகவல் மற்றும் பார்வைகளை த‌ரும் தனிநபர் ராஜ்யத்தை நடத்தி வருபவர். யூடியூப்பில் அவரது சானலுக்கு 2 லட்சம் சந்தாதாரரகள் இருக்கின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஐபோன் 5 பற்றி அதன் அறிமுகத்தின் போது அவர் நேரடியாக பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.

ஐபோனை ஆராதிக்க ஆயிரக்கணக்கில் அபிமானிகள் இருப்பது போல ஐபோனை பகடி செய்யவும் நிறைய பேர் இருக்கின்றனர். ஐபோன் 5ஐ கிண்டல் செய்து உருவாக்கப்பட்ட இரண்டும் அழகான வீடியோக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கால ஐபோன் எப்படி இருக்கும் என்னு பழைய வீடியோவையும் எடுத்து இந்த கட்டுரையில் இணைத்துள்ளனர்.சுவாரஸ்யமான தொகுப்பு.

என் பங்கிற்கு ஐபோ5 பற்றி தேடிப்பார்த்த போது ஐபிக்ஸிட் இணைப்பு கண்ணில் பட்டது. புதிய ஐபோனை பிரித்து மேய்ந்திருக்கின்றனர்.நிஜமகவே ஐபோனை பார்ட் பார்ட்டாக கழற்றி அதன் அம்சங்களை அல்சியுள்ளனர். இந்த தளத்தின் சிறப்பம்சமே இப்படி பிரித்து மேய்வது தான்.

http://www.makeuseof.com/tag/10-youtube-videos-exploring-the-new-iphone-5s-and-5c/

http://www.ifixit.com/Teardown/iPhone+5+Teardown/10525/1

காதலுக்கு கை கொடுக்கும் ஆப்.

loveapp

காதலிக்க விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அருமையான செயலி வுட்லவ் 2. காதலை நிராகரிப்பில் இருந்து விடுவிட்ட உதவுது தான் இந்த செயலியின் தனிச்சிறப்பு.

காதலுக்கு முன்பாக பரஸ்பர அறிமுக படலம் தேவை அல்லவா? மேலை நாடுகளில் இதை டேட்டிங் என்கின்றனர். நம்மூரில் கட‌லை போடுவது என் வைத்துக்கொள்ளலாம்.

டேட்டிங் செய்ய விரும்பும் நபர் தனக்கான துணையை விருப்பம் போல தேர்வு செய்யலாம்.ஆனால் , தேர்வு செய்யும் நபருக்கும் அந்த விருப்பம் இருக்க வேண்டுமே? நாம் டேட்டிங் வேண்டுகோளை வைக்கும் போது அந்த நபர் அதை நிராகரித்து விட்டால் என்ன செய்வது? இதனால் வருத்தமாகலாம்.மனது வலிக்கலாம். நிராகரித்தவர் நட்பு நோக்கில் மட்டுமே பழகியதாக தெரிய வந்தால் சங்கடமாகலாம்.

இப்படி காதலை தெரிவிக்கும் போது நிராகரிக்கப்படும் சங்கடத்தை இல்லாமல் செய்கிறது இந்த செயலி.எப்படி?

முதலில் இந்த செயலியில் செல் போனில் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு உங்கள் பேஸ்புக் தொடர்புகளை பதிவேற்றிக்கொள்ள வேண்டும்.அவர்களில் உங்களுக்கு யார் மீது விருப்பம் உள்ளதோ அவர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அவ்வளவு தான் அந்த நபர் உங்களுக்கான விருப்ப பட்டயலில் சேர்க்கப்படுவார்கள்.அதாவது இந்த செயலி அந்த பெயரை லாக்கரில் சேர்த்துக்கொள்ளும்.

இனி நீங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை. காத்திருப்பதை தவிர.

காத்திருப்பு கணிந்தால் செயலியே தகவல் தெரிவிக்கும். அதாவது நீங்கள் தேர்வு செய்த நபரும் உங்களை டேட்டிங் செய்ய விரும்புவதாக தேர்வு செய்திருந்தால் அந்த தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

இந்த மாயம் நிகழ அந்த நபரும் இந்த செயலியை பயன்ப‌டுத்த வேண்டும். அதைவிட பெரிய கஷ்டம் அவருக்கும் உங்கள் மீது ஈடுபாடு இருக்க வேண்டும்.இரண்டும் அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் நீங்கள் விருப்பத்தை தெரிவித்து அது முகத்தில் அடித்தார் போல் நிராகடிக்கப்படும் வாய்ப்பு இல்லை என்பதால் இதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளலாம். நாம் விருப்பம் தெரிவித்தவர் பதில் விருப்பம் தெரிவிக்க வில்லை என்றால் நமது விருப்பம் ரக்சியமாகவே இருந்துவிடும்.

காதல் சார்ந்த எளிமையான செயலி. முதலி ஐபோனுக்காக அறிமுகமாகியுள்ளது.அடுத்து ஆச்ட்ராய்டு வடிவம் வருகிறது.அமெரிக்கர்களை மனதில் கொன்டு வடிவமைக்கப்பட்டிருந்தாலும் காதல் சர்வதேச அளவிலானதாயிறே,நாமும் பயன்ப‌டுத்தலாம்.

காதலை சொல்லாமல் சொல்லிப்பார்க்க:<a href="http://www.wouldlove2.com/

“>http://www.wouldlove2.com/

நண்பர்களை ஆலோசனை கேட்க ஒரு செயலி

முடிவு எடுக்கும் விஷயத்தில் மற்றவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமே இல்லை என சர்வாதிகார தனமையோடு இருப்பவர்களும் உண்டு.அதற்கு மாறாக ஜனநாயகத்தனமையோடு எதை செய்தாலும் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் கருத்துக்களை அறிய முற்படுபவர்களும் இருக்கின்றனர்.

இரண்டு அணுகுமுறைகளிலுமே சாதக பாதக அமசங்கள் உண்டு.அது ஒரு புறம் இருக்க நண்பர்களை கலந்தாலோசித்து முடிவு எடுப்பது தான் சரி என நினைப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக என்றே ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆஸ்க் கிளவுடி என்னும் எந்த செயலி நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதை சுலபமாக்கி முடிவு எடுப்பதை எளிதானதாக ஆக்குகிறது.

புதிதாக செல்போன் வாங்கும் முன் எந்த மாடல் சிறந்தது என தெரிந்து கொள்ள நினைத்தாலோ அல்லது விடுமுறையை கழிக்க எந்த ஊருக்கு செல்லலாம் என்று தீர்மானிக்க விரும்பினாலோ அது குறித்து நண்பர்களின் கருத்துக்களை அறிய இந்த செயலியை பயன்படுத்தலாம்.

ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்ட பின் எப்போது தோழர்களின் கருத்துக்கள கேட்க விரும்பினாலும் இந்த செயலியை இயக்கி வைக்கலாம்.

உடனே இந்த செயலி ஒரு விசுவாசமான உதவியாளர் போல நண்பர்களுக்கு கேள்வியை அனுப்பி வைத்து அவர்களின் பதிலை பெற்றுத்தரும்.

பதில் சொல்வதற்கு நண்பர்களும் ஐபோன் வைத்திருக்க வேண்டும் என்றோ இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என்றோ கட்டாயம் இல்லை.எஸ் எம் எஸ் வசதி உள்ள எந்த போனில் இருந்தும் பதிலை அனுப்பி வைக்கலாம்.

கருத்துக்களை பரிசிலித்த பின்னர் என்ன முடிவு எடுத்தோம் என்பதையும் இந்த செயலி மூலமே நண்பர்களுக்கு தெரிவித்து விடலாம்.

உடனடியாக முடிவு எடுக்க நினைக்கும் நேரங்களில் நண்பர்களின் ஆலோசனை பெற இந்த செயலி உதவியாக இருக்கும்.

செயலி முகவரி;http://www.askcloudy.com/

செல்போனில் வரும் கனித ஆசிரியர்.

வீட்டு பாடம் செய்து கொண்டிருக்கும் போது நடுவே ச‌ந்தேகம் ஏற்பட்டால் யாரை கேட்பது என மாணவர்கள் இனி தலையை சொறிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.கையில் இருக்கும் செல்போனை எடுத்து எந்த பாடத்தில் என்ன சந்தேகம் என்பதை குறிப்பிட்டு உதவி தேவை என்று தெரிவித்தால் ஆசிரியர் ஒருவர் செல்போன் வழியேவே அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்துவார்.

இப்படி செல்போன் மூலமே கனிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய ச‌ந்தேகங்களை தெளிவுபடுத்தும் செல்போன் செயலியாக  மோடுட்டோ அறிமுகமாகியுள்ளது.

அந்த வகையில் செல்போனில் கிடைக்கும் டியூஷன் சேவை என்றும் இந்த செயலியை கருதலாம்.

ஐபோன் மற்றும் ஆன்ராய்டு போன்களில் செய‌ல்படக்கூடிய இந்த செயலியை மாணவர்கல் டவுண்லோடு செய்து கொண்டால் ,வீட்டு பாடங்களில் ஏதேனும் சந்தேகம் என்றால் உடனே இந்த செயலி வழியே அதனை குறிப்பிட்டு உதவி கோரலாம்.

இந்த செயலியிலேயே சந்தேகத்தை குறிப்பிடுவதற்கான வழி இருக்கிறது.விளக்கம் தேவைப்படும் பிரச்சனையை தெரிவித்து விட்டு அவசியம் என்றால் நோட்டு புத்தகத்தில் போட்டு பார்த்த கணக்கை வரைபடத்தோடு அப்படியே காமிரா மூலம் ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கலாம்.

எஸ் எம் எஸ் செய்திக்கு பதில் அளிப்பது போலவே தகுதி வாய்ந்த ஆசிரியர் ஒருவர் இந்த சந்தேகத்திற்கான விளக்கத்தை அளிப்பார்.மேலும் விளக்கம் தேவை என்றால் உடனடியாக அதையும் கேட்டுக்கொள்ளலாம்.

ஒரே நோட்டு புத்தகத்தில் கணக்கு போடுவது போல செல்போன் திரையிலேயே ஆசிரியரின் விளக்கத்தையும் பெறலாம்.அதாவ‌து எந்த இடத்தில் சந்தேகம் என்று சுட்டிக்காட்டினால் அதற்கு ஆசிரியர் தரும் விளக்கத்தை உடன்டியாக செல் திரையில் பார்க்கலாம்.

இந்த பாடங்களை சேமித்து வைத்து கொண்டு பின்னர் பயன்ப‌டுத்தி கொள்ளலாம்.சக மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள மாணவர்க‌ளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள செயலி என்றாலும் இதே போன்ற செயலியை நமது மாணவர்களுக்காகவும் உருவாக்கலாம்.

எல்லாமே செல்போனின் திரையை நோக்கி சென்று வரும் காலகட்டத்தில் வீட்டு பாடத்திற்கு உதவும் இந்த செயலி வரவேற்புக்குறியது தானே.

செயலி முக‌வரி;http://www.motuto.com/